search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சலூன் கடைக்காரர்"

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பஸ் நிலையத்தில் செந்தில்ராஜா என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார்.
    • நாமக்கல் மாவட்டம் வேலூரில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் செந்தில்ராஜா மீது மோதியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பஸ் நிலையத்தில் செந்தில்ராஜா (41) என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் நங்கவள்ளி பஸ் நிலைய பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.

    சக்கரத்தில் சிக்கி பலி

    அப்போது நாமக்கல் மாவட்டம் வேலூரில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் செந்தில்ராஜா மீது மோதியது. இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி செந்தில்ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நங்கவள்ளி போலீசார் செந்தில்ராஜா உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பஸ்சை பறிமுதல் செய்தனர். மேலும் பஸ்சை ஓட்டி வந்த எடப்பாடி அருகே இருப்பாலியை சேர்ந்த டிரைவர் கண்ணன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சபரிநாதன் தனது வேலையில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்து வந்தார்.
    • உழைப்பாளர் தினத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    சேலம்:

    சேலம் மாரமங்கலத்துப் பட்டியை சேர்ந்த கோவிந்த ராஜ் மகன் சபரிநாதன், (வயது 35) சிகையலங்கார கலைஞரான இவர், அதே பகுதியில் 10 ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு காயத்திரி என்ற மனைவியும், யோகேஸ்வரன், என்ற 2 வயது மகனும் உள்ளனர்.

    சபரிநாதன் தனது வேலையில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்து வந்தார். மே தினத்தையொட்டி தொழிலாளர்களின் திறமையையும், பெருமையையும் உணர்த்தும் வகையில் அவர் உலக சாதனை படைக்க திட்டமிட்டார்.

    அதன்படி நேற்று முன்தினம் காலை 9.15 மணி முதல் நேற்று காலை 9.15 மணி வரை, 24 மணி நேரம் தொடர்ந்து 45 பேருக்கு கட்டிங் சேவிங், 47 பேருக்கு கட்டிங் மட்டும் என மொத்தம் 92 பேருக்கு இலவசமாக முடி திருத்தம் செய்தார்.

    இவரது சாதனையை அங்கீகரித்து, வேர்ல்டு சூப்பர் டேலண்ட் அமைப்பு சார்பில் சபரிநாதனை பாராட்டி சான்றிதழ் வழங்கியது. சபரிநாதனின் இந்த சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

    இது குறித்து சபரிநாதன் கூறுகையில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், என் முடி திருத்தும் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இலவசமாக 92 பேருக்கு 24 மணி நேரம் தொடர்ந்து முடிதிருத்தி சாதனை புரிந்துள்ளேன். உழைப்பாளர் தினத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    ×