என் மலர்
நீங்கள் தேடியது "வீர மரணம்"
- திருவாரூரில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீ தொண்டு நாள் நிகழ்வு நடைபெற்றது.
- ஒரு வாரம் முழுவதும் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும்.
திருவாரூர்:
தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணிகளின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருவாரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீ தொண்டு நாள் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் வடிவேலு மற்றும் உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் தீ தொண்டு நாளை முன்னிட்டு ஒரு வாரம் முழுவதும் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சாரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
- பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி" என்று கல்வித் துறையினர் மாற்றியுள்ளனர்.
- நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதிலிருந்து 'பாஜக' என்று மாற்றுவது ஒன்றுதான் இன்னும் நடக்காமல் இருக்கிறது
1965இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வீரமரணமடைந்தவர் இந்திய ராணுவ வீரர் அப்துல் ஹமீத். போரில் 8 பாகிஸ்தான் பீரங்கிகளை அழித்த அப்துல் ஹமீத் 9வது பீரங்கியை தாக்கும்போது வீரமரணமடைந்தார். பரம் வீர் சகாரா பெற்றவர் இவர்.
உத்தரப் பிரதேசம் காஜிபூர் அருகே ஜகானியன் தாலுகாவின் கீழ் உள்ள தாமுபூர் கிராமத்தை சேர்ந்தவர் இவர். அங்கு இயங்கி வரும் அரசு பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்பு, பள்ளியில் பெயிண்ட் அடித்தபோது, பள்ளியின் பெயரை "பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி" என்று கல்வித் துறையினர் மாற்றியுள்ளனர்.
இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கல்வித் துறை அதிகரிகள், சுவரின் ஹமீத்தின் பெயரை எழுதி அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.
இருப்பினும், ஹமீத்தின் பேரன் ஜமீல் அகமது, இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். "தேசத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்த ஒரு போர் வீரரின் பெயரை அழித்தது மன்னிக்க முடியாத தவறு" என்று அகமது கூறினார்.
மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இன்று (பிப்ரவரி 18) பள்ளியின் பெயர் பிரதான நுழைவாயிலில் 'ஷாஹீத் வீர் அப்துல் ஹமீத் பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி' என்று மாற்றப்பட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சித் தலைவரும் முன்னாள் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ் இந்த விவகாரத்தில் பாஜக தலைமையிலான மாநில அரசை கடுமையாக சாடினார். "நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்கள் மற்றவரை விட குறைவான முக்கியத்துவத்தைப் பெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் அநாகரீகமானது.
இப்போது நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதிலிருந்து 'பாஜக' என்று மாற்றுவது ஒன்றுதான் இன்னும் நடக்காமல் இருக்கிறது என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சுதந்திரம் பெறுவதிலும் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதிலும் எந்தப் பங்கையும் வகிக்காதவர்கள், தியாகிகளின் முக்கியத்துவத்தை எப்படி அறிந்திருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.