search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டீபன் பிளமிங்"

    • தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
    • விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என பிசிசிஐ தெரிவித்தது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

    டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தற்போது தொடங்கியது.

    இதற்கிடையே, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என பி.சி.சி.ஐ. நேற்று தெரிவித்தது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.

    புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் ஜூலை 1 முதல் பொறுப்பேற்பார் என்றும், அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2027 அன்று முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அல்லது நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

    • ஒவ்வொருவரும் எப்போதும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க இயலாது.
    • ருதுராஜ் கெய்க் வாட்- ரச்சின் ரவீந்திராவின் தொடக்கம் நீடிக்கும்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சை இன்று எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. குஜராத் அணி நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 6 ரன்னில் வீழ்த்தியது. இதனால் 2-வது வெற்றியை பெறப் போவது சென்னையா? குஜராத்தா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    சி.எஸ்.கே. மோதும் ஆட் டத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

    குஜராத்துடன் இன்று மோதும் ஆட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீ பன் பிளமிங் கூறியதாவது:-

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொருவரும் எப்போதும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க இயலாது. ஒரு வீரர் 75 ரன்னை எடுக்கும் போது அணிக்கு உதவியாக இருக்கும். ருதுராஜ் கெய்க் வாட்- ரச்சின் ரவீந்திராவின் தொடக்கம் நீடிக்கும்.

    தாக்கத்தை (இம்பேக்ட்) ஏற்படுத்தும் விதி அணியின் பேட்டிங்கை மேம்படுத்த உதவியது. அதை நாம் செயல்படுத்தும் விதம் மிகவும் முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.
    • பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இந்த தோல்விக்கு கொல்கத்தா அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காரணமாக இருந்தார் அவர் 4 ஓவர் வீசி 36 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ருதுராஜ் கெய்க்வாட், ரகானே ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார்.

    31 வயதான சென்னையை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கடந்த காலங்களில் சி.எஸ்.கே. அணி வீரர்களுக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

    2019-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8.4 கோடிக்கு எடுத்தது. பின்னர் 2020-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ரூ.4 கோடிக்கு வாங்கியது. வருண் சக்கரவர்த்தி இந்த சீசனில் இதுவரை 19 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஒட்டு மொத்தமாக 61 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்காதது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வருண் சக்கரவர்த்தி எங்கள் அணியின் வலை (நெட்) பயிற்சி பவுலராக சில காலங்களில் இருந்தார். அப்போது அவர் எங்களது பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பந்து வீசினார். தற்போது ஐ.பி.எல். போட்டியில் அவர் அபாரமாக பந்து வீசி வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.

    பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.

    இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

    • கேப்டன் டோனியின் கீப்பிங் திறமைக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என பேட்டி
    • காயம் காரணமாக விளையாட முடியாது என தெரிந்தால், அவரே விலகி வெளியில் இருந்துவிடுவார்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியின் காயம் கவலைப்படும் வகையில் இல்லை என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

    முந்தைய போட்டியின்போது காயமடைந்த டோனி நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் களமிறங்கியது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. இந்த போட்டியில் சென்னை அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இப்போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் கூறியதாவது:-

    பென் ஸ்டோக்ஸ் காயத்தால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மேலும் ஒரு வார காலம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவரது காயம் பெரிய அளவில் இல்லை. உடற்தகுதி பெறுவதற்கு மிகவும் கடினமாக உழைக்கிறார்.

    டோனியைப் பொருத்தவரை உடற்தகுதி நன்றாக இருக்கிறது. அவர் தனது காயத்தை சரியாக கையாள்கிறார். விளையாட தயாராக இருக்கிறார். அவர் எப்போதும் அணிக்கு முதலிடம் கொடுப்பார். காயம் காரணமாக தன்னால் அணிக்கு பங்களிப்பை வழங்க முடியாது என்று அவருக்குத் தெரிந்தால், அவரே விலகி வெளியில் இருந்துவிடுவார். அவரைப்பற்றி எந்த கவலையும் இல்லை. அதேசமயம் அவர் ஸ்டம்புக்கு பின்னால் கீப்பராக அவரது திறமைகளுக்கு போதுமான அங்கீகாரம் கிடைத்ததாக நான் நினைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×