search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருபகவான்"

    • இங்குள்ள இறைவன் திருவடி நர்மதை ஆற்றின் கரையிலிருந்த கற்களால் செதுக்கப்பட்டது என்பது வியக்க வைக்கும் செய்தி.
    • சம்பந்தர் காரோணம் என்று பதிகம் பாடியது இங்குதான் என்று சொல்லப்படுகிறது.

    மகாமகம் சம்பந்தப்பட்ட இன்னொரு முக்கியமான சிவ ஸ்தலம் இது.

    மகா பிரளயத்தின் போது மிதந்து வந்த அமுத கும்பத்தை சிவபெருமான் சிதைத்தார்.

    அப்போது அமுத கலசத்தை தாங்கிக் கொண்டு வந்த "உறி", இந்த இடத்தில் விழுந்து பின்னர் லிங்கமாக மாறிற்று.

    உறிக்கு மறு பெயர் சிக்கம். எனவே இந்த சிவலிங்கத்திற்கு முதலில் சிக்கேசர் என்று பெயர் வந்தது.

    நவகிரகங்களில் ஒன்றான சந்திரன் தான் செய்த தவறுக்காக குருவான பிரகஸ்பதியின் சாபத்திற்கு உள்ளானான்.

    தனது சாபத்தைப் போக்க சிவபெருமான் தான் கருணை காட்ட வேண்டுமென்று எண்ணி இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவபெருமானான சிக்கேசரை வழிபட்டு வந்தான்.

    தினமும் தான் நீராடுவதற்காக இங்குள்ள இறைவன் சன்னதிக்கு வலப்புறத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான் சந்திரன்.

    இறைவனும் சந்திரனுடைய வேண்டுகோளை ஏற்று இறைவனும் அவனுக்குத் தரிசனம் தந்தார்.

    எனவே இறைவனுக்கு சிக்கேசர் என்ற பெயர் மாறி சோமேஸ்வரர் என்று புதுப் பெயர் வந்தது. அம்பாளுக்கு சோமநாயகி என்று பெயர் உண்டாயிற்று.

    வியாழ பகவான் இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டதால் வியாழ சோமேஸ்வரர் என்றும் பெயர் உண்டு.

    மகப்பேறு வேண்டும் என்பதற்காக பராந்தக சோழன் இந்த லிங்கத்தை வழிபட்டதால் லிங்கம் சோழீசர் என்று பெயர்க்காரணம் ஏற்பட்டது.

    இத்தலத்திலிருக்கும் தேனார் மொழியம்மை இறைவனது திருமேனியை ஆரோகணித்ததால் காரோணம் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

    இங்குள்ள இறைவன் திருவடி நர்மதை ஆற்றின் கரையிலிருந்த கற்களால் செதுக்கப்பட்டது என்பது வியக்க வைக்கும் செய்தி.

    சம்பந்தர் காரோணம் என்று பதிகம் பாடியது இங்குதான் என்று சொல்லப்படுகிறது.

    சந்திரதோஷம், குருதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் விலகும்.

    மாதவரை விட தூமகேது இங்குள்ள வருண தீர்த்தத்தால் இறைவனுக்கு சதா சர்வ காலமும் பூஜை செய்து வணங்கி வர இறைவனும் தூமகேதுவுக்கு காட்சியளித்தார்.

    தூமகேதுவின் வேண்டுகோள்படியே இறைவன் இங்கு நிரந்தரமாக தங்கி தூமகேதுவுக்கு அருள் பாலிக்கிறார்.

    இங்குள்ள தீர்த்தம் தூமகேது தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

    • குரு தளங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
    • கோவில்களில் மக்கள் குவிந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இன்று மாலை சரியாக 5.19 மணிக்கு இடம்பெயர்ந்தார்.

    குரு பெயர்ச்சியையொட்டி பிரசித்த பெற்ற குரு தளங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார கோயில்களில் சிறப்பு யாகமும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் காலை முதலே கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக, ஆலங்குடி குரு பகவான் கோயில், திட்டக்குடி குரு கோயில், ஆவடி அருகே பாடியில் அமைந்துள்ள சிவன் கோயிலிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

    கோவில்களில் மக்கள் குவிந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    • நேற்று குருவார சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
    • நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றது

    திருவாரூர் :

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு உரிய கோவிலாகும். இங்கு நேற்று குருவார சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதனை முன்னிட்டு கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

    மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதை போல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசசனம் செய்தனர்.

    • ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • சிவாலயங்களில் வியாழக்கிழமையையொட்டி குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.

    உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையையொட்டி குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பிலும் சிறப்பு.
    • இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மை தழும்புகள் இருப்பதை காணலாம்.

    நவக்கிரக தலங்களில் குரு தலமாக குடந்தை வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98-வது தலம்.

    இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி, குருதட்சணாமூர்த்தி, ஆதலின் இதை தட்சிணாமூர்த்தி தலம் என்பர். விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூஜித்த தலம்.

    அம்பிகை இத்தலத்தில் தோன்றி தவம் செய்து இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம். இப்போதும் இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மை தழும்புகள் இருப்பதை காணலாம்.

    உள்பிரகாரங்களில் கலங்காமல் காத்த விநாயகர், முருகன், லட்சுமி, நால்வர், சூரியேசர், சோமேசர், குருமோசேசுரர், சோமநாதர், சப்தரிஷிநாதர், விஷ்ணு நாதர், பிர்மேசர் ஆகிய சப்தலிங்கங்களோடு காசிவிசுவநாதர், விசாலாட்சி, அகத்தியர் முதலியவரும் உள்ளனர்.

    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறை கூட மாசியில் மாற்றி விடுவார்களாம் பெண்கள்.

    குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும். அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பிலும் சிறப்பு. குருபெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

    இங்கு குருவின் நேரடி தரிசனம் கிடையாது. தட்சிணாமூர்த்தியே இங்கு குருவாய் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார். இவரையே குருவாக கருதி வழிபடுகின்றனர்.

    இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்வித தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாக கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், ஆலமரத்தின் கீழிருந்து அறமுரைத்த பெருமானுக்குரிய தலமாதலாலும் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றிய ஆலத்தை உண்டு அமரர்களைக் காத்தருளிய இறைவன் வீற்றிருப்பதாலும் ஆலங்குடி என்று பெயர் பெற்றது.

    தட்சிணாமூர்த்தி இத்தலத்தின் சிறப்புக் கடவுளாக விளங்குகிறார். வியாழக்கிழமையில் இம்மூர்த்தியை வழிபடுவோர் எல்லா நலங்களும் பெறுவர்.

    நாகதோஷ முடையவர்கள் இத்தலத்தை வழிபட்டு தோஷம் நீங்கப் பெறுகின்றன. தெட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.

    ஒவ்வொரு வீட்டிலும் குரு இருந்தால் என்ன பலன்?

    குரு 1 -ம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள்.

    குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார்.

    குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நன்றாக பேசுவார்கள் இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.

    குரு 3 -ம் வீட்டில் இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும்.

    குரு 4 -ம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாயம் சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும்.

    குரு 5 -ம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும்.

    குரு 6 -ம் வீட்டில் இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம்.

    சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும்.

    குரு 7 -ம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும். மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு.

    குரு 8 -ம் வீட்டில் இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர்வதை இல்லாமல் போகும்.

    குரு 9 -ம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார்.

    வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும்.

    குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார்.

    குரு 11 -ம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்க்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும்.

    குரு 12 -ம் வீட்டில் இருந்தால் ஒழுகத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார்.

    • காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது.
    • மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    சனிபகவான் திட்டை தலத்திற்கு எழுந்தருளி வேதாகம முறைப்படி வேதமுதல்வனைப் பூஜித்து ஆயிரம் ஆண்டுகாலம் கடும் தவம் புரிந்தார் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள ஈசனைத் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் சந்திரன். பசு, குதிரை, மான் தாகம் தீருவான் வேண்டி பசு தீர்த்தத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தார் ஈசன். விஷ்ணு அரசமரமாகவும, லக்ஷ்மி வில்வமரமாகவும் இருந்து இறைவனுக்கும், இறைவிக்கும் திருத்தொண்டு செய்தனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.. கௌதமர், ஆதிசேடன், காமதேனு பூசித்த திருவூர்.

    சுமாலி என்பவர் தேர் அழுந்திய இடமாதலின் 'ரதபுரி' என்றும் காமதேனு வழிபட்டதால் 'தேனுபுரி' என்றும் ரேணுகை வழிபட்டதால் 'ரேணுகாபுரி' என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.

    காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை 'பஞ்சலிங்கஷேத்திரம்' என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு 'சந்திரகாந்தக்கல்' பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக சிலபடிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    இத்திருக்கோவிலில் குருபகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வர் ஆவார். ஒரு காலத்தில் தென்குடித்திட்டை என்ற பெயரால் விளங்கிய இவ்வூர் தற்போது திட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கொடிமரம், கோபுரகலசம், சுவாமிபுஷ்கரணி, கருங்கற்களால் அமைந்தகோவில் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், பைரவர், குருபகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன.

    அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

    ரயில் நிலையம் : திட்டை

    பஸ் வசதி : உண்டு

    தங்கும் வசதி : இல்லை

    உணவு வசதி : இல்லை

    • குருவித்துறை குரு பகவான் கோவிலி்ல் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை நடந்தது.
    • சப் இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலை லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இதில் வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகார யாகங்கள், மகா அபிஷேகம் ஆகியவை நடந்தது.

    சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×