என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்கார் விருது"
- பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்'
- ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான பட்டத்தையும் ஷஹானா கோஸ்வாமி பெற்றார்.
பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்' . கடந்த ஆண்டு இந்த படம் வெளிநாடுகளில் வெளியானது. 'சந்தோஷ்' படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது.
இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.
கதை என்ன?
வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம், கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.

என்ன பிரச்சனை?
இந்நிலையில் படத்தில் உள்ள கருத்துக்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல பகுதிகளை வெட்ட தணிக்கை வாரியம் கோரியுள்ளது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்துள்ளதால் படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய படத்தின் ஹீரோயின் (பெண் போலீஸ் கதாபாத்திரம்) ஷஹானா கோஸ்வாமி. "படத்தை வெளியிடுவதற்குத் தேவையான சில மாற்றங்களின் பட்டியலை சென்சார் வழங்கியுள்ளது.
எங்கள் முழு குழுவும் அதனுடன் உடன்படவில்லை, ஏனென்றால் அவர்கள் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்கள், எனவே, இந்திய திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை.
இந்தியாவில் வெளியிட இவ்வளவு வெட்டுக்களும் மாற்றங்களும் தேவைப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அவர் பெற்றிருந்தார்.
படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான சந்தியா சூரி, சென்சார் குழுவின் முடிவை ஏமாற்றமளிப்பதாகவும் மனதை உடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "இது எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமான முடிவு, ஏனென்றால் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் இந்திய சினிமாவுக்குப் புதியவை என்றோ அல்லது இதற்கு முன்பு வேறு படங்களில் எழுப்பப்பட்டதில்லை என்றோ நான் நினைக்கவில்லை. சென்சார் வாரியம் வழங்கிய வெட்டுக்களின் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.
- இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.
- இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.
ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் தற்போது பாலஸ்தீன மேற்கு கரையில் (west bank) சட்டவிரோதமாக ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்த இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.
நோ அதர் லேண்ட் படத்தின் மற்றொரு இயக்குனர் யுவல் ஆபிரகாம் இந்த ததகவலை பகிர்ந்துள்ளார். "எங்கள் 'நோ அதர் லேண்ட்' படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பல்லால், இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது" என்று தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹம்தானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.

இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற நோ அதர் லேண்ட் படம், இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.
இந்த படத்தை மசாஃபர் யட்டாவைச் சேர்ந்த பால்ஸ்தீனிய இயக்குநர்கள் ஹம்தான் பல்லால் மற்றும் பாஸல் அட்ரா மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இயக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இயக்குநர் ஹம்தாம் பல்லா கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொன்றிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.
பயங்கரவாதிகள்(பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
- நமக்கு வரவேண்டிய ஆஸ்கார் விருதுகள் அபகரிக்கப்படுகின்றன.
- இந்திய சினிமா வரலாற்றில் நிறைய நல்ல படங்கள் வந்துள்ளன.
தமிழில் ரஜினியின் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான கல்கி 2898 ஏடி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்.
இந்த நிலையில் இந்திய படங்களுக்கு ஆஸ்கார் விருதுகள் கிடைக்காததற்கு தீபிகா படுகோனே வருத்தம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தீபிகா படுகோனே கூறும்போது, "இந்தியாவில் ஆஸ்கார் விருதுக்கு தகுதியான பல படங்கள் தயாராகி உள்ளன. ஆனால் அவற்றுக்கெல்லாம் ஆஸ்கார் விருது வழங்காமல் புறக்கணித்து விட்டனர்.
நமக்கு வரவேண்டிய ஆஸ்கார் விருதுகள் அபகரிக்கப்படுகின்றன. இந்திய சினிமா வரலாற்றில் நிறைய நல்ல படங்கள் வந்துள்ளன. அந்த படங்களுக்கும் அதில் நடித்த நடிகர் நடிகைகளின் திறமைகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அந்த நொடிகள் எனக்கு முக்கியமாக இருந்தது. அந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் ஒரு இந்தியராக அந்த வெற்றி மிகச்சிறந்ததாக தோன்றியது'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது.
- எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்தில் நடித்ததற்காக துணை நடிகர், துணை நடிகை விருது கிடைத்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிறந்த அனிமேஷன் படம் - பினோச்சியோ
சிறந்த துணை நடிகருக்கான விருது - கி ஹூ குவான் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
சிறந்த துணை நடிகை விருது - ஜேமி லீ கர்டிஸ்
சிறந்த ஆவணப் படம் - நாவல்னி
- தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை பாராட்டி கவுரவித்தேன்.
- உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"நாட்டு நாட்டு" பாடலின் மூலம் ஆஸ்கார் விருது வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை பாராட்டி கவுரவித்தேன். இன்று அவர்கள் ஆஸ்கார் விருது வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கும், பாடலாசிரியர் சந்திரபோசுக்கும், இயக்குனர் ராஜமவுலிக்கும், நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.
- 61 வயதாகும் ஜோடி ஃபாஸ்டர் பட தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர்
- ஜென் இசட்டிடம் ஒரு அலட்சிய போக்கு இருந்து வருகிறது என்றார் ஜோடி
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு கதாநாயகியாக உருவெடுத்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர், ஹாலிவுட் நடிகை ஜோடி ஃபாஸ்டர் (Jodie Foster).
தற்போது 61 வயதாகும் ஜோடி ஃபாஸ்டர், திரைப்பட தயாரிப்பாளராகவும் வெற்றி அடைந்தார்.
தனது நடிப்பிற்காக இரண்டு முறை உலக புகழ் பெற்ற ஆஸ்கார் விருதுகளை வென்றவர், ஜோடி ஃபாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக ஹாலிவுட்டில் செயலாற்றி வரும் ஜோடி ஃபாஸ்டர், தற்போதைய ஜென் இசட் (Gen Z) எனப்படும் 90களின் பிற்பகுதியிலிருந்து 2000 முற்பகுதி வரை பிறந்த ஆண்கள் மற்றும் பெண்களுடன் பணியாற்றுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
"ஜென் இசட் இளைஞர்களுடன் பணியாற்றுவது பல நேரங்களில் பெரிய தொந்தரவாக உள்ளது. நேரம் காப்பதில் அவர்களுக்கு ஒரு அலட்சிய போக்கு இருந்து வருகிறது. போட்ட திட்டப்படி பணியாற்ற வர வேண்டிய நேரத்திற்கு வராமல் அலட்சியமாக காரணம் சொல்கின்றனர். அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், ஏகப்பட்ட தவறுகள் இருக்கின்றன. அனுப்பும் முன்பாக சரிபார்க்கவில்லையா என கேட்டால், அதை காலவிரயம் என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். நாங்கள் வளர்ந்து போது எங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட முழு சுதந்திரம் அளிக்கப்படவில்லை. திரைப்படத்துறையில் கலைஞர்களாக வர விரும்பும் தற்கால இளைஞர்கள் தங்களின் சொந்த படைப்புகளையே கொண்டு வர முயற்சிக்க வேண்டும்" என ஜோடி தெரிவித்தார்.
- சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு... பாடல் பெற்றிருந்தது.
- இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது
ஆஸ்கார் விருதுகள் -2024 வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ' 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் பாடல் இந்த விழாவை அலங்கரித்தது.
பிரபல நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து நடனம் ஆடும் நாட்டு.. நாட்டு... பாடல் ஒளிபரப்பாகி ஆஸ்கார் விழாவை சிறப்பித்தது. ஏற்கனவே 2023- ம் ஆண்டில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு... பாடல் பெற்றிருந்தது.
இதன் மூலம் இந்திய பாடலுக்கு பெருமை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஆண்டும் ஆஸ்கார் விழாவில் இந்த பாடல் காட்சிகள் திரையில் காட்டப்பட்டது இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது.
தற்போது இது தொடர்பான 'வீடியோ 'எக்ஸ்' இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 2024 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது வாங்கிய முக்கிய திரைப்படங்கள்
- இரண்டாம் உலகபோரின் திசையை மாற்றிய அணுஆயுத கண்டுபிடிப்பை பற்றி பேசுகிறது.
2024 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது வாங்கிய முக்கிய திரைப்படங்கள்
சிறந்த படம் : ஓபன்ஹெய்மர்
கிரஸ்ட்டோபர் நோலன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த வெற்றி படம் பல சர்வதேச விருதுகளை வென்றது. விருதுகள் மட்டுமில்லாமல் வணிக ரீதியாக அந்த ஆண்டின் மிக பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை படைத்து குறிப்பிடத்தக்கது
ஓபன்ஹெய்மரின் உண்மை வாழ்க்கையை பின்தொடரும் இந்த படம், இரண்டாம் உலகபோரின் திசையை மாற்றிய அணுஆயுத கண்டுபிடிப்பை பற்றி பேசுகிறது. ஆராய்ச்சியாளர் ஓபன்ஹெய்மராக நடித்தது ஹாலிவுட் ஸ்டார் Cillian Murphy. இவர் ஏற்கனவே பல திரைப்படங்கள் மற்றும் புகழ் பெற்ற நெட்ப்ளிக்ஸ் தொடரான பீக்கி ப்லன்டர்ஸ்லில் நடித்து குறிப்பிடத்தக்கது.
அணுஆயுத கண்டுபிடிப்பின் முன் பின் என்று இருவேறு காலகட்டமாக காட்டப்படும் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை தான் இந்த முழுப்படமே. இந்த படத்தின் மூலம் கிரஸ்ட்டோபர் நோலனுக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதும், Cillian Murphyயுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதும் வழங்கப்பட்டது கூடுதல் சிறப்பு. இந்த படத்தை தற்போது ஜியோ ottயில் கண்டுகளிக்கலாம் .
சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரீன்ப்ளே: Anatomy of a Fall
2023ஆம் ஆண்டு வெளியான இந்த பிரெஞ்சு திரைப்படம், பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளை குவித்தது.
Justine Triet எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளி வந்த இந்த படம், ஒரு courtroom டிராமா. கதாநாயகி சன்றா தன் கணவனை கொன்ற வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட. உண்மையில் அவள் கொன்றாலா இல்லை அது ஒரு விபத்தா என்பதே மீதி கதை.
சன்றாவின் மன போராட்டம் முக்கிய சாட்சியாக அவர்கள் மகனே வாக்கு மூலம் கொடுக்க வேண்டிய கட்டாயம் என்று டிராமா கலந்து விறுவிறுப்பாக செல்லும் திரைப்படமே இந்த அனாடமி ஒப் தி பால். இந்த படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்த்து ரசிக்கலாம்.
சிறந்த Adapted Screenplay: American Fiction
Erasure என்ற 2001 ஆம் வெளிவந்த நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமே அமெரிக்கன் பிக்சன். இந்த படத்திற்கு 2024கின் சிறந்த adapted screenplayவிற்கான ஆஸ்கார் வழங்கப்பட்டது அமெரிக்க வாழ் ஆப்ரிக்க மக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை கார்ட் ஜெபர்சன் இயக்கி உள்ளார். அமெரிக்காவில் வாழும் ஒரு ஆப்ரிக்கா எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகள் மீது வரும் விமர்சனமும் அதனால் வரும் அவனுக்கு ஏற்படும் சம்பவங்களே இந்த படம்..
கதாநாயகன் எல்லிசன் அவனுடைய புத்தகங்களை விமர்சனத்திற்கு ஏற்ப மாற்றி எழுத நினைக்கிறான். அது ஆப்ரிக்கா மக்களை எவ்வாறு இந்த உலகம் பார்க்க நினைக்கிறது என்பதை நோக்கி செல்கிறது.. ஆப்ரிக்க மக்கள் மீது இருக்கும் திணிப்பு மற்றும் அடக்கு முறையை காமெடியாக கூறும் இந்த படம் ஒரு மஸ்ட் வாட்ச் என்றே சொல்லலாம். இந்த படம் தற்போது அமேசான் prime வீடியோவில் உள்ளது.
சிறந்த அனிமேடட் திரைப்படம்
தி பாய் அண்ட் தி ஹெரான் ஒரு ஜப்பானிய திரைப்படமாகும். இப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ஹயோ மியாசகி என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் தாய் இறந்தப்பின் மகன் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் ஓர் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு டவரிடம் செல்கிறான் அதில் நுழைந்தப்பின் வேறு உலகத்திற்கு செல்கிறான். இதற்கு அடுத்து என்ன ஆனது என்பதை மையமாக வைத்து உருவான கதைக்களமே இப்படம். இத்திசரைப்படம் பல சரவதேச திரைப்படத விழாக்களில் விருதை வென்றது அது மட்டுமல்லாமல் சிறந்த 2024 அனிமெடட் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை இப்படம் வென்றது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.