search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் அறிஞர்கள்"

    • 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.
    • மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

    சென்னை:

    சென்னையில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்ன வைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி. ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டு உள்ளன. 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7 முதல் 9-ந்தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.

    உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இம்மாநாட்டின் மையப் பொருள். தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் ஆகியவை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

    இதில் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

    தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.

    மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குமரிமுனை திருக்குறள் திருவிழாவையொட்டி நடந்தது
    • அறக்கட்டளை பொறுப்பாளர் ராமன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட் டளை சார்பில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 1-ந்தேதி குமரிமுனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல வைகாசி மாத பிறப்பான நேற்று 17-வது ஆண்டு குமரி முனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியா குமரி முக்கடல் சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    தமிழ் அறிஞர் செந்தூர் பாரி சுடர் ஏற்றி வைத்தார். பின்னர் திருவள்ளுவர் அறக்கட்டளை செயல் பொறுப்பாளர் தாகூர் மற்றும் தமிழ் அறிஞர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் கதிர் முத்தையன் தலை மையில் தமிழ் அறிஞர்கள் படகில் புறப்பட்டு சென்று திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வழிபட்டனர். மாலையில் லீபுரம் சந்திப்பில் இருந்து திருக்குறளூருக்கு தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் ராமன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை புனிதா கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் இரவு திருக்குறளூரில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சி பொறுப்பாளர் தமிழ் முகிலன் தலைமை தாங்கி னார். லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பொறுப்பாளர் பாண்டியராஜன் வரவேற்று பேசினார்.

    இதில் திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் இறையடிகன், பொறுப் பாளர் உதயகுமார் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். திருக்குறள் தொண்டர் கருப்பசாமியை பாராட்டி இணை செயற்பொறுப்பா ளர் நெடுஞ்சேர லாதன் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அறக்கட்டளை பொறுப்பாளர் விமுனா மூர்த்தி, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை நிறுவனர் குறளமிழ்தன் ஆகியோர் திருக்குறள் திறப்பாடு போட்டி நடத்தினார்கள். முடிவில் அறக்கட்டளை பொறுப்பாளர் நற்றேவன் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
    • 2023-ம் ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது

    கள்ளக்குறிச்சி::

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-2023-ம் ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.

    மேலும் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவ லகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாராங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்று க்கொள்ள ப்படமாட்டாது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவி த்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500, மருத்துவப்படி ரூ.500 ஆக மொத்தம் ரூ.4 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • ஜனவரி 1ந் தேதி, 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
    • மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவ படி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2022 - 23ம் ஆண்டுக்கான உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.கடந்த ஜனவரி 1ந் தேதி, 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.தாலுகா அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ் பணி செய்ததற்கான ஆதாரம் மற்றும் தகுதி நிலை சான்று, தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.

    இதற்காக, www.tamilvalarchithurai.tn.gov.in என்கிற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படுவோருக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவ படி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்ட தமிழ் அறிஞர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண் 608 ல் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வரும் 31ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    ×