என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பங்குனி விழா"
- பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
- சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
தென்மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அந்த நாளில் கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சாஸ்தா கோவில்களுக்கு சென்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்வார்கள்.
இதற்காக வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களிலும் முந்தைய நாளே வந்து குடிசை போட்டு தங்கியிருப்பார்கள்.
இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்துதல், பந்தல் போடுதல் உள்ளிட்ட பணிகளை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி வல்லநாடு மணக்கரை, மணத்தேரி, நெல்லை மாவட்டம் பனையங்குறிச்சி, கடையம் அருகே பாப்பான்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாஸ்தா கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாநகரில் சந்திப்பு மேகலிங்க சாஸ்தா கோவில், டவுன் பாரதியார் தெரு முருங்கையடி சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி, பாளை சாந்தி நகர் நடுக்காவுடையார் சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், அம்பை வைராவிகுளம் இரண்டிலாம் உடையார் சாஸ்தா, வெட்டுவான்களம் அகத்தீஸ்வரர் சாஸ்தா, வள்ளியூர் ஊரணி சாஸ்தா கோவில்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் சிறப்பு பூஜைகள், பொங்கலிடுதல், அன்னதானம் நடக்கிறது.
தென்மாவட்டங்களை பொறுத்தவரை மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலிலும் உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு நாளை திருவிழா நடக்கிறது.
பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இந்த திருவிழாவையொட்டி நாளை மறுநாள் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனையொட்டி சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மதுரை சோழவந்தான் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
- மதுரை சோழவந்தான் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
சோழவந்தான்
சோழவந்தானில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான பத்திர காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பூசாரி சண்முகராஜா வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்தார். பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். சந்தன அபிஷேகம், அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா, முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்வும், அன்னதானமும் நடந்தது. விழாவையொட்டி தினமும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தன.
இதற்கான ஏற்பாடுகளை தலைவர் கவுதமராஜா, செயலாளர் ஜெயராஜ், உதவி தலைவர் இளமாறன், துணைச் செயலாளர் அய்யப்பராஜா, பொருளாளர் செல்வகுமார் மற்றும் மகளிர், இளைஞர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
- மாரியம்மன் கோவில் பங்குனி விழா நடந்தது.
- ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணராக்கு சுவாமிகள், செர்டுபாண்டி, போதும் பொண்ணு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறும்.
விழாவையொட்டி அம்மன் கையில் காப்புகட்டும் பூஜை நடந்தது. நாளை (5-ந்தேதி) திருவிளக்கு பூஜையும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா 6-ந்தேதியும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, வேல் குத்துதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணராக்கு சுவாமிகள், செர்டுபாண்டி, போதும் பொண்ணு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்