என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சத்து மாத்திரை"
- மாணவனுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்படவே உடனடியாக ஆசிரியரிடம் தகவல்களை தெரிவித்துள்ளார்.
- மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி பெரிய கண்ணாடி கிராமத்தை சேர்ந்த 12 வயது மாணவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இப்பள்ளியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சத்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். நேற்று வியாழக்கிழமை காலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும். சத்து மாத்திரைகள் (போலிக் ஆசிட் இரும்பு சத்து மாத்திரை)அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாத்திரைகளை சாப்பிடாத மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் இடத்தில் மாத்திரைகளை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தண்ணீர் குடிக்கும் இடத்திற்கு வந்த 8-ம் வகுப்பு மாணவன் ஒரே நேரத்தில் அதிக மாத்திரைகள் சாப்பிட்டால் உடம்பில் சத்து அதிகரிக்கும் என எண்ணி அங்கிருந்த 15 மாத்திரைகளை மொத்தமாக ஒரே நேரத்தில் உட்கொண்டு உள்ளார். இதில் மாணவனுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்படவே உடனடியாக ஆசிரியரிடம் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிப்பு.
- குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்த குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
- இரும்புச்சத்து மற்றும் போலிக் சத்து மாத்திரை 52 வாரங்களுக்கு வினியோகிக்கும் திட்டம் தற்போது அமலில் உள்ளது.
- பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அலுவலர் அல்லது ஆசிரியரை நியமித்து கொள்ள வேண்டும்.
தாராபுரம் :
பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கும் விதிகளில் சில மாற்றங்களை பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கும் விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி இரும்புச்சத்து மற்றும் போலிக் சத்து மாத்திரை வாரத்துக்கு ஒன்று வீதம் 52 வாரங்களுக்கு வினியோகிக்கும் திட்டம் தற்போது அமலில் உள்ளது.
வாரந்தோறும் வியாழக்கி ழமை ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 400 மி.கி., திறன் கொண்ட மாத்திரைகளும், 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்க ளுக்கு 500 மி.கி., அளவி லான சத்து மாத்திரைகளும் வழங்க வேண்டும்.இப்பணி க்கென பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அலுவலர் அல்லது ஆசிரியரை தலைமை ஆசிரியர் நியமித்து கொள்ள வேண்டும். வாரத்துக்கு ஒரு மாத்திரை மட்டுமே வழங்க வேண்டும்.அதை ஆசிரியர் முன்னிலை யில் மாணவர் உண்பதை உறுதி செய்ய வேண்டும்.மாத்திரை உட்கொள்ளும் முன் மாணவர் ஆரோக்கி யமான மதிய உணவு எடுத்துக் கொண்டார்களா என்பதை உறுதிப்படுத்திட வேண்டும். காய்ச்சல், மயக்கம், வாந்தி உள்ளிட்ட பாதிப்பு , ஏதேனும் உடல் நலக்குறைவு இருந்தால் அம்மாணவருக்கு மாத்திரை வழங்கத் தேவையில்லை. மாத்திரை வழங்கும் நாளில் மாணவர் பள்ளிக்கு வர வில்லையெனில் அதற்கு அடுத்த நாள் சத்து மாத்திரை வழங்க வேண்டு ம். மாறாக அதற்கு அடுத்த வாரம் (வியாழன்) இரண்டு மாத்திரைகளை வழங்க கூடாது. சத்து மாத்திரை வழங்கிட விபரங்களை ஒவ்வொரு வாரமும் சேகரித்து பட்டியல் தயா ரித்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது. இது குறித்து விரிவான வழிகாட்டுதல் மாவட்ட துணை இயக்குனர், மாநகராட்சி சுகாதாரப்பிரி வினருக்கு அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்