search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொபைல் செயலி"

    • TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
    • முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிப்பு.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    பயணிகளிடம் இருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயண திட்டமிடலுக்கு ஏதுவாக தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதனை 90 நாட்கள் என உயர்த்தி 18-ந்தேதி (திங்கட்கிழமை) இன்று மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6000 ரொக்கம் மத்திய அரசு வழங்கி வருகிறது.
    • மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ெடல்லியில் தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் விவசாயிகள் மத்திய அரசின் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6000 ரொக்கம் மத்திய அரசு வழங்கி வருகிறது.

    இந்த நிலையில் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ், முக அங்கீகார அம்சத்துடன் கூடிய பிரதமரின் வேளாண் மொபைல் செயலியை மத்திய வேளாண் மற்றும் விவசா யிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ெடல்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி யில், நாடு முழு வதிலு மிருந்து ஆயி ரக்கணக்கான விவசாயி கள், மத்திய, மாநில அரசு அதி காரிகள், பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் வேளாண் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் காணொலிக் காட்சி வாயி லாக கலந்து கொண்டனர்.

    இந்த செயலி மூலம் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் அல்லது கைரேகை யில்லா மல், மின்னணு வாயிலான வாடிக்கையா ளர் விவ ரங்களை பூர்த்தி செய்ய முடியும். அத்துடன் மற்ற விவசாயிகளுக்கும் உதவ முடியும். இதன் மூலம் மாநில அரசு அதிகாரி ஒருவர், 500 விவசாயிகளின் மின்னணு வாயிலான வாடிக்கை யாளர் விவ ரங்களை சரிபார்க்க முடியும்.

    இது குறித்து பேசிய மத்திய மந்திரி தோமர், பிரதமரின் வருவாய் ஆத ரவுத் திட்டத்தின் மூலம் சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு தவணை முறையில் நிதியளிக்கப்படு கிறது. இதன்மூலம் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விவசாயிகளுக்கு நிதி கிடைக்கிறது.

    இந்த தொழில்நுட்பத் தின் மூலம் பெரும் எண்ணிக்கை யிலான விவசாயிகளுக்கு தற்போது உதவ முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.

    • கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
    • அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜை சந்தித்து மனு கொடுத்தனர்.

    சென்னை:

    சென்னையில் மொபைல் செயலி மூலம் உபர், ஓலா நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் கார், ஆட்டோக்கள் வாடகை கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி உள்ளது.

    பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்திற்கும் இந்த வசதியை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இந்த செயலி மூலம் தற்போது ரேபிடோ பைக் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இருசக்கர வாகனத்தில் தாங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்லும் இந்த வசதி பிரபலம் ஆகி வருகிறது. சென்னையில் எந்த பகுதியில் இருந்தும் தனிநபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு அழைத்துச் செல்வார்.

    இதற்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ, காரை விட இதற்கு கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதிகாலை முதல் இரவு வரை இந்த வசதி கிடைக்கிறது.

    சமீபத்தில் ரேபிடோ வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனமும் ரெயில் நிலைய பெண் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியது. பெண் பயணிகளை மோட்டார் சைக்கிளில் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இவர்கள் அழைத்து செல்கின்றனர். ரேபிடோ பைக் வசதி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆட்டோ மற்றும் வாடகை கார் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரேபிடோ பைக் வசதியை சென்னையில் தடை செய்ய வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். மொபைல் செயலிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் இணைக்கப்பட்டு சவாரி ஏற்றப்படுகிறது. இது மோட்டார் வாகன சட்டத்திற்கு விரோதமானது.

    பயணிகளுக்கு பாதுகாப்பற்றது. மெட்ரோ ரெயில் நிர்வாகம் இதனை ஏற்றுக் கொண்டு பெண்களை பயன்படுத்தி வருவது தவறான முன் உதாரணமாகும். ஆதலால் இதனை தடை செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பால சுப்பிரமணியம், கமிஷனரிடம் வலியுறுத்தினார்.

    இதையடுத்து போக்குவரத்து கமிஷனர் நாளை தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையில் 5 நாட்களுக்குள் 'ரேபிடோ' பைக் வசதியை முழுமையாக தடை செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

    ×