search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்க்கிங் கட்டணம்"

    • இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 நிர்ணயம்.
    • நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.40 ஆகவும் பார்க்கிங் கட்டணம் உயர்வு.

    டெல்லியில் பார்க்கிங் கட்டணத்தை இரட்டிப்பாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    காற்று மாசை கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.40 ஆகவும் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

    பேருந்துகளுக்கான பார்க்கிங் கட்டணம், ரூ. 150ல் இருந்து ரூ.300ஆக உயர்த்தப்படுகிறது.

    • மெட்ரோ ரெயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு சலுகை கிடைக்காது.
    • பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் மெட்ரோ ரெயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    சென்னை:

    சென்னையில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பயdisணிகளுக்கு போக்குவரத்து நெருக்கடியை குறைத்துள்ளது.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளும் முடிந்துவிட்டால் சென்னையில் எந்த பகுதிக்கும் எளிதாக சென்று வர முடியும்.

    அதற்கு ஏற்ற வகையில்தான் மின்சார ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயிலும் இணைக்கப்படுகிறது. பரங்கிமலை, கிண்டி, திரிசூலம் மின்சார ரெயில் நிலையங்களில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்குள் நடந்து செல்லும்படி வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதனால் தற்போது இரு சக்கர வாகனங்களில் தொலை தூரங்கள் வரை செல்வதை தவிர்த்து விட்டு பலர் மெட்ரோ நிலைய பார்க்கிங்கில் டூ வீலரை நிறுத்தி செல்கிறார்கள். பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம் வரை ரூ.10-ம் 12 மணி நேரம் வரை ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி முதல் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மடங்கு அதிகமாக உயர்த்தி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இனி 6 மணி நேரம் வரை ரூ.20, 12 மணி நேரம் வரை ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாதாந்திர கட்டணமும் 6 மணி நேரத்துக்கு ரூ. 500-ல் இருந்து ரூ.750 ஆகவும், 12 மணி நேரத்துக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் மெட்ரோ ரெயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    அதாவது மெட்ரோ ரெயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. அதாவது பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    இரண்டு நிறுவனங்களும் அரசு நிறுவனங்கள்தான். இதில் ஏன் பயணிகளிடம் பாகுபாடு காட்ட வேண்டும் என்று மின்சார ரெயில் பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

    • வசூலிக்கும் உரிமை ரூ.11 லட்சத்துக்கு ஏலம்
    • பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சுற்றுலா வரும் பஸ், கார், வேன் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்காக கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கன்னியாகுமரி கடற்கரைசாலை, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி ஆகிய இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த இடங்களில் பார்க்கிங் செய்யும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை சபரிமலை சீசன் காலங்களில் மட்டும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம்விடப்பட்டு வருகிறது. சீசன் இல்லாத மற்ற காலங்களில் இந்த இடத்தில் பார்க்கிங் செய்யும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்படுவதில்லை. இதேபோல கன்னியாகுமரி காந்தி மண்டபத்துக்கு செல்லும் மெயின் ரோட்டில் சுற்றுலா அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் பார்க்கிங் செய்யப்படும் சுற்றுலா வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் உரிமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் தனியாருக்கு ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்படுகிறது.

    இந்த பார்க்கிங் இடத்தில் வருடம் முழுவதும் பார்க்கிங் செய்யப்படும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு உள்ள முக்கோண பூங்காவை சுற்றிலும் ஏராளமான இரு சக்கர வாகன பார்க்கிங் கட்டணம் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து இந்த இடத்தில் பார்க்கிங் செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது. இதைத்தொடர்ந்து முதல் முறையாக கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு உள்ள முக்கோண பூங்காவை சுற்றி நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் உரிமையை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கான ஏலம் விடும் நிகழ்ச்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் இந்த ஏலம் நடந்தது.

    இதில் கன்னியாகுமரி மாதவபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள முக்கோண பூங்காவை சுற்றி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமையை ரூ.11லட்சத்து 11 ஆயிரத்து 111-க்கு ஏலம் எடுத்துள்ளார். இந்த பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமை 3 ஆண்டுகளுக்கு செல்லு படியாகும். ஒரு இரு சக்கர வாகனத்திற்கு ரூ.10 கட்டணம் நிர்ணயக்கப் பட்டுள்ளது.

    ×