search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் நேர்காணல் முகாம்"

    • 435 மனுக்களை விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • பயனாளிகளுக்கு ரூ. 70,73,002 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருலோகி ஊராட்சி மாரியம்மன் கோவிலில் "மக்கள் நேர்காணல் முகாம்" நடைபெற்றது. ராமலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

    இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம்.

    கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 200 பயனாளிகளுக்கு ரூ. 70,73,002 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அவர் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பில் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து செல்வம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் அண்ணா துரை, மாவட்ட குழு உறுப்பினர் இளவரசி சின்னசாமி, திருலோகி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
    • நலத்திட்ட உதவிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமால் தலைமை தாங்கினார்.

    வட்டாச்சியர் ரமேஷ்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் ஆய்வாளர் ரம்யா வரவேற்றார்.

    இம்முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை,கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை என வருவாய் துறை சார்பில் 28 பயனாளி களுக்கும், இலவச வீட்டுமனை பட்டா 3 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கும் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 285 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.

    இதில் தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    முன்னதாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.

    • மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் நடைபெற்று வந்தது.
    • காமில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்று கொள்ளலாம்

    தஞ்சாவூர்

    தமிழ்நாட்டில் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969-ம் ஆண்டு முதல் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் நடைபெற்று வந்தது.

    இந்த மக்கள் நேர்காணல் முகாம் தொடர்ந்து நடத்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாகம் பிரிவின் படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சை வட்டம் ராமாபுரம் சரகம் திருவேதிக்குடி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்த ஆணையிடப்பட்டு உள்ளது.

    எனவே இந்த முகாமில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்று கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    ×