என் மலர்
நீங்கள் தேடியது "கூரைவீடு"
- பண்ருட்டி ஒன்றியம்பத்திரக்கோட்டைகாலனிஅம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சிவமணி(45)
- இவரது கூரை வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
கடலூர்:
பண்ருட்டி ஒன்றியம்பத்திரக்கோட்டைகாலனிஅம்பேத்கார் நகரை சேர்ந்தவர் 45) ,இவரது கூரை வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு மேலும் பரவாமல் தீஅணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுபா கொற்கை கிராமத்தில் உள்ள தனது அம்மாவீட்டிற்கு சென்றிருந்தார்
- வீட்டில் இருந்த பொருட்கள் பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.18 ஆயிரம் என அனைத்தும எரிந்து நாசமாகியுள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள மன்னிப்பள்ளம் தெற்குத் தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர்.
இவருடைய மனைவி சுபா (வயது 34).
பாஸ்கர் கேரளாவில் வேலை பார்த்துவருகிறார். சம்பவத்தன்று சுபா கொற்கை கிராமத்தில் உள்ள தனது அம்மாவீட்டிற்கு சென்றிருந்தார்.
அன்று இரவு பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் சுபாவின் வீடு எரிந்துகொண்டு இருப்பதாக செல்போன் மூலம் அவருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சுபா தனது சகோதரருடன் மன்னிப்பள்ளம் சென்று பார்த்தபோது தனது வீடு முற்றிலும் எரிந்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.18 ஆயிரம் என அனைத்தும எரிந்து நாசமாகியுள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ எவ்வாறு பிடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.
- மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் பெரிய சாவடி குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (வயது45). கீற்று முடியும் தொழில் செய்யும் இவரது கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகருகே கூறைவீடு இருந்ததால் 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கலைவாணன் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜெயக்குமார் ஜெய பிரதாபன் , மணிமாறன், ஜெகதீஷ், கருணாநிதி , சுரேஷ், பிரேமா, நடராஜன் உள்ளிட்ட 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முதலுதவி பெற்று 12 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கருணாநிதி. சுரேஷ். சரவணன் ஆகிய மூன்று பேர் பேர் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ் நிஷா சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.