என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
133 அடி உயர திருவள்ளுவர் சிலையில் தமிழ் அறிஞர்கள் மலர் அஞ்சலி
- குமரிமுனை திருக்குறள் திருவிழாவையொட்டி நடந்தது
- அறக்கட்டளை பொறுப்பாளர் ராமன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட் டளை சார்பில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 1-ந்தேதி குமரிமுனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல வைகாசி மாத பிறப்பான நேற்று 17-வது ஆண்டு குமரி முனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியா குமரி முக்கடல் சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ் அறிஞர் செந்தூர் பாரி சுடர் ஏற்றி வைத்தார். பின்னர் திருவள்ளுவர் அறக்கட்டளை செயல் பொறுப்பாளர் தாகூர் மற்றும் தமிழ் அறிஞர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் கதிர் முத்தையன் தலை மையில் தமிழ் அறிஞர்கள் படகில் புறப்பட்டு சென்று திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வழிபட்டனர். மாலையில் லீபுரம் சந்திப்பில் இருந்து திருக்குறளூருக்கு தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் ராமன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
இந்த ஊர்வலத்தை புனிதா கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் இரவு திருக்குறளூரில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சி பொறுப்பாளர் தமிழ் முகிலன் தலைமை தாங்கி னார். லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பொறுப்பாளர் பாண்டியராஜன் வரவேற்று பேசினார்.
இதில் திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் இறையடிகன், பொறுப் பாளர் உதயகுமார் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். திருக்குறள் தொண்டர் கருப்பசாமியை பாராட்டி இணை செயற்பொறுப்பா ளர் நெடுஞ்சேர லாதன் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அறக்கட்டளை பொறுப்பாளர் விமுனா மூர்த்தி, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை நிறுவனர் குறளமிழ்தன் ஆகியோர் திருக்குறள் திறப்பாடு போட்டி நடத்தினார்கள். முடிவில் அறக்கட்டளை பொறுப்பாளர் நற்றேவன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்