search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்கி"

    • பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் கும்கி.
    • தொடர்ந்து அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம்.

    பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் கும்கி. படத்தின் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்பட பல படங்களில் நடித்தார்.

    ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் பல படங்களில் நடித்து வரும் லட்சுமிமேனன் தனது முதல் காதல் பற்றி கூறியதாவது:-

    யாரும் என்னை காதலிப்பதாக சொல்லவில்லை. ஆனால் நான் ஒருவரிடம் என் காதலை சொன்னேன். பள்ளியில் படிக்கும் போது எனக்கு பிடித்த ஒருவரிடம் காதலை சொன்னேன். சில நாட்கள் கழித்து என்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம்.

    குடும்பத்தினருக்கு தெரியாமல் இருப்பதற்காக போர்வைக்குள் இருந்து கொண்டு காதலரிடம் பேசுவேன். சினிமா வாய்ப்புகள் வந்ததால் பள்ளி படிப்பையும் தொடர முடியவில்லை. காதலையும் தொடர முடியவில்லை. அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார். தற்பொழுது ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் சப்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார், தமன் இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும்.
    • ஊருக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ஜோலார்பேட்டை:

    கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த 19 நாட்களுக்கு முன்பு வெளியேறிய 5 யானைகளில் 2 யானைகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை பகுதியில் சுற்றி வருகிறது.

    யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது அதில் இரண்டு குழுவினர் யானை எந்த பக்கம் செல்கிறது. என கண்காணித்து வருகின்றனர்.

    மற்றொரு 3 குழுவினர் யானை முகாமிட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும்.

    பொதுமக்கள் யானையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து யானைக்கு தொந்தரவு செய்ததால் அது காட்டிற்குள் செல்ல முடியாமல் ஊருக்குள் நுழைந்த சுற்றி திரிந்து வருகிறது. இன்று காலை 2 யானைகளும், சவடிகுப்பம் பகுதியில் சுற்றி திரிந்தன.

    ஊருக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக முதுமலை சரணாலயத்தில் இருந்து உதயன், வில்சன் என்ற 2 கும்கி யானைகளும் பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை லாரி மூலம் இன்று காலை கொண்டுவரப்பட்டன.

    மேலும் யானை பாகன்கள் உடன் வந்துள்ளனர். கும்கி யானைகள் பயணம் செய்ததால் களைப்பாக உள்ளது. அந்த யானைகளை அதிகாலையிலேயே குளிக்க வைத்தனர்.

    மேலும் தேவையான உணவு வழங்கப்பட்டது. இன்று மாலை அல்லது நாளை காலையில் காட்டு யானைகள் கும்கி யானை மூலம் விரட்டப்படும் என தெரிவித்தனர்.

    • யானையை அமைதிப்படுத்தும் கருவி மூலம் பிடிப்பது அறிவியலுக்கு எதிரானது என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
    • யானையை பிடிப்பதை தவிர வேறு மாற்று வழிகளை பரிசீலிக்கவும் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சந்தன்பாறை, சின்னக்கானல் பகுதியில் மக்களிடம் பிரபலமானது அரிக்கொம்பன் யானை.

    அரிசி விரும்பியான இந்த யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து வயல் வெளிகளை சேதப்படுத்தி வந்தது. மேலும் மக்களையும் அடிக்கடி தாக்கியது. இதில் சில உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மக்களிடம் அரிக்கொம்பன் என்ற பெயரைக் கேட்டாலே அச்சம் ஏற்பட்டது. எனவே இந்த யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து அரிக்கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். இதற்காக விக்ரம், சூர்யா என்ற 2 கும்கி யானைகளும் வர வழைக்கப்பட்டன. வயநாட்டில் இருந்து மேலும் 2 கும்கி யானைகளும் வர வழைக்கப்பட இருந்தன.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுவது என்று திட்டமிடப்பட்டது. இந்நிலையில் யானையை அமைதிப்படுத்தும் கருவி மூலம் பிடிப்பது அறிவியலுக்கு எதிரானது என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இதனை தொடர்ந்து யானையை பிடிக்கும் பணிக்கு வருகிற 29-ந் தேதி வரை தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும் யானையை பிடிப்பதை தவிர வேறு மாற்று வழிகளை பரிசீலிக்கவும் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் கோர்ட்டு தடை விதித்து இருந்தாலும், அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கான முன் பணிகளில் வனத்துறை ஈடுபட்டுள்ளது.

    இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோர்ட்டு அனுமதித்தால் யானையை பிடிப்போம். 29-ந் தேதி அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் ஒத்திகை பயிற்சி கும்கி யானைகள் மூலம், நடத்தப்படுகிறது என்றார்.

    ×