என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கிகள் மூலம் ஒத்திகை
- யானையை அமைதிப்படுத்தும் கருவி மூலம் பிடிப்பது அறிவியலுக்கு எதிரானது என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
- யானையை பிடிப்பதை தவிர வேறு மாற்று வழிகளை பரிசீலிக்கவும் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சந்தன்பாறை, சின்னக்கானல் பகுதியில் மக்களிடம் பிரபலமானது அரிக்கொம்பன் யானை.
அரிசி விரும்பியான இந்த யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து வயல் வெளிகளை சேதப்படுத்தி வந்தது. மேலும் மக்களையும் அடிக்கடி தாக்கியது. இதில் சில உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களிடம் அரிக்கொம்பன் என்ற பெயரைக் கேட்டாலே அச்சம் ஏற்பட்டது. எனவே இந்த யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அரிக்கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். இதற்காக விக்ரம், சூர்யா என்ற 2 கும்கி யானைகளும் வர வழைக்கப்பட்டன. வயநாட்டில் இருந்து மேலும் 2 கும்கி யானைகளும் வர வழைக்கப்பட இருந்தன.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுவது என்று திட்டமிடப்பட்டது. இந்நிலையில் யானையை அமைதிப்படுத்தும் கருவி மூலம் பிடிப்பது அறிவியலுக்கு எதிரானது என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இதனை தொடர்ந்து யானையை பிடிக்கும் பணிக்கு வருகிற 29-ந் தேதி வரை தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் யானையை பிடிப்பதை தவிர வேறு மாற்று வழிகளை பரிசீலிக்கவும் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் கோர்ட்டு தடை விதித்து இருந்தாலும், அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கான முன் பணிகளில் வனத்துறை ஈடுபட்டுள்ளது.
இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோர்ட்டு அனுமதித்தால் யானையை பிடிப்போம். 29-ந் தேதி அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் ஒத்திகை பயிற்சி கும்கி யானைகள் மூலம், நடத்தப்படுகிறது என்றார்.