என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தா மோ அன்பரசன்"
- பிறந்த நாளை மக்கள் பயன்பெறும் வகையிலும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
- திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.
சென்னை:
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மார்ச்-1 முதல் மார்ச் 25-ந் தேதி வரை தொடர்ந்து பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச்-1 வருகிறது. அவரது பிறந்த நாளைமக்கள் பயன்பெறும் வகையிலும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
மார்ச்-1 முதல் மார்ச் 25 வரை மாவட்டம் முழுவதும் தொடர் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. 1-ந் தேதி காலை அனைத்து கிளைக் கழகங்களிலும் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படும். அன்று பகல் 12 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 37 ஆதரவற்றோர் இல்லங்களிலும் அறுசுவை உணவு வழங்கப்பட உள்ளது. பரனூர் தொழு நோயாளிகளுக்கு உணவு, உடை வழங்கப்பட உள்ளது.
மார்ச்-1 அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காலை 10 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும், பல்லாவரம் வடக்கு பகுதி தி.மு.க. சார்பில் பகல் 12 மணிக்கு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. மார்ச் -2ந் தேதி திண்டுக்கல் லியோனி பொதுக்கூட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி, 3-ந் தேதி கம்பம் செல்வேந்திரன் கந்திரி கரிகாலன், செங்கல்பட்டு நகரம், 4-ந் தேதி நாஞ்சில் சம்பத், செங்கை தாமஸ்-ஆலந்தூர் தெற்கு பகுதி.
5-ந் தேதி சுப.வீர பாண்டியன், வெ.அன்புவாணன்-குன்றத்தூர் தெற்கு ஒன்றியம், 6-ந் தேதி புதுக்கோட்டை விஜயா ஆரணி மாலா- ஸ்ரீபெரும்புதூர், 7-ந் தேதி கோவி செழியன், மலர் மன்னன், பம்மல் தெற்கு பகுதி, 8-ந் தேதி நெல்லிக் குப்பம் புகழேந்தி, பிரபாகரன்- திருப்போரூர் தெற்கு ஒன்றியம், 9-ந் தேதி சபாபதி மோகன், ஒப்பிலா மணி- செம்பாக்கம் வடக்கு, 10-ந் தேதி ஈரோடு இறைவன் தேவபாலன்-செம்பாக்கம் தெற்கு.
11-ந் தேதி சைதை சாதிக், அரங்கநாதன்-மறைமலை நகர், 12-ந் தேதி தமிழன் பிரசன்னா, செங்கை சந்தானம்-பல்லாவரம் தெற்கு, 13-ந் தேதி ராஜீவ் காந்தி, பரிதி இளம் சுருதி- ஆலந்தூர் வடக்கு, 14-ந் தேதி மதிவதனி, கவிஞர் நன்மாறன்-குன்றத்தூர் 15ந் தேதி குத்தாலம் கல்யாணம், போடிகாமராஜ்-திருக்கழுக்குன்றம், 16-ந் தேதி கரூர் முரளி, சிவா, - காட்டாங்குளத்தூர், 17-ந் தேதி சேலம் சுஜாதா, நாகம்மை- தாம்பரம் கிழக்கு, 18-ந் தேதி காரமடை நாக நந்தினி, குடியாத்தம் புவியரசி-கண்டோன் மென்ட். 19-ந் தேதி கவிஞர் தமிழ்தாசன், தமிழ் சாதிக்- பம்மல் வடக்கு 20-ந் தேதி சைதை சாதிக், எழும்பூர் கோபி-குன்றத்தூர் நகரம். 21-ந்தேதி ஈரோடு இறைவன், காம்ராஜ்- ஸ்ரீபெரும்புதூர், 22-ந் தேதி ராஜீவ் காந்தி, முரசொலி மூரத்தி-மாங்காடு 23-ந் தேதி தமிழன் பிரசன்னா- திருவொற்றியூர் கருணா நிதி-காட்டாங்குளத்தூர், 24-ந் தேதி கான்ஸ்டைன் ரவீந்திரன், தாம்பரம் ஜின்னா ஸ்ரீபெரும் புதூர், 25-ந் தேதி கோவி செழியன், வண்ணை புகாரி-புனித தோமையார் மலை ஒன்றியம்.
பொதுக்கூட்ட மேடைகளில் ஆங்காங்கு உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளும் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.
- பொதுக் கூட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிகச்சிறப்பாக எழுச்சியோடு ஏற்பாடு செய்துள்ளார்.
- கல்வியில் நாம் ஏற்கனவே மிகப்பெரிய சாதனை செய்து கொண்டிருக்கிறோம்.
சென்னை:
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்லாவரம் கண்டோன்மெண்டில் மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இந்த வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிகச்சிறப்பாக எழுச்சியோடு ஏற்பாடு செய்துள்ளார்.
ஆண்களுக்கு நிகராக, ஆண்களைவிட அதிகமாக, தாய்மார்கள், பெண்கள் பங்கேற்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
மொழி உரிமைதான் மாநில உரிமை.
இன்றைக்கு என்னென்ன வழிகளில் இந்தி சமஸ்கிருதத்தை திணிக்க முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஒன்றிய அரசு மொழி திணிப்பை மேற்கொண்டு வருகிறது.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிவிட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் மக்கள் அதை நம்பவேமாட்டார்கள். எனவே அ.தி.மு.க. பா.ஜ.க.வை விரட்டியடிக்க வேண்டும். 2024 மக்களவை தேர்தலில் 2 கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
கல்வியில் நாம் ஏற்கனவே மிகப்பெரிய சாதனை செய்து கொண்டிருக்கிறோம். இந்தி பாடம் இல்லாமலேயே இதையெல்லாம் நாம் சாதித்து காட்டியிருக்கிறோம்.
இந்தி திணிப்பை போலவே இப்போது நீட் நெக்ஸ்ட் என்று அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழ்நாட்டிற்குள் திணிக்கிறார்கள். இதை மாற்றிக்காட்டுவோம்.
2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெல்லச் செய்வோம்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் பொதுக் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பொதுக் கூட்டம் நடைபெற்ற இடம் மட்டுமின்றி பக்கத்து ரோடுகளிலும் கூட்டம் அலை மோதியது.
- தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7,8 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.
- கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் வெல்கம் ஓட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7,8 -ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீடுகள் மாநாட்டின் முன்னோடியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவர் ராமு ஜிஜேந்திரன் (ஜி ஜி), தனது தொழில் முதலீட்டாளர் ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டார். நிகழ்ச்சியில் எம். எல். ஏ.க்கள்
வரலட்சுமி மதுசூதனன், மு.பாபு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங் மற்றும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், உதவி இயக்குனர் கார்த்திக், தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மாவட்ட பிரதிநிதி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஓட்டு கேட்க குறைந்தபட்சம் 21 பேர் முதல் அதிகபட்சம் 31 பேர் வரை தி.மு.க. நியமித்து வைத்துள்ளது.
- வாக்குச்சாவடி முகவர்களை மண்டல வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அறிவுரை வழங்கி வருகிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் அமர்ந்து பணியாற்ற தி.மு.க.வில் பூத் ஏஜெண்டுகள் (முகவர்கள்) இப்போதே தயாராக உள்ளனர்.
இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தகுதியான நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து (பி.எல்.ஏ.2) வைத்துள்ளனர்.
அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்க குறைந்தபட்சம் 21 பேர் முதல் அதிகபட்சம் 31 பேர் வரை தி.மு.க. நியமித்து வைத்துள்ளது.
இந்த வாக்குச்சாவடி முகவர்களை மண்டல வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அறிவுரை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே திருச்சி, ராமநாதபுரம், காங்கேயம், திருவண்ணாமலையில் கூட்டம் நடந்த நிலையில் இப்போது திரு வள்ளூரில் நவம்பர் 5-ந்தேதி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 11 தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் 11,569 முகவர்களுடன் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க குன்றத்தூரில் நேற்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் காஞ்சி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்களில் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அனைவரையும் அந்தந்த பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் திருவள்ளூரில் நடைபெறும் பயிற்சி பாசறை கூட்டத்திற்கு வாகனங்கள் மூலம் திருவள்ளூருக்கு அழைத்து சென்று பங்கேற்க செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் ஒருபகுதி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இடிந்தது.
- அங்கிருந்தவர்கள் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர், அருவாகுளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் ஒருபகுதி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இடிந்தது.
இதைத்தொடர்ந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளும் இடிக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அந்த பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் தற்போது ரூ59.77 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிக்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டினார். இதில் மேலாண்மை இயக்குநர் சங்கர், கலாநிதி வீராசாமி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி. சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, கவுன்சிலர் உமாசரவணன், அவை தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நடப்பு ஆண்டு மாவட்ட தொழில் மைய அலுவலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை அடைய வேண்டும்.
- முதல்வரின் சமச்சீர் பொருளாதாரத்தினை செயல்படுத்துவதில் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது.
சென்னை:
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் இன்று சிட்கோ தலைமை அலுவலக கூட்ட அரங்கில் தொழில் வணிக ஆணையரகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
"இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ரூ.770 கோடி மானியத்துடன், ரூ.2,134 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, அதன் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 28,102 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர்.
நடப்பு ஆண்டு மாவட்ட தொழில் மைய அலுவலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை அடைய வேண்டும். அதே வேளையில், மகளிர், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்தவர்களும், தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்.
முதலீட்டு மானியம், ஊதிய பட்டியல் மானியம், பின் முனை வட்டி மானியம் போன்ற 10 வகை மானியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றினை குறித்த காலத்தில் எந்த காலதாமதமும் இன்றி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
முதல்வரின் சமச்சீர் பொருளாதாரத்தினை செயல்படுத்துவதில் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. அதனை செயல்படுத்தும் விதமாக எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்கள் மற்றும் கடனுதவிகளை உரிய நேரத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிறு தானியங்கள் அற்புத ஊட்டச்சத்து உறைவிடம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிறு தானியங்கள் அற்புத ஊட்டச்சத்து உறைவிடம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ரகுமான் தலைமை தாங்கினார். செல்வம் எம்.பி., செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, முன்னிலை வகித்தனார். மாவட்ட உணவு வழங்கல் துறை அலுவலர் வரவேற்புரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக சிறு தொழில் துறை நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் மறைமலை நகராட்சி நகர மன்ற தலைவர் சண்முகம், வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன், ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்தமிழ் செல்வி விஜயராஜ், பவானி கார்த்தி, வானதி சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தொழிற்பேட்டையினை ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஆர்வம்மிக்க தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
- தொழிற்பேட்டை 65 தொழில் மனைகளுடன் வரும் 6 மாத காலத்திற்குள் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
சென்னை:
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் ஒரத்தநாடு தொகுதியில் நெல், வேர்க்கடலை, கரும்பு ஆகியவை விளைவிக்கப்படுவதால், மூலப்பொருட்களாக அதனை கொண்டு செல்ல சிறு தொழில் புரிய தொழிற்பேட்டை அமைக்கப்படுமா? என ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியில் புதிய தொழிற்பேட்டைக்கு தேவைப்படும் நிலம் குறித்து மாவட்ட நிர்வாகத் திடம் விவரம் கோரியதில், அந்த பகுதியில் தகுதியான அரசு நிலங்கள் ஏதும் இல்லை என 13.08.2021 நாளிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரத்தநாட்டில் இருந்து 40 கி.மீ தொலைவில் பாளையப்பட்டியில் 204 தொழில் மனைகளுடன் தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது 15 தொழில் மனைகள் காலியாக உள்ளதால் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தொழில் முனைவோர்கள் தொழில் துவங்க முன்வரும் பட்சத்தில் இத்தொழிற் பேட்டையில் தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஆர்வம்மிக்க 20 தொழில்முனைவோர்கள் 50 ஏக்கர் நிலத்துடன் தனியார் தொழிற்பேட்டை அமைக்க முன்வரும் பட்சத்தில், உள்கட்டமைப்பு வசதிகளுக்காக, அரசு அதிகபட்சமாக ரூ. 15 கோடி வரை மானியம் வழங்கப்படும்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றப்பின், திருவாரூர் மாவட்டத்தில், முதன்முறையாக ஒரத்தநாட்டில் இருந்து 50 கி.மீ தொலைவில் நன்னிலம் வட்டம், வண்டாம் பாளை கிராமத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட தொழிற்பேட்டை 65 தொழில் மனைகளுடன் வரும் 6 மாத காலத்திற்குள் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இந்த தொழிற்பேட்டையினை ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஆர்வம்மிக்க தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை இல்ல விழாவாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை:
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் குன்றத்தூரில் நடைபெற்றது. தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. சிறப்புரையாற்றினார். மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., து.மூர்த்தி, விசுவநாதன் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். பின்னர் கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி அவர் பேசியதாவது:-
தமிழக அரசின் நிர்வாக வரலாற்றில் பொற்கால ஆட்சியை தந்து விண்முட்டும் சாதனைகளால் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்று, கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றி சரித்திரம் படைத்த மறைந்தும், மறையாமல், தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் கருணாநிதி, இந்திய அரசியல் வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற அவரது நூற்றாண்டு விழா வரும் ஜூன் 3-ந்தேதி தொடங்குகிறது.
இந்த விழாவை வருகிற ஜூன் 3-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 3-ந்தேதி வரை ஓராண்டு காலம் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் தொண்டர்களின் இல்லவிழாவாக கோலாகலமாக கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வில் 1 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி நமது மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போருர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில், தொகுதிக்கு 50 ஆயிரம் என மொத்தம் 3 லட்சம் புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்திடும் பணியில் அனைவரும் முனைப்புடன் செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அடங்கியுள்ள 2,374 வாக்குச்சாவடிகளுக்கும் 100 வாக்காளர்களுக்கு ஒரு தேர்தல் பணிக்குழு உறுப்பினர் என தேர்தல் மணிக்குழுவை அமைத்து பூர்த்தி செய்யப்பட்ட அப்படிவங்களை வருகிற ஏப்ரல் 5-ந்தேதிக்குள் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.
- பணக்காரர், ஏழை வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதை செயல்படுத்துவது தான் இந்த அரசு.
- பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
சென்னை:
குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் படப்பை ஊராட்சி தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா படப்பை பஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தா.மோ. அன்பரசன் சிறப்புரையாற்றினார்கள்.
அமைச்சர் எ.வ. வேலு பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்துவதாக தெரிவித்தார்.
திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று எல்லோரும் கேட்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். பணக்காரர், ஏழை வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதை செயல்படுத்துவது தான் இந்த அரசு.
திராவிட மாடல் ஆட்சியில் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடிந்தது. தமிழகத்தில் பசி ஆற்றும் தாயார் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸடாலின் கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் படிப்படியாக கட்சி பதவிக்கு வந்து ஆட்சியை பிடித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படியா வந்தார். 10 வருடம் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டார்கள். உணவு உற்பத்தியை பெருக்க எந்த திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் 210 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி சாதனை படைத்து விட்டார். காலை சிற்றுண்டி உள்பட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கி உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை பறக்கும் ரெயில்திட்ட பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் செல்ல தயார் நிலையில் உள்ளது.
- ரெயில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
ஆலந்தூர்:
ஆலந்தூர் மண்டலம் சார்பில் ரூ.50 கோடியே 89 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. மண்டல குழு தலைவர் என். சந்திரன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை பறக்கும் ரெயில்திட்ட பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் செல்ல தயார் நிலையில் உள்ளது. இன்னும் 3 முதல் 4 மாதத்திற்குள் பரங்கிமலை வரை முழுவதுமாக கட்டி முடிக்கப்படும். வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஆலந்தூர் மண்டல அலுவலர் பாஸ்கரன், வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், நடராஜன், ஆலந்தூர் மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதாபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்