என் மலர்
நீங்கள் தேடியது "துணைவேந்தர்"
- தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
- மருந்து தெளிக்கும் போது பூச்சிகள் இறக்கும்.
உடுமலை :
பூச்சி மேலாண்மையில் அதிக மருந்துகளை தெளிப்பதால் பூச்சிகளின் அடுத்த தலைமுறை நோய் எதிர்ப்பு சக்தி பெற்று பாதிப்பின் அளவை அதிகரித்து விடுகிறது என வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தற்போது சற்று அதிகம் உள்ளது. உதாரணமாக தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இப்பூச்சி உறிஞ்சுவதால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் அதனால், ஏற்படும் அடுத்த கட்ட விளைவால் மகசூல் பாதிப்பு அதிகம் உள்ளது.
அதாவது வெள்ளை ஈ சாறு உறிஞ்சும் போது தேன் போன்ற ஒரு திரவத்தை சுரக்கிறது. அதை சுற்றி பூஞ்சைகள் உருவாகி கருப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. இதற்கு விவசாயிகள் பலர் மருந்துகளை அதிகளவில் தெளித்து விடுகின்றனர். முதன்முறை மருந்து தெளிக்கும் போது பூச்சிகள் இறக்கும். அதன் அடுத்தகட்ட தலைமுறை, எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி விடுவதால் மருந்து பயனின்றி போகும் நிலை உருவாகும். இதனால் பூச்சியை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை வாயிலாக மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பூச்சி மேலாண்மையால் எப்படி கட்டுப்படுத்துவது? முதலில் மஞ்சள் நிறத்தில் எண்ணெய் தடவிய அட்டையை வைத்து பூச்சியை ஈர்க்க வேண்டும். இதன் வாயிலாக பாதியை கட்டுப்படுத்தலாம். பல்கலை தரப்பில் ஒட்டுண்ணி தயாரித்து வழங்கப்படுகிறது. அதை பத்து மரத்திற்கு ஒன்று என மரத்தில் கட்டி தொங்கவிடவேண்டும். ஒருவர் ஒரு நிலத்திற்கு இதை செய்வதால் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலாது. விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைந்த மேலாண்மையை பின்பற்ற வேண்டியது அவசியம்.
வாடல் நோய் தென் மேற்கு மலைப்பகுதிகளில் உள்ள இடங்களில் துவங்கி, வேகமாக பிற தோட்டங்களுக்கும் பரவி வருகிறது. ஆரோக்கியமற்ற மரங்களே முதலில் பாதிக்கப்படுகின்றன. இதற்கு மரங்களை வலுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வேளாண் அதிகாரிகள் தோட்டங்களுக்கு சென்று, செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர். விவசாயிகள் பல்கலையில் அளிக்கும் திறன் மேம்பாடு பயிற்சி, ஒட்டுண்ணி போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் .
- ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.
- ஜெகநாதன் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி, அவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தனர்.
அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்று வழக்கை ரத்து செய்ய கோரிய ஜெகநாதன் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
- ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
- ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து உத்தரவு.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
துணை வேந்தருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பதவிக்கால நீட்டிப்புக்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.
அதன்படி, ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
- சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து 5 துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளது.
- துணைவேந்தர்கள் இல்லாததால் இந்த பல்கலைக்கழகங்களில் கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இவை தவிர மேலும் இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய துனைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களுக்கும் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
இவற்றில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 அக்டோபர் மாதம் முதலும், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 நவம்பர் மாதம் முதலும் சுமார் இரு ஆண்டுகளாக காலியாக உள்ளன. இப்போது இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது.
துணைவேந்தர்கள் இல்லாததால் இந்த பல்கலைக்கழகங்களில் கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களை விட அண்ணா பல்கலைக் கழகம் மிகப்பெரியது. அதிக பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கக் கூடியது. அத்தகைய பல்கலைக்கழகம் தலைமை இல்லாமல் இருந்தால் அதன் செயல்பாடுகள் அடியோடு முடங்கி விடும் ஆபத்து உள்ளது.
இவை தவிர புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாததால் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையவிருக்கிறது.
புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டிற்குள் பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இன்றி தடுமாறும் நிலை உருவாகும். உயர்கல்வி வளர்ச்சிக்கு இது நல்லதல்ல.
பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து அரசுக்கும், ஆளுனருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவே துணைவேந்தர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எந்த பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்பட வேண்டுமோ, அந்த பல்கலைக்கழகத்தின் விதிகள் மதிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள எந்த பல்கலைக்கழகத்தின் விதிகளிலும், பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்ற பிரிவு இல்லாததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைதான் சரியானது.
அதுமட்டுமின்றி, வேந்தர் என்ற முறையில் தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படும் 3 பேர் கொண்ட பட்டியலில் இருந்து ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டும்தான் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, தேடல் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை.
மாறாக, தேடல் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசிதழில் வெளியிடும் அதிகாரம் உயர்கல்வித்துறை செயலாளருக்கு உண்டு. அதை ஆளுனரால் தடை செய்ய முடியாது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் இருப்பதால்தான் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெற்று 5 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
அதுமட்டுமின்றி, பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்குழு, ஆட்சிக்குழு, பேரவைக்குழு ஆகியவற்றை நியமிக்கும் முறைகள், அதிகாரம் ஆகியவை குறித்த விதிகள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மாறுபடுவதால், அனைத்துப் பல்கலைக்கழகளுக்கும் ஒரே மாதிரியான விதிகளை உருவாக்கும் வகையில் பொது பல்கலைக்கழக சட்டம் இயற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார்.
- திருவள்ளுவனின் பதவி காலம் வரும் டிசம்பர் 12ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நடவடிக்கை.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதை அடுத்து, உரிய தகுதி இல்லாத 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டது.
முறையான பதிலை தராமல் காலம் கடத்திய திருவள்ளுவனின் பதவி காலம் வரும் டிசம்பர் 12ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புகார் தொடர்பாக 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- திட்டமிட்ட பழிவாங்கும் போக்கை ஆளுநர் கைவிட வேண்டும்.
- துணைவேந்தர் மீதான பணியிடை நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
தஞ்சை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார் எழுந்ததை அடுத்து, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கை ஆளுநரின் பழிவாங்கும் செயல் என்றும் துணைவேந்தர் மீதான பணியிடை நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ( டிசம்பர்12), திடுமென அவரைப் பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
2017 - 2018ம் ஆண்டில் நடந்த நாற்பது பேருக்கான பேராசிரியர் பணிநியமனங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றாலும், அவர்களின் "தகுதிகாண் பருவம்" நிறைவடைந்த நிலையில் ஆட்சிமன்றக் குழுவின் (சிண்டிகேட்) ஒப்புதலுடன் அவர்களுக்கான பணிநிரந்தர ஆணையை வழங்கியுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்னும் நிபந்தனையுடன் தான் இந்த ஆணையை அவர் வழங்கியுள்ளார். இந்த பணிநிரந்தர நடவடிக்கைக்கு எதிராகவே ஆளுநர் துணைவேந்தரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்.
பணிநியமனத்துற்கும் தற்போதைய துணைவேந்தருக்கும் தொடர்பில்லை. தகுதிகாண் பருவம் நிறைவடைந்த நிலையில் ஆட்சிமன்றக் குழுவின் முழுமையான ஒப்புதலுடன்தான் பணிநிரந்தரம் செய்துள்ளார். அதுவும் நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது அதற்கேறப பணிநிரந்தர ஆணை மீளாய்வுக்குட்படுத்தப்படும் என்கிற நிபந்தனையுடன்தான் அவ்வாணையை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், ஆட்சிமன்றக் குழுவின்ஒப்புதலைப் பெறாத ஒரு விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு ஆளுநர் கோரிய விளக்கம் அளிக்கவில்லை என்று அவர்மீது குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆளுநர் அவர்களின் இந்த நடவடிக்கை திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய பழிவாங்கும் நடவடிக்கையே ஆகும்.
முனைவர் திருவள்ளுவன் அவர்கள் பல்கலைக் கழகத்தில் இயங்கும் சில சாதியவாத ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலுக்குப் பணியாமல் நேர்மைத் திறத்தோடு துணிவாக தனது கடமைகளை ஆற்றினார் என்பதும்; திராவிட இலக்கியங்கள் மற்றும் பொதுவுடைமை சிந்தனைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, பல்வேறு நிகழ்வுகளைப் பல்கலைக் கழக வளாகத்தில் ஒருங்கிணைத்தார் என்பதும்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கொண்டு காணொளி வழியாக (வீடியோ கான்ஃபரன்ஸ்), பொதுவுடைமை 'கவிஞர் தமிழ்ஒளி' அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்ததுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார் என்பதும்; ஆளுநரின் விருப்பறிந்து துணைவேந்தர் இயங்கவில்லை என்பதும் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்குக் காரணமெனத் தெரியவருகிறது.
திராவிட அரசியலுக்கும் திமுக அரசுக்கும் ஆதரவாகவே துணைவேந்தர் செயல்படுகிறார் என அவருக்கு எதிரான சக்திகள் தொடர்ந்து கோள்மூட்டியதையடுத்து, ஆளுநர் அவர்கள் ஆத்திரம் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். எனவே, இத்தகைய பழிவாங்கும் போக்கை கைவிட்டு, துணைவேந்தர் மீதான நடவடிக்கையை அவர் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
- யுஜிசி பிரதிநிதியை சேர்க்காமல் இருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.
துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக புதிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரை தவிர்த்து தேடுதல் குழுவை நியமித்து உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டதாக ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆளுநர் தரப்பிலான பிரதிநிதி, பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் பிரதிநிதி, யுஜிசி பிரதிநிதியை உள்ளடக்கி குழு அமைக்க வேண்டும் என்றும் மதுரை காமராஜன் பல்கலைக்கு துணை வேந்தரை தேர்வு செய்ய புதிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, யுஜிசி பிரதிநிதியை சேர்க்காமல் இருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டுள்ளார்.