என் மலர்
நீங்கள் தேடியது "கடலூர் அரசு மருத்துவமனை"
- மருத்துவமனையில் இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிறுவர்கள் கைக்குழந்தைகள் உள்ளிட்டவர்களும் அதிக அளவில் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட அதிக அளவில் பனிமூட்டம் இருந்து வந்த நிலையில், சில நாட்களாக தொடர் மழையும் பெய்தது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், பொங்கல் பண்டிகை போகி அன்று அதிகளவில் பொருட்கள் எரிய வைத்ததால் மேலும் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் தற்போது காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து காணப்பட்டு வருகின்றன
இதன் காரணமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிறுவர்கள் கைக்குழந்தைகள் உள்ளிட்டவர்களும் அதிக அளவில் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் நேரில் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தெந்த பகுதிகளில் அதிகளவில் இதுபோன்ற காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பொதுமக்கள் பாதிப்படைந்து காணப்படுகின்றதோ அதனை கண்டறிந்து அங்கு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனை இன்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.
- பொது கழிப்பறை கட்டிடம் ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வலிப்பு நோயால் விழுந்து கிடந்தார்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப் புலியூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என நேற்று மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்திற்கு இன்று காலை மாவட்ட கண்காணிப்பாளர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் அனு மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பொது கழிப்பறை கட்டிடம் ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் அனு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொது கழிப்பறையை ஆய்வு செய்துவிட்டு வெளியே வந்தபோது, அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வலிப்பு நோயால் விழுந்து கிடந்தார். இதை பார்த்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் அந்த வாலிபரை உடனே மீட்டு தாசில்தார் பலராமன் வாகனத்தில் ஏற்றி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அந்த வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வலிப்பு ஏற்பட்ட வாலிபரை ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருக்காமல் அதிகாரிகள் உடனடியாக தாசில்தார் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டது.
- தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கடந்த 40 நாட்களாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. 8 மாத கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் பிரசவத்திற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் கவிதா தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரசவம் பார்த்தனர். அப்போது மகேஸ்வரிக்கு பரிசோதனை செய்ததில் கருவில் 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
இதில் அவருக்கு அழகான 3 ஆண் குழந்தைகள் பிறந்தது. இருப்பினும் குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கடந்த 40 நாட்களாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் மூன்று குழந்தைகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதுடன், எடையும் அதிகரித்தது. இதனால் ஆரோக்கியத்துடன் இருக்கும் 3 குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்பி வைக்க மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை 3 குழந்தைகளையும் மருத்துவ குழுவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்ததால் குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவ குழுவினர் பரிசு வழங்கினர்.