என் மலர்
நீங்கள் தேடியது "பொதிகை எக்ஸ்பிரஸ்"
- ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
- ரெயில்வே போலீசார் முத்து முனியாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருமங்கலம்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து கடந்த 16-ந் தேதி மாலை 6.15 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தை கடந்து செல்லும்போது இரவு 9.20 மணி அளவில் முன்பதிவு இல்லாத பெட்டியில் மர்ம நபர்கள் சிலர் திடீரனெ கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் ரெயிலில் பயணித்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த கலா (வயது28), தென்காசி அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வி ஆகியோர் படுகாயமடைந்தனர். கலாவுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே 2 பெண்களும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி ஆலோசனையில் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் தனிப்படை அமைத்து கல்வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது திருமங்கலம் கூழையாபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் முத்து முனியாண்டி(20) என தெரியவந்தது. அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் இவர் சம்பவத்தன்று போதையில் ரெயில் மீது கல்வீசியுள்ளார்.
இதையடுத்து ரெயில்வே போலீசார் முத்து முனியாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தண்டவாளத்தின் நடுவே 10 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.
- போலீசார் தண்டவாளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் தினமும் மாலை 6.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படுகிறது. பின்னர் கடையநல்லூர், பாம்புகோவில், ஸ்ரீவில்லி புத்தூர் வழியாக சென்னைக்கு சென்றடைகிறது.
நேற்று மாலை வழக்கம்போல் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. 6.50 மணிக்கு கடையநல்லூர் ரெயில் நிலையத்திற்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது.
இந்த ரெயில் கடையநல்லூர்-பாம்புகோவில் ரெயில் நிலையங்களுக்கு இடையே போகநல்லூர் பகுதியில் சென்றபோது அங்கு தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.
இதனைப்பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் சுதாரித்துக்கொண்டு ரெயிலை மெதுவாக இயக்கியவாறு அதனை நிறுத்தினார். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்களை அகற்றினர். பின்னர் மீண்டும் அங்கிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது.
ஏற்கனவே கடந்த மாதமும் சங்கனாப்பேரி பகுதியில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பதற்காக அவர்கள் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தது தெரிய வந்தது.
கடந்த ஒரு மாதமாக ரெயில்வே போலீசார் கடையநல்லூரில் இருந்து பாம்பு கோவில் சந்தை வரை தண்டவாளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு சென்றனர். இந்த நிலையில் தான் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
எனவே தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.