search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லபாம்பு"

    • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மற்றொரு வார்டுக்கு உடனடியாக மாற்றினர்.
    • வன ஆர்வலர் செல்லா டெங்கு வார்டுக்கு வந்து கழிவறையில் இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார்.

    கடலூர்:

    கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் நோயாளி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அலறி அடித்து அங்கிருந்த ஊழியர்களிடம் பாம்பு இருப்பது குறித்து தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக கழிவறை கதவை மூடிவிட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மற்றொரு வார்டுக்கு உடனடியாக மாற்றினர். இதனை தொடர்ந்து வன ஆர்வலர் செல்லா டெங்கு வார்டுக்கு வந்து கழிவறையில் இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார். பிடிக்கப்பட்ட பாம்பை பாதுகாப்பாக பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு திடீர் பரபரப்பு நிலவியது.

    • லவ் பேர்ட்சை விழுங்கியதால் பாம்பின் உடல் பெருத்து விட்டது
    • நல்ல பாம்பால் வெளியேவர முடியாமல் சிக்கி இருப்பது தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த சித்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா. இவர் தனது வீட்டில் லவ் பேர்ட்ஸ் பறவைகளை கூண்டில் வைத்து ஆசையாக வளர்த்து வந்தார்.அந்த கூண்டை வீட்டு முன்பு உள்ள சுவற்றில் வைத்து இருந்தார்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை வீட்டின் முன்புறம் இருந்த லவ் பேர்ட்ஸ் பறவைகளின் கூண்டிற்குள் குறுகிய இரும்பு கம்பிகளுக்கு இடையே புகுந்து நல்லபாம்பு ஒன்று நுழைந்தது.

    அந்த பாம்பு லவ் பேர்ட்ஸ் பறவையை உயிருடன் விழுங்கியது. ஒருபறவையை விழுங்கிய பின்னர் அந்த பாம்பு மற்றொரு பறவையை பிடிக்க முயன்றபோது கத்தத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த ஜோஸ்வா வெளியே வந்து பார்த்த போது லவ் பேர்ட்ஸ் கூண்டுக்குள் நல்லபாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உயிருடன் இருந்த மற்றொரு லவ் பேர்ட்ஸ் பறவயை பத்திரமாக மீட்டார். லவ் பேர்ட்சை விழுங்கியதால் பாம்பின் உடல் பெருத்து விட்டது.

    இதனால் கூண்டின் சிறியகம்பிகளுக்கு இடையே புகுந்து நல்ல பாம்பால் வெளியேவர முடியாமல் சிக்கி இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த பாம்பையும் மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் லவ் பேர்ட்சை ருசித்த மகிழ்ச்சியில் நல்ல பாம்பு தப்பித்தோம் என்று அங்கிருந்து பாய்ந்து சென்றது. ஆனால் தனது ஜோடியை பறிகொடுத்த மற்றொரு லவ்பேர்ட்ஸ் கத்தியபடி பயத்தில் காணப்பட்டது.

    • விழுப்புரம் சிறுவந்தாடு அடுத்த மோட்சகுளம் கிராமத்தில் பெருமாள் என்பவரது வீட்டில் 5 அடி நல்லபாம்பு புகுந்து படம் எடுத்து ஆடியது.
    • அதனை பார்த்த பெருமாள் குடும்பத் தினர் பயத்தில் விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சிறுவந்தாடு அடுத்த மோட்சகுளம் கிராமத்தில் பெருமாள் என்பவரது வீட்டில் 5 அடி நல்லபாம்பு புகுந்து படம் எடுத்து ஆடியது. அதனை பார்த்த பெருமாள் குடும்பத் தினர் பயத்தில் விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில் விழுப்புரம் மாவட்ட உதவி தீயணைப்பு நிலைய அலுவலர் சிவசங்கரன் மேற்பார்வையில் நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பெருமாள் வீட்டுக்கு சென்றனர். அங்கு படம் எடுத்த ஆடிக்கொண்டிருந்த நல்ல பாம்பை அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு பிடித்தனர். பிடிக்கப்பட்ட நல்ல பாம்பினை வடபகுதி யில் உள்ள காட்டில் பத்திர மாக விட்டு சென்றனர் தீயணைப்பு வீரர்களின் இந்த செயல்களை பொது மக்கள் வெகுவாக பாராட்டி னார்.

    ×