search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வவ்வால்கள்"

    • வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என தொற்று நோய் நிபுணர் எச்சரித்து உள்ளார்.
    • ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாக கண்டறிப்பட்டு உள்ளது.

    பீஜிங்:

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது. தொடர்ந்து அந்த கொரோனா அரக்கன் உருமாறி பொதுமக்களை பாடாய் படுத்தியது.

    இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு தற்போது தான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. இருந்த போதிலும் கொரோனா முழுமையாக நம்மை விட்டு அகலவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார். வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தலைமையிலான தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானது எனவும் கண்டறிப்பட்டு உள்ளது.

    இந்த தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் சில தொற்று நோய் நிபுணர்கள் இதை மறுத்து உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வைரஸ் பரவும் என்பதை ஏற்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வே எதிர்காலத்தில் இது போன்ற வைரஸ் பரவலை தடுத்து விடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    • வனத்துறை, சுகாதாரத்துறையினர் ஆய்வு
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால்கள் தொங்குவது வழக்கம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மரங்களில் வவ்வால்கள் தலைகீழாக தொங்கி வருகிறது. பகல் நேரங்களில் தலை கீழாக தொங்கும் வவ்வால்கள் இரவு நேரங்களில் பறந்து திரியும்.நாகர்கோவில் ராணி தோட்டம் டெப்போ பகுதியில் 3 பழமை வாய்ந்த மரம் உள்ளது.

    இந்த மரங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால்கள் தொங்குவது வழக்கம். இதனால் இங்கு இரவு நேரங்களில் வவ்வால்கள் சத்தம் அதிகமாக இருக்கும். நேற்றும் வழக்கம் போல் ஏராளமான வவ்வால்கள் தொங்கிக்கொண்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை மரத்திலிருந்து வவ்வால்கள் இறந்து கீழே விழுந்தன. ஒன்றன்பின் ஒன்றாக வவ்வால்கள் இறந்து விழுந்து கொண்டே இருந்தது.சுமார் 50-க்கும் மேற்பட்ட வவ்வால்கள் இறந்து கீழே விழுந்தன.கீழே விழுந்த வவ்வால்களை அந்த பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் தூக்கி சென்றது.இதை பார்த்த போக்குவரத்து துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் போலீசுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மேலும் சில வவ்வால்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. மரத்திலிருந்து வவ்வால்கள் திடீரென இறந்து விழுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். வெப்ப தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் வவ்வால்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறந்து விழுந்த வவ்வால்களை வனத்துறை அதிகாரிகளும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

    ×