search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக முதலீட்டாளர்கள் மாநாடு"

    • கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தொழில் தொடங்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.

    தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலாளர் அருண்ராய், மின் வாரிய தலைவர், தகவல் தொழில் நுட்ப துறை செயலாளர் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    • பயணத்தின் போது பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், அரசு பிரதிநிகளை சந்திக்கிறார்.
    • 10 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு அடுத்த மாதம் 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    சென்னை:

    சென்னையில் கடந்த 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம் மேற்கொள்கிறார்.

    அதன்படி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று இரவு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு செல்கிறார். அங்கிருந்து ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், அரசு பிரதிநிகளை சந்திக்கிறார்.

    10 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு அடுத்த மாதம் 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.
    • 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றும் குறிப்ப்பிட்டது நம் அனைவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.

    சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இம்மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை இந்தியாவே உற்று நோக்கும் இந்த அவையில் பெரு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன் என்றும், இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்" என்றும் குறிப்ப்பிட்டது நம் அனைவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தொழில் வளர்ச்சியின் மூலம் பொருளாதார நிறைவு காணவும், லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தரவும், நாட்டை வலுவான பாதைக்கு அழைத்துச் செல்லவும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் அன்பான பாராட்டுகள், வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு இலக்குகளை அதிகப்படுத்த வேண்டும்.
    • அதானியை விமர்சனம் செய்த தி.மு.க.வினர் தற்போது பாராட்டுகிறார்கள்.

    சென்னை :

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையேற்ற பின் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா முன்னேறியுள்ளது.

    உத்தரபிரதேசம் மாநிலம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் 33.51 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்தது. உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி முதலீடு பெறப்பட்டது.

    2022-ல் கர்நாடகா 9 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தது.

    குஜராத்தில் முதலீட்டாளர் மாநாடு தொடங்குவதற்குள் ரூ. 7 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

    தமிழகம் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலாவது முதலீடுகளை ஈர்த்திருக்க வேண்டும். ஆனால் ரூ.6.6 லட்சம் கோடி மட்டுமே வந்துள்ளது.

    தமிழக அரசு இலக்குகளை அதிகப்படுத்த வேண்டும்.

    அதானியை விமர்சனம் செய்த தி.மு.க.வினர் தற்போது பாராட்டுகிறார்கள்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.
    • நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!

    இருநாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.

    நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

    'எல்லோருக்கும் எல்லாம்',

    'எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி'

    என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • முதல் நாளில், வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது.
    • அதானி குழுமம் ரூ.24,500 கோடி முதலீடு- 4 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    சென்னையில் நேற்று தொடங்கி இன்று 2வது நாளாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அறிவித்துள்ளன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.

    முதல் நாளான நேற்று தமிழகத்தில் முதலீடு செய்த டாப் 10 நிறுவனங்களில், முதலாவதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, 2வது நாளாக இன்று மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.70,800 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், 3800 வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உருவாகும் என கூறப்புடுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 

    தொடர்ந்து, அதானி குழுமம் ரூ.24,500 கோடி முதலீடு- 4 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    மூன்றாவதாக சிபிசில் நிறுவனம் ரூ.17 ஆயிரம் கோடி முதலீடு- நாகப்பட்டினத்தில் 2400 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    அதானி குழுமம் ரூ.13,200 கோடி முதலீடு- 1000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    எல் அண்டு டி நிறுவனம் ரூ.3500 கோடி முதலீடு- சென்னையில் 40 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    ராயல் என்ஃபீல்டு ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு- காஞ்சிபுரத்தில் 2000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    மைக்ரோசாப்ட் இந்தியா ரூ,2740 கோடி முதலீடு- சென்னையில் 167 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    ஹிந்துஜா குழுமம் ரூ.2500 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 300 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    ஹைலி க்லோரி ஃபுட்வேர் நிறுவனம் ரூ.2302 முதலீடு- கள்ளக்குறிச்சியில் 2000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    திருவள்ளூரில் ஸ்டெல்லண்டிஸ் குழுமம் ரூ.2000 கோடி முதலீடு செய்கிறது.

    இதன்மூலம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தமாக ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6,64,180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
    • ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.

    உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு இந்த மாநாடு வித்திட்டுள்ளது. இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி, என் இதயத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நீங்கா இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடுகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஈர்த்துள்ளார். 

    ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன். இதன்மூலம், 74,757 இளைஞர்கள், மகளிருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6,64,180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

    உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 14,54,712 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

    12,35,945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவு பொருளாதார மாநிலமாக தமிழகத்தை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உற்பத்தி மட்டுமின்றி ஏற்றுமதியையும் இலக்காக கொண்டு செயல்பட திட்டம். 

    9 நாடுகள் இந்த மாநாட்டில் பன்னாட்டு அரங்குகள் அமைத்து சிறப்பு சேர்த்துள்ளன.

    எங்கள் அரசு மீதும் கொள்கை மீதும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம்.

    தொழிற்சாலை அமைத்து, உற்பத்தி தொடங்கிய பின்னும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

    மாநாட்டில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    முதலீடு செய்யாதவர்களையும் முதலீடு செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் வேலைகளை உருவாக்கவும், பறிக்கவும் முடியும்.
    • பல நாடுகளில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடுகள் செய்வதையும் நம்மால் காணமுடிகிறது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாறறினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கணினிகளை மனிதர்கள் போல் செயல்படும் வகையில் வடிவமைக்க தொடங்கிவிட்டோம். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் வேலைகளை உருவாக்கவும், பறிக்கவும் முடியும்.

    AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற பிராந்திய மொழிகளில் Content-களை உருவாக்கினால் அது வேலைவாய்ப்புகளை பெருக்கும். 

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் DeepFake உள்ளிட்ட எதிர்மறையான தாக்கங்கள்

    அதிகரித்துள்ள சூழலில், அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.

    பல நாடுகளில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடுகள் செய்வதையும் நம்மால் காணமுடிகிறது.

    மனிதர்களால் ஏற்படும் அழிவு மற்றும் இழப்பை AI தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி சரி செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிவிஎஸ் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு- 500 வேலை வாய்ப்புகள்.
    • மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹55,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.

    சென்னையில் இன்று தொடங்கி நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அறிவித்துள்ளன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.

    மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹55,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் முதலீடு செய்யும் டாப் 10 முதலீடுகள் குறித்து பார்ப்போம்.

    வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.12,082 கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40,500 வோலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்ததாக, ஜேஎஸ்டபுள்ழு நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 6600 வேலை வாய்ப்புகள் உருவாகும். 

    ஹூண்டாய் நிறுவனம் ரூ.6180 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி வாய்ப்புகள் உருவாகும்.

    பர்ஸ்ட் சோலார் நிறுவனம் ரூ. 5600 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 350 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    டிவிஎஸ் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு- 500 வேலை வாய்ப்புகள்.

    பெகட்ரான் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்.

    கோத்ரேஜ் நிறுவனம் ரூ.515 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்.

    மிட்சுபிஷி நிறுவனம் ரூ.200 கோடி முதலீடு- திருவள்ளூர் மாவட்டத்தில் 60 சதவீத பெண் பணியாளர்கள் நியமிக்க வாய்ப்பு.

    குவல்காம் நிறுவனம் ரூ.177 கோடி முதலீடு- சென்னையில் 1600 வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு.

    • உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை வரை நடைபெற உள்ளது.

    சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளான இன்றே, ரூ.5.5 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை எட்டியுள்ளதாக தொழிற்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும், முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.

    இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை வரை நடைபெறவுள்ள நிலையில், இன்றைய நாளில் மட்டும் 5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பது வழக்கம்.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்-சூட் அணிந்து பங்கேற்றார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பது வழக்கம். கோட்-சூட் போடுவது கிடையாது.

    ஆனால் இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்-சூட் அணிந்து பங்கேற்றார்.

    இதுபற்றி அவர் மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டதாவது:-

    வெளிநாடுகளுக்கு போகும்போதுதான் நான் 'சூட்' போடுவது வழக்கம். ஆனால் இங்கே எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்ட காரணத்தால், இங்கே நான் கோட்-சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது.

    இன்று காலையில் இருந்து சென்னையில் மழை பெய்கிறது. நான் இங்கே வந்தவுடன் முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ் தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது
    • சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்

    முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தீல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. இது நாளை நிறைவடையும்.

    இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.

    தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மாநாட்டில் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார். 

    நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.

    "வணக்கம்" என தமிழில் தொடங்கி தனது உரையில் அவர் தெரிவித்ததாவது:

    10 ஆண்டுகளுக்கு முன் நலிவடைந்த பொருளாதாரத்தில் இந்தியா இருந்தது. ஆனால், இந்தியாவின் 100-வது சுதந்திர தின விழாவில் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா திகழும். காஞ்சி பட்டு போல் பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு நிர்ணயித்து பயணிக்கும் தமிழகத்திற்கு வாழ்த்து. ஆதித்யா-எல்1 திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்தவர். நாடு வலிமையடைய அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வளர்ந்த நாடாக நமது நாட்டை மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கனவாக இருக்க வேண்டும். ஊழலில்லாத இந்தியாவை உருவாக்கவும், பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தவும் நாம் செயல்படுவோம்.

    இவ்வாறு அமைச்சர் பியூஷ் கூறினார்.

    ×