என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாங்காய்"
- வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்த உதவும்.
- மாங்காயில் இருக்கும் அமிலத்தன்மை செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.
பழுத்த மாம்பழங்களை விட மாங்காயில் வைட்டமின் சி மற்றும் அமிலத்தன்மை அதிகம் இருக்கிறது. அத்துடன் நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. செரிமான ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதற்கும், குடல் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டுக்கும் நார்ச்சத்து அவசியமானது.
வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்த உதவும். மேலும் மாங்காயில் இருக்கும் அமிலத்தன்மை செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் மற்றும் இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் அவை கொண்டிருக்கின்றன.
- செரிமானம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் மாங்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
- இனிப்பு பண்டங்களை விருப்ப தேர்வாக கொண்டவர்களுக்கு மாற்றுத்தேர்வாகவும் இது அமையும்.
* பழுத்த மாம்பழங்களை விட மாங்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவர்கள் உணவில் மாங்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
* பழுத்த மாம்பழங்களில் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளின் அளவு அதிகம் இருப்பதால் அதிக நன்மை பயக்கும். அதனால் ஆன்டி ஆக்சிடென்டுகள் சார்ந்த குறைபாடு கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிடுவது சிறந்தது.
* மாங்காய் மற்றும் மாம்பழம் இரண்டிலுமே நார்ச்சத்து இருக்கிறது. இருப்பினும் செரிமான ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் தன்மை மாங்காயில்தான் அதிகம் இருக்கிறது. அதனால் செரிமானம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் மாங்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
* சுவையை விரும்புபவர்களுக்கு மாம்பழங்கள் சிறந்த தேர்வாக அமையும். இனிப்பு பண்டங்களை விருப்ப தேர்வாக கொண்டவர்களுக்கு மாற்றுத்தேர்வாகவும் இது அமையும்.
மாம்பழம், மாங்காய் இரண்டுமே உடலுக்கு நன்மை சேர்க்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. எனினும் நீரிழிவு உள்ளிட்ட இணை நோய் கொண்டவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்படி இவற்றை உட்கொள்வது நல்லது.
- இந்த வருடம் மா விளைச்சல் குறைவு என விவசாயி வேத னையுடன் தெரிவித்தார்.
- மாமர த்துக்கு செலவு செய்த பணம் கூட கைக்கு வரவில்லை.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு மா மரங்கள் அதிகமாக காணப்படுகிறது.
தற்போது மாங்காய் சீசன் துவங்கி உள்ள நிலையில் காவேரிப்பட்டணம் மாங்காய் மண்டிகளுக்கு இருசக்கர வாகனம், டாட்டா ஏஸ், டிராக்டர், மாட்டுவண்டி உள்ளிட்ட வாகனங்களில் மாங்காய் மண்டிகளுக்கு விவசாயிகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வருடம் மா விளைச்சல் குறைவு என விவசாயி வேத னையுடன் தெரிவித்தார். மேலும் அதற்குரிய விலை கிடைக்கவில்லை. மாமர த்துக்கு செலவு செய்த பணம் கூட கைக்கு வரவில்லை என்று வேதனையுடன் தெரிவி த்தார்.
செந்தூரா, பையண ப்பள்ளி அல்போன்சா, பெங்க ளூரா, நீளம் உள்ளிட்ட மா வகைகள் தற்போது வரத் துவங்கியுள்ளது.
தற்போது ஒரு கிலோ செந்தூரா -25, பையண பள்ளி -25, அல்போன்சா -45, சக்கரக்குட்டி- 40, நீளம் -25, பெங்களூரா- 20 விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து மா வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் கேசவன் கூறியதாவது கடந்த வருடத்தை ஒப்பிடும் பொழுது இந்த வருடம் மாங்காய் விளைச்சல் 15 சதவீதம் குறைவு.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் ஈரோடு, திருவண்ணாமலை, கோயம்புத்தூர் சென்னை போன்ற இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
இந்த வருடம் மாங்கூழ் தொழிற்சாலையில் இருந்து இந்த வருடம் எங்களுக்கு ஆர்டர் இதுவரை வரவில்லை. அதனால் மாங்காய் விலை மிகவும் குறைவாக உள்ளது. தற்பொழுது தான் மாங்காய் சீசன் துவங்கி உள்ளது. போகப்போக தான் விலை ஏற்றம் இருக்குமா இல்லையா என்று தெரியவரும் என கூறினார்.
- 2000 ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர்.
- சீசன் காலங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 60 முதல் 70டன் மாங்காய் கிடைக்கும்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தென்னை, கரும்பு ,மக்காச்சோளம் சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிகளவு மாங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிப்பட்டி , வாளவாடி, மானுப்பட்டி, சின்ன குமாரபாளையம் ,கொழுமம், கொங்குரார் குட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் 2000 ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர்.
மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் மாமரத்தில் பூ பிடித்து காய்க்கத் துவங்கும். இந்த ஆண்டு பூ பிடித்த நிலையில் நோய் தாக்குதல் காரணமாக பூக்கள் உதிர்ந்து வருகின்றன.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- சீசன் காலங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 60 முதல் 70டன் மாங்காய் கிடைக்கும். ஆனால் தற்போது கொத்துக்கொத்தாக பூக்கள் உதிர்ந்து வருகின்றன.சுமார் இரண்டு டன் பூக்கள் வரை உதிர்ந்துவிட்டன. இதனால் விளைச்சல் பாதித்து எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் .ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம் .ஆண்டுக்கு ஒரு முறை சீசன் காலங்களில் விளையும் மாங்காய் மூலம் தான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. பூச்சி தாக்குதல் குறித்து தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஏற்கனவே காட்டு யானைகள் தொல்லை உள்ளது. மாமரத்தில் பிஞ்சு பிடித்த உடன் அதன் வாசத்தை மோப்பம் பிடித்து வரும் யானைகள் பிஞ்சுகளை பெருமளவுக்கு தின்று விடும். இந்த நிலையில் நோய் தாக்குதல் ஏற்பட்டு பூ உதிர்ந்து வருவதுகவலை அளிக்கிறது. எனவே தோட்டக்கலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்