என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விளையாட்டு தின விழா"
- போட்டிகளில் நீல நிற அணி அதிக புள்ளிகள் பெற்று ஓவர் ஆல் சாம்பியன் சுழற்கோப்பையினை வென்றது.
- விழா நிகழ்வுகளை மாணவர்கள் பெரிஸ் மத்தியூ மற்றும் அத்வெய்தா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு தின விழா கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் விளையாட்டு தின நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என குழுவாக கொடி அணிவகுப்பு நடத்தினர். மாணவர்கள் உடற்பயிற்சி நடனம், பாம்-பாம் நடனம், டம்பில்ஸ் நடனம், ஏரோபிக் பந்து நடனம் மற்றும் லெசீம் நடனம் ஆடி மகிழ்வித்தனர்.
குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜேஷ் விழாவில் பங்கேற்று விளையாட்டு தின கொடியேற்றினார்.
போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த 345-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சர்வதேச தடகள பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி பிரிட்டோ ஜாய் கோப்பைகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். போட்டிகளில் நீல நிற அணி அதிக புள்ளிகள் பெற்று ஓவர் ஆல் சாம்பியன் சுழற்கோப்பையினை வென்றது.
முதல்வர் டாக்டர் பீட்டர் ஆன்டணி சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர் ஆன்டணி, விளையாட்டு அணி தலைமை மாணவன் ஆதில் பெலிக்ஸ், மாணவிகள் வம்ஷிகா, அதிதி சந்திரசேகர், மெலிட்டா விக்ட்டி உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் தலைமையில் நிர்வாக அதிகாரி டெல்பின், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆன்டணி, சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
விழா நிகழ்வுகளை மாணவர்கள் பெரிஸ் மத்தியூ மற்றும் அத்வெய்தா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
- வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை விடுத்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க விளையாட்டு முக்கியமாகும்.
- விளையாட்டிற்கு முடிவு என்பதே இல்லை. வேலைக்குச் சென்றாலும் சிறிது நேரமாவது நேரம் ஒதுக்கி விளையாட வேண்டும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், விளையாட்டு தின விழா, கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத் தலைமை தாங்கினார். இதில் அதியமான் கல்விக்குழும நிறுவனர் டாக்டர் தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு வாழ்த்திப்பேசுகையில், வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை விடுத்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க விளையாட்டு முக்கியமாகும்.
விளையாட்டிற்கு முடிவு என்பதே இல்லை. வேலைக்குச் சென்றாலும் சிறிது நேரமாவது நேரம் ஒதுக்கி விளையாட வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் வாழ்க்கையும் ஆரோக்கியமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், சிறப்பு விருந்தி னராக உலககோப்பை கால்பந்து மற்றும் ஒலிம்பிக் போட்டி முன்னாள் நடுவர் சங்கர் கோமலேஸ்வரன் கலந்துகொண்டு பேசுகையில்,"ஒவ்வொரு துறை வெற்றிக்கும் விளை யாட்டே முக்கியமானதாகும்.
குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே விளையாட்டு என்பது இல்லை. மருத்துவரை விட விளையாட்டுத்துறையில் தான் அதிக வருமானம் உண்டு.
உடல் தகுதியிருந்தால் தான் மன ஆரோக்கியமாக இருக்கும். மன ஆரோக்கியமே வாழ்வின் வெற்றியாகும். மேலும், மாலை நேரங்களில் சிறிது நேரமாவது விளையாடுவது, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றார்.
விளையாட்டுத்துறை சார்பில், விளையாட்டுத் துறை இயக்குநர்கள் ஆண்டறிக்கை வாசித்து, மாணவர்கள் நிகழ்த்திய சாதனைகளைப் பட்டிய லிட்டு காட்டினர். தொடர்ந்து, மாநில அளவிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கப் பட்டன.
இதில், எம்.ஜி.ஆர்.கல்லூரி முதல்வர் முத்துமணி, அதியமான் தொழில் நுட்பக்கல்லூரி முதல்வர்கள், அனைத்துத் துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர். விழா விற்கான ஏற்பாடுகளை, கல்லூரி நிர்வாகம் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் செய்திருந்தனர்.
- விளையாட்டு தின விழாவில் பல்வேறு போட்டிகள் நடந்தன.
- 3 ஆண்டுகள் போட்டிகள் நடைபெறாமல் இந்த ஆண்டு நடந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு தினவிழா போட்டிகள் நடந்தன. தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பாட்டிலில் நீர் நிரப்புதல், தவளை ஓட்டம், நொண்டி அடித்து ஓட்டம், மியூசிக்கல் சேர், ஓட்டப் பந்தயம், ஊசி நூல் கோர்த்து ஓட்டம், சாக்கு ஓட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், லெமன் ஸ்பூன் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பரிசுகள் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை மேடையில் நிறுத்தி கை தட்டி பாராட்டினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். கொரோனா காரணமாக 3 ஆண்டுகள் போட்டிகள் நடைபெறாமல் இந்த ஆண்டு நடந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்