search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.பி.எல் டி20"

    • டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு 67-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.
    • புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்து விட்டது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 67-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது. தொடர்ந்து 68-வது லீக் ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    • பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது.
    • ராஜஸ்தான் அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

    16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் தரம்சாலாவில் இன்று நடைபெற்ற 66வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ல் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னும், அதர்வா தாயீட்19 ரன்னிலும், ஷிகர் தவான் 17 ரன்னிலும், லிவிங்ஸ்டோன் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இதனால் பஞ்சாப் அணி 50 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது. 5வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா ஜோடி 64 ரன்கள் சேர்த்த நிலையில், ஜிதேஷ் சர்மா 44 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 49 ரன்னும், ஷாருக் கான் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக தேவ்தட் படிக்கல் 51 ரன்களும், யாஷவி ஜெய்ஸ்வால் 50 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மியர் 46 ரன்களும், ரியான் பராக் 20 ரன்களும், சஞ்சு சாம்சன் 2 ரன்களும் எடுத்தனர். ஜோஸ் பட்லர் ரன் எடுக்காமல் அவுட்டானார். துருவ் ஜூரல் 10 ரன்களும், டிரெண்ட் பவுல்ட் ஒரு ரன் எடுத்தனர்.

    இந்த ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றிப்பெற்றது. 

    • இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (திங்கட்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி 2 வெற்றி (லக்னோ, மும்பைக்கு எதிராக), 2 தோல்வி (குஜராத், ராஜஸ்தானுக்கு எதிராக) கண்டுள்ளது.

    ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளது. பேட்டிங்கில் டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, கேப்டன் டோனி, பந்து வீச்சில் ஜடேஜா, துஷர் தேஷ்பாண்டே நல்ல நிலையில் உள்ளனர்.

    சென்னை போன்றே பெங்களூரு அணியும் 2 வெற்றி (மும்பை, டெல்லிக்கு எதிராக) 2 தோல்விகளுடன் (கொல்கத்தா, லக்னோவுக்கு எதிராக) 4 புள்ளிகளை பெற்றுள்ளது. பெங்களூரு அணியில் கேப்டன் பிளிஸ்சிஸ் (2 அரைசதம் உள்பட 197 ரன்), முன்னாள் கேப்டன் விராட் கோலி (3 அரைசதத்துடன் 214 ரன்), மேக்ஸ்வெல் (ஒரு அரைசதத்துடன் 100 ரன்) ஆகியோர் பேட்டிங்கின் தூண்களாக உள்ளனர். உள்ளூரில் ஆடுவதால் வரிந்து கட்டி நிற்பார்கள். இவர்களை கட்டுப்படுத்த தவறினால் எதிரணியின்பாடு திண்டாட்டம் தான். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    குறைவான பவுண்டரி தூரம் கொண்ட இங்கு ரசிகர்கள் ரன் மழையை தாராளமாக எதிர்பார்க்கலாம். இங்கு இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களில் 57 சிக்சர்கள் அடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

    • லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது.
    • அதிகபட்சமாக சிகந்தர் ராசா அரை சதம் எடுத்து 57 ரன்களில் வெளியேறினார்.

    16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

    கைல் மேயர்ஸ் 29 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 2 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்ட்யா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    ஸ்டாய்னிஸ் 15 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 74 ரன்னில் அவுட்டானார்.

    பஞ்சாப் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக சிகந்தர் ராசா அரை சதம் எடுத்து 57 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து, மேத்யூ ஷார்ட் 34 ரன்களும், ஹர்பீத் சிங் பாட்டியா 22 ரன்களும், சாம் குர்ரன் மற்றும் பஹர்பீத் பிரார் தலா6 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 4 ரன்களும் எடுத்தனர். ஷாருக்கான் 13 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடினார். இறுதியாக களமிறங்கிய ரப்பாடா ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.

    இறுதியில் 19.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

    ×