search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருவழி பாதை"

    • ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
    • கடை உரிமையாளர்களை அழைத்து பேசினோம். அவர்களும் இதற்கு ஒப்புக் கொண்டனர்

    நாகர்கோவில்

    நாகர்கோவில் மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட மிரக்கில் தெருவில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 45-வது வார்டுக்குட்பட்ட தாராவிளை பகுதி, அவரிவிளை குறுக்கு தெருவில் ரூ.8.90 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 49-வது வார்டுக்குட்பட்ட எம்.எம்.கே. நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    42-வது வார்டுக்குட்பட்ட வேதநகர் கிராஸ் தெருவில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 40-வது வார்டுக்குட்பட்ட சன்னதி கிராஸ் தெருவில் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகிய பணிகளை மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுகாதாரத்தை பேணி காக்கவும் நடவ டிக்கையை மேற்கொண்டு உள்ளோம். பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெருக்க டியை கருத்தில் கொண்டு பல்வேறு சாலைகளை இருவழிப்பா தையாக மாற்ற திட்ட மிட்டுள்ளோம். தற்போது வடசேரியில் இருந்து மணிமேடை வரை உள்ள சாலையை இருவழி பாதையாக மாற்றுவது தொடர்பாக கடை உரிமையாளர்களை அழைத்து பேசினோம். அவர்களும் இதற்கு ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த சாலை அளவீடு செய்யும் படி விரைவில் தொடங்கப்பட்டு இருவழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில்துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர் சிஜி, சதீஷ், ஜெயவிக்ரமன், ஸ்டாலின் பிராகாஷ், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ராமகிருஷ்ணன், வக்கீல் அணி அகஸ்தீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருங்காலகுடி-சிங்கம்புணரி சாலை இருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • 18 சுக்காம்பட்டி வரை மதுரை மாவட்டமாகும். அதற்கு அடுத்து பகுதி சிவகங்கை மாவட்டம் ஆகும்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ளது கருங்காலக்குடி. இங்கிருந்து 18 சுக்காம்பட்டி வழியாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு செல்லும் சாலை உள்ளது. இதனை இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று ஐக்கிய முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பக்ருதீன் அலி அகமத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். அது நெடுஞ்சாலை துறை பரிசீல னைக்கு அனுப்பப்பட்டி ருந்தது. இது குறித்து நெடுஞ்சாலை துறையின் மேலூர் பகுதி உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கருங்காலக்குடி பேட்டையில் இருந்து சிங்கம்புணரி வரை இருவழி பாதையாக மாற்ற வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளீர்கள். அது பரிசீலணையில் உள்ளது. மேலும் அதை 18 சுக்காம்பட்டி வரை மதுரை மாவட்டமாகும். அதற்கு அடுத்து பகுதி சிவகங்கை மாவட்டம் ஆகும். எனவே கருங்காலக்குடி பேட்டையில் இருந்து 18 சுக்காம்பட்டி வரை அதனை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2023-24 திட்டத்தில் சேர்த்து அரசுக்கு பிரேணை அனுப்பப்படும் என தங்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×