search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொகுப்பு"

    • மருதாநல்லூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • ஏக்கருக்கு 100 சதவீத உரம் மானியமாக, யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றின் தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மருதாநல்லூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், மருதாநல்லூர் ஊராட்சியில் ஒரு ஏக்கருக்கு 100 சதவீத உரம் மானியமாக, யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றின் தொகுப்புகளை விவசா யிகளுக்கு, சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஊராட்சி தலைவர்கள் ரவி, சந்திர சேகரன், மாவட்ட பிரதிநிதி கரிகாலன், ஒன்றியக்குழு உறுப்பினர் சசிகுமார், ஊராட்சி துணை தலைவர் ராஜலெட்சுமி சேகர், முன்னாள் ஊராட்சி துணை தலைவர் சேதுராமன், உதவி வேளாண்மை அலுவலர் அலெக்ஸ்சாண்டர், மருதாநல்லூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கமல்ராஜ், துணை தலைவர் சிவசங்கரன், இயக்குநர்கள் தமிழரசி, செல்வம், தி.மு.க. கிளை செயலாளர்கள் குமார், வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றின் தொகுப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • இதில் தி.மு.க உறுப்பினர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ், கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் ஊராட்சியில் ஒரு ஏக்கருக்கு 100 சதவீதம் உரம் மானியமாக, யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றின் தொகு ப்புகளை, சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கும்பகோ ணம் ஊராட்சி ஒன்றிய தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், வேளாண்மை துறை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, உதவி இயக்குநர் தேவிகலாவதி, வேளாண் அலுவலர் தேன்மொழி, துணை அலுவலர் சாரதி, கும்பகோணம் அட்மா குழு தலைவர் ஆலமன்குறிச்சி குமார், ஊராட்சி தலைவர் வைஜெயந்தி சிலம்பரசன், ஒன்றிய குழு உறுப்பினர் தங்க.தியாகராஜன், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜன், பகுதி செயலாளர் கோவிந்தராஜ், ஊராட்சி துணை தலைவர் கண்ணன் மற்றும் உறுப்பினர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஏழைகளுக்கு ரம்ஜான் தொகுப்பு வழங்கப்பட்டது.
    • பாம்பே டையிங் உரிமையாளர் ஜாபர் வரவேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கு நோன்புப் பெருநாள் இலவச தொகுப்பு பொருட்கள் அருப்புக்கார தெரு ஜும்மா பள்ளிவாசலில் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்தாண்டும் இந்த தொகுப்பில் புத்தாடை, மளிகை பொருட்கள், இறைச்சி,அரிசி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. பள்ளிவாசலின் தலைவர் லியாகத்அலி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஆர்.டி.ஓ. சேக் முகமது,தொழிலதிபர் தீன் சேம்பர் அப்துல் முனாப், சமூக ஆர்வலர் பல் மருத்துவர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தொகுப்பு பொருட்களை வழங்கினர்.

    பாம்பே டையிங் உரிமையாளர் ஜாபர் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் ஷமது, பொருளாளர் ஸ்டார் சீனி முகமது ஆகியோர் செய்திருந்தனர்.

    ×