என் மலர்
நீங்கள் தேடியது "குருத்தோலை ஞாயிறு"
- கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு இன்று கடைபிடிக்கப்பட்டது.
- வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.
இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் 'கீழை நாடுகளின் லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.
இத்தகைய பல்வேறு சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புனித பயணமாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.
இதனையொட்டி காலை வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு உன்னதங்களிலே ஒசன்னா என பாடல்கள் பாடியவாறு பவனியாக சென்றனர்.
பவனியானது பேராலயத்தின் முகப்பில் இருந்து தொடங்கி வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பேராலயத்தின் கீழ்க்கோவிலை அடைந்தது. தொடர்ந்து, பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
மேலும், பேராலயத்தில் கொங்கனி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்தனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
- ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.
- கிறிஸ்தவர்கள் முழங்க வழிபாட்டு பாடல்களை பாடியபடி சென்றனர்.
ஈரோடு:
ஏசு கிறிஸ்து இறை பணியை தொடங்குவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்துள்ளார். இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொண்டு ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்தை கொண்டாடு வது வழக்கம்.
ஈஸ்டர் தினத்திற்கு முந்தைய ஞாயிற்றுக்கி ழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கிறார்கள்.
அதன்படி இன்று காலை ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலமானது நடு வீதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து தொடங்கி ஸ்டேட் பேங்க் சாலை வழியாக புனித அமல அன்னை ஆலயத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து குருத்தோலை ஞாயிறுயையொட்டி சிறப்பு திருப்பலியும் நடந்தது.
இதேபோல் சி.எஸ்.ஐ. சர்ச்சில் பாதிரியார் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் சர்ச்சில் தொடங்கி, மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக சவிதா சந்திப்பு வரை சென்று மீண்டும் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக சர்ச்சில் நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இசை வாத்தியங்கள் முழங்க வழிபாட்டு பாடல்களை பாடியபடி சென்றனர்.
தொடர்ந்து வருகிற 6-ந் தேதி பெரிய வியாழனும், இயேசு சிலுவையில் அறை யப்பட்ட நாளான 7-ந் தேதி புனித வெள்ளியும், ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டா டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.