என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கால்பந்து வீரர்"
- யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பேயர்ன் முனிச் அணியுடன் ஒரு தொடரில் விளையாடுவதற்காக தாமஸ் முல்லர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதில், ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் ஜெர்மனி தோல்வியடைந்தது.
இதனையடுத்து, அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி க்ராஸ் அறிவித்தார்.
டோனி க்ராசை தொடர்ந்து ஜெர்மனி அணியின் மற்றொரு முன்னணி வீரரான தாமஸ் முல்லரும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பேயர்ன் முனிச் அணியுடன் மேலும் ஒரு தொடரில் விளையாடுவதற்காக தாமஸ் முல்லர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் ஜெர்மன் அணிக்காக இனிமேல் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மெஸ்சியை நிழல் போல பின் தொடரும் அவரது பாதுகாவலரின் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
- வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் பொது இடங்களில் செல்லும் போது ரசிகர்கள் அவரை நெருங்க முயற்சிப்பது வழக்கம். சில நேரங்களில் ரசிகர்களுடன் மெஸ்ஸி புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால் அதில் சில ரசிகர்கள் அத்துமீறி அவர் மீது கைவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். எனவே இதை தடுப்பதற்காக மெஸ்சியின் பாதுகாவலர்கள் அவருடன் எப்போதும் செல்வார்கள்.
இந்நிலையில் மெஸ்சியை நிழல் போல பின் தொடரும் அவரது பாதுகாவலரின் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அவரது பெயர் யாசின் சூகோ. இவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடற்படை வீரராக அமெரிக்க ராணுவத்திற்காக பணியாற்றியவர். இவரை பற்றிய வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர், நீங்கள் உலகின் புகழ் பெற்ற நபராக இருந்தால்... நிச்சயம் உங்களை பிடிக்காத சிலரும் இருப்பார்கள். எனவே அனைவரும் உங்களை தொட அனுமதிப்பது மிகப்பெரிய ஆபத்தை தரும். எனவே மெஸ்ஸி தன்னை பாதுகாக்க இதுபோன்ற நபரை தேர்வு செய்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
- என் நாட்டுக்காக கடைசி ஆட்டத்தை விளையாடினேன்.
- ஜெர்மனி அணிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.
ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான நேற்றைய காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதைதொடர்ந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணியுடன் ஸ்பெயின் அணி பலப்பரீச்சை செய்ய உள்ளது.
இந்நிலையில், அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி க்ராஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "என் நாட்டுக்காக கடைசி ஆட்டத்தை விளையாடினேன், அணியைப் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஜெர்மனி அணிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது, வரும் காலங்களில் அவர்களை டிவியில் பார்ப்பேன்" என்று தெரிவித்தார்.
பிரபல ஜெர்மனி கால்பந்து வீரர் டோனி க்ராஸ், சர்வதேச போட்டியில் ஜெர்மனி அணிக்காக 108 ஆட்டங்களில் ஆடி 17 கோல்கள் அடித்துள்ளார்.
ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப்புக்காக 2014-ம் ஆண்டு முதல் டோனி க்ராஸ் விளையாடி வருகிறார். அந்த கிளப் 22 பட்டங்கள் வெல்வதற்கு அவர் உதவிகரமாக இருந்துள்ளார்.
- ரியல் மாட்ரிட் அணிக்காக 305 போட்டிகள் விளையாடி உள்ளார்.
- 14 ஆண்டுகளாக ஜெர்மனி கால்பந்து அணியில் விளையாடி வந்தவர் டோனி க்ராஸ்.
யூரோ 2024 தொடருக்கு பின் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜேர்மனி வீரர் டோனி க்ராஸ் அறிவித்துள்ளார். 14 ஆண்டுகளாக ஜெர்மனி கால்பந்து அணியில் விளையாடி வந்தவர் டோனி க்ராஸ் (34). ஜெர்மனி அணிக்காக இதுவரை 108 போட்டிகளில் விளையாடி க்ராஸ் 17 கோல்கள் அடித்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக 305 போட்டிகளும் (22 கோல்கள்), பாயர்ன் முனிச் அணிக்காக 130 போட்டிகளும் (13 கோல்கள்), பாயர் லெவேர்குசேன் அணிக்காக 43 போட்டிகளும் (10 கோல்கள்) விளையாடியுள்ளார்.
இவரது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் ரியல் மாட்ரிட் அணி UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி க்ராஸ் அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து க்ரூஸ் கூறியதாவது:-
ஜூலை 17, 2024-ல் ரியல் மாட்ரிட்டில் நான் அறிமுகமானது என் வாழ்க்கையை மாற்றிய நாள். ஒரு மனிதராகவும், கால்பந்து வீரராகவும் மாற்றியது. இது உலகின் பாரிய கிளப் அணியில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீஸனின் முடிவில் இந்த அத்தியாயம் முடிவடைகிறது.
என்னை திறந்த மனதுடன் வரவேற்று நம்பிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், அன்புள்ள மாட்ரிடிஸ்டாஸ், முதல் நாள் முதல் கடைசி நாள் வரை உங்கள் பாசத்திற்கும், உங்கள் அன்புக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
என அவர் கூறியுள்ளார்.
- கடந்த அக்டோபர் மாதம் தன் வீட்டிற்குள் 2 பேர் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர்
- கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபல வீரர் மெஸ்ஸியின் சொந்த ஊர்தான் எனது ஊர் எனக் கூறினேன்
இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் படையினர் கடந்த அக்டோபர் 7-ந் தேதி முதல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் காசா நகரில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
ஹமாஸ் படை தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,139 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் எஸ்தர் குனியோ (வயது 90) என்ற மூதாட்டி ஒருவர் சாதுர்யமாக உயிர் தப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதுகுறித்து எஸ்தர் குனியோ கூறியதாவது :-
கடந்த அக்டோபர் மாதம் தன் வீட்டிற்குள் 2 பேர் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது நான் அர்ஜென்டீனாவை சேர்ந்தவர் என கூறினேன். அதற்கு அர்ஜென்டினா என்றால் என்ன? என கேட்டனர்.
கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபல வீரர் மெஸ்ஸியின் சொந்த ஊர்தான் எனது ஊர் எனக் கூறினேன். அதனை கேட்டதும் அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் 'செல்பி' போட்டோ எடுத்தனர். மேலும் என்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டனர் என்று அவர் கூறினார்.
- இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல.
- கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பைக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.
மேற்கு ஜாவா:
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் பாந்துங் பகுதியில் சிலிவாங்கி ஸ்டேடியத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஒன்று நடந்தது.
அப்போது, விளையாட்டின் நடுவே சுபாங் நகரை சேர்ந்த செப்டேன் ரஹார்ஜா (வயது 35) என்ற வீரர் மீது மின்னல் ஒன்று கடுமையாக தாக்கியது. எனினும், அப்போது அவர் மூச்சு விட்டபடியே காணப்பட்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. அதில், செப்டேனை சரியாக மின்னல் தாக்கும் காட்சிகளும், உடனே அவர் விளையாட்டு களத்தில் சுருண்டு விழும் காட்சிகளும் உள்ளன.
அந்த மின்னல் ஸ்டேடியத்திற்கு 300 மீட்டர் உயரத்தில் இருந்தே தாக்கியுள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் பகுப்பாய்வு தெரிவித்து உள்ளது.
இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல. கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பைக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.
இதனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை நடந்த 20 நிமிடங்களுக்கு பின்னர் சுயநினைவுக்கு திரும்பினார்.
- விளையாட்டு ஒதுக்கீட்டில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.
- மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு ஹோஹ் துர்க்கை பகுதியை சேர்ந்தவர் குளத்திங்கல் ஷானு. கால்பந்து வீரரான இவர் கொச்சியில் தங்கியிருந்து தனியார் கிளப் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.
அதனை பயன்படுத்தி பிரபல கால்பந்து லீக் அணியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக காட்டிக்கொண்ட அவர், விளையாட்டு ஒதுக்கீட்டில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக கொட்டாரக்கரையை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிந்தனர். அதன்பேரில் நடத்திய விசாரணையில் வேலை வாங்கித் தருவதாக 300-க்கும் மேற்பட்டவர்களிடம் ஷானு கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது.
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கஜக்கூட்டம், பூஜப்புரா, கன்னியாபுரம், கொட்டாரக்கரை, கோட்ட யம் கிழக்கு, எர்ணாகுளம் சென்ட்ரல், மானந்தவாடி. ஹோஸ்துர்க், வெள்ளரிக் குண்டு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பல்வேறு வழக்குகள் பதியப்பட்டதால் அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ஷானு மும்பையில் பதுங்கியிருப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மும்பை சென்றனர். அங்கு புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக நடன பார் நடத்திய ஷானுவை கைது செய்தனர்.
பின்பு அவரை விசாரணைக்காக கேரளா அழைத்து வந்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படுகிறது.
- கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை விழுங்கியது.
கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை ஒன்று விழுங்கிவிட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவை சேர்ந்தவர் 29 வயதான இயேசு ஆல்பர்டோ லோபஸ் ஓர்டிஸ் என்ற கால்பந்து வீரர். தமது ரசிகர்களால் சுச்சோ என அறியப்படும் இவர், துரதிர்ஷ்டவசமாக முதலைக்கு இரையாகியுள்ளார்.
அந்த முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் அதிகாரிகளே துணிச்சலுடன் நடவடிக்கை முன்னெடுத்து, சடலத்தை மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இறுதிச்சடங்குகளை முன்னெடுக்க, பொதுமக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போட்டியின் போது மைதானத்தில் முஸ்தபா சைல்லா திடீரென கீழே விழுந்தார்.
- மாரடைப்பால் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
கோஸ்ட்:
ஐவரி கோஸ்ட் நாட்டில் அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டில் அந்நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் முஸ்தபா சைல்லா ரேசிங் கிளப் அணிக்காக விளையாடினார்.
இந்நிலையில், கோல் போஸ்ட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த முஸ்தபா சைல்லா திடீரென மைதானத்திலே கீழே சரிந்து விழுந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் முஸ்தபா சைல்லா மாரடைப்பால் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த வீரருக்கு வயது 21 ஆகும். கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து கால்பந்து வீரர் உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்