search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்க நேர்ச்சை"

    • பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம்.
    • 211 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செய்யப்பட்டது.

    கொல்லங்கோடு:

    தமிழக-கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மீன பரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக அம்மன்கள் இருவரும் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தூக்கக்காரர்கள் குளித்து முடித்ததும் கோவிலை சுற்றி முட்டு குத்தி நமஸ்காரத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து முதலாவதாக அலங்கரிக்கப்பட்டிருந்த தூக்க தேரில் அம்மன் தூக்கம் நடத்தப்பட்டது. பிறகு வரிசையாக ஒவ்வொரு தூக்கமும் நடத்தப்பட்டது. இதற்காக ஒன்று முதல் 50 வரை உள்ள தூக்கக் காரர்கள் கோவிலில் வரிசையாக காத்திருக்க, மீதமுள்ள தூக்கக்காரர்கள் கச்சேரிநடை பகுதியில் உள்ள தறவாடு வீட்டிற்கு சென்று உடல் மற்றும் முகத்தில் கரும்புள்ளிகள் குத்தி வாளும் பரிவட்டமும் வாங்கி ஊர்வலமாக திருவிழா கோவிலை வந்தடைந்தனர்.

    திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு குழந்தைபேறு கிடைக்கப் பெற்றால் அவ்வாறு கிடைக்கப்பெற்ற குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டி இந்த கோவிலில் தூக்க நேர்ச்சையை நடத்துகின்றனர் இதற்காக வடிவமைக்கப்பட்ட 48 அடி உயர தேரில் தூக்கக்காரர்கள் தொங்கியபடி நான்கு குழந்தைகளை தூக்கியபடி ஒரு முறை கோவிலை சுற்றி வலம் வர தூக்க நேர்ச்சையானது முடித்து வைக்கப்படுகிறது.

     இந்த தூக்க நேர்ச்சை நள்ளிரவு நேரத்தையும் கடந்து சென்றது. அந்த வகையில் மொத்தம் 211 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செய்யப்பட்டது.

    இந்த திருவிழாவின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு தூக்க நேர்ச்சையானது நடத்தப்பட்டது.

    தூக்க திருவிழாவை காண குமரி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தின் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்தது. திருவிழாவிற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை தலைவர் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, துணைத் தலைவர் சசிகுமாரன் நாயர், இணைச்செயலாளர் பிஜூகுமார், உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீ குமாரன் நாயர், பிஜூ, சதிகுமாரன் நாயர் உள்பட கமிட்டி அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.

    • 1,352 குழந்தைகள் தூக்க நேர்ச்சையில் பங்கேற்றனர்
    • கோவிலுக்கு தூக்ககாரர்களின் அணிவகுப்பு ஊர்வலமும் நடத்தப்பட்டது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட த்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று கொல்லங்கோடு ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோவில்.

    இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர நாளில் தூக்கத் திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக் கான தூக்கத் திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

    தொடர்ந்து நாள் தோறும் கணபதி ஹோமம், பாரா யணம், சமய சொற்பொ ழிவு, நமஸ்காரம், அன்ன தானம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.

    9-ம் நாளான நேற்று தூக்கக்காரர்கள் பிரதான பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி, பஞ்சகவ்ய முழுக்கல், கடல் பூஜை செய்து விட்டு கோவிலை அடைந்து நமஸ்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு தூக்க வில்லின் வெள்ளோ ட்டமான வண்டியோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விழாவின் சிறப்பு நிகழ்வான தூக்க நேர்ச்சை இன்று (சனிக்கிழமை) அதி காலை நடைபெற்றது. தூக்கக்காரர்கள் முட்டுக் குத்தி நமஸ்காரம் செய்தனர்.தொடர்ந்து அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார். காலை 6.30 மணிக்கு தூக்க நேர்ச்சை தொடங்கியது. முதலில் 4 அம்மன் தூக்க நேர்ச்சை நடைபெற்றது.

    அதன்பிறகு குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெற்றது. 1,352 குழந்தைகள் தூக்க நேர்ச்சையில் பங்கேற்றனர். இந்த வழிபாடு நள்ளிரவு வரை நடைபெறும். பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு தூக்க காரர்களின் அணிவகுப்பு ஊர்வலமும் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தேவையானஉணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

    தூக்க நேர்ச்சை விழாவையொட்டி குமரி மாவட்டம் மற்றும் கேர ளத்தின் திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழக, கேரள அரசுப் போக்கு வரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் வக்கீல் ராமச் சந்திரன் நாயர், செயலர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவா சன்தம்பி, துணைத் தலைவர் சதி குமாரன் நாயர், இணைச் செயலர் பிஜூகுமார், கமிட்டி உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன்தம்பி, ஸ்ரீகுமாரன் நாயர், பிஜூ, சதிகுமாரன் நாயர் ஆகி யோர் செய்துள்ளனர்.

    • இக்கோவிலில் நடைபெறும் தூக்க நேர்ச்சை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
    • தினமும் பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் புராதன சிறப்பு மிக்கதும், பழமை வாய்ந்தது மான இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரை திருக்கோவில் குலசேக ரத்திற்கு அருகில் இட்டக வேலி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

    சுமார் 700 வருடங்க ளுக்கு முன்பு தோன்றப் பட்ட இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடை பெறும் அம்மையிறக்கத் திருவிழாவின் போது குமரி மாவட்டத்தி லிருந்தும், கேரளாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் நடைபெறும் தூக்க நேர்ச்சை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இவ்வாண்டு திருவிழா வையொட்டி நாளை (22-ந்தேதி) காலை 7 மணிக்கு பொன்மனை அருகே கிழக்கம்பாகம் சந்திப்பில் கோவில் பூசாரிகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு சாவிதானம் நடைபெறுகிறது. பின்னர் 10.30 மணிக்கு விழா பறம்பு நோக்கி வெள்ளிப் பிள்ளை எழுந்தருளல் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க, பக்தர்கள் புடை சூழ அம்மையிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் பல்வேறு பூஜைகள், வழி பாடுகளுக்குப் பிறகு பிற்பகல் 3.30 மணிக்கு அம்மன் விழா பறம்புக்கு எழுந்தருளல் நடைபெறு கிறது.

    தொடர்ந்து 31-ந்தேதி வரை நடைபெறும் இத்திரு விழாவில் 5- ம் திருவிழா நாளான 26-ந்தேதி மாலை 6 மணிக்கு 2007 திருவிளக்குப்பூஜை நடை பெறுகிறது. விழாவின் 7-ம் நாளான 28-ந்தேதி தூக்க நேர்ச்சை விழா நடைபெறுகிறது. முன்னதாக குத்தியோட்டம், பூமாலை, தாலப்பொலி, மஞ்சள் குடம், துலாபாரம், பிடிப்பணம், உருள் நேர்ச்சைகள் உள் ளிட்ட நேர்ச்சைகள் நடை பெறுகின்றன.

    9- ம் திருவிழா நாளான 30-ந்தேதி மாலையில் சிறப்பு வாய்ந்த கமுகு எழுந்தரு ளல் நிகழ்ச்சி நடை பெறுகிறது. 10-ம் திருவிழா நாளான 31-ந்தேதி மாலை 4 மணிக்கு பொங்கல் வழி பாடு நடைபெறுகிறது. விழாவில், 2 - ம் திருவிழா நாள் முதல் நிறைவு நாள் வரை தினமும் பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இட்டகவேலி நீலகேசி அம்மா சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×