search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்சவ விழா"

    • அலங்காநல்லூர் அருகே உள்ள மந்தை கருப்பணசாமி கோவில் உற்சவ விழா நடந்தது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஇலந்தைகுளம் ஆற்றங்கரை தென்புறம் உள்ளது மந்தைகருப்பண சுவாமி கோவில். இங்கு ஆனி மாத கிடாய் வெட்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு உற்சவ விழா நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கினர். விழா ஏற்பாடுகளை பழனிச்சாமி நாட்டாமை வகையறா, அலங்கார் பூசாரி வகையறா, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • வரதராஜ பெருமாளுக்கு வெட்டிவேர் பந்தல் அமைத்து சுகந்த பரிமல திவ்ய வஸ்துக்களுடன் வசந்த உற்சவ விழா தொடங்கியது.
    • வர மகாலட்சுமி சமேத பரவாசு தேவப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    தருமபுரி,

    தருமபுரி கோட்டை வரலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவிலில் ஸ்வஸ்தி ஸ்ரீ சோப கிருது வருடம் சித்திரை மாதம் 28 -ம் நாள் முதல் வரதராஜ பெருமாளுக்கு வெட்டிவேர் பந்தல் அமைத்து சுகந்த பரிமல திவ்ய வஸ்துக்களுடன் வசந்த உற்சவ விழா தொடங்கியது.

    இந்நிலையில் கடைசி நாளான நேற்று வர மகாலட்சுமி சமேத பரவாசு தேவப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் வசந்த உற்சவ விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மாரியம்மன் கோவில் பால்குட உற்சவ விழா நடந்தது.
    • அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவிலில் உள்ள குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் பால்குட உற்சவ விழா நடந்தது. மூங்கில் ஊரணியில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து பால்குடங்கள் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன் பின்னர் குண்டு முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

    உற்சவ விழா, அம்மன், Festival, Amman

    இதைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி கோவில் உற்சவ விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    பாலமேடு அருகே உள்ள வைகாசிபட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சாத்தியார் அணை அருகில் உள்ள கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி கோவில் உற்சவ விழா நடந்தது. அழகர்கோவில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கி பின்னர் அழகர்மலைக்கு திரும்பும் நாளில் இந்த கோவிலில் உற்சவ விழா நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு உப்பு, சேவல், காய்கறிகள், விைள பொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.

    அங்குள்ள கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமிக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிசேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • முளைக்கொட்டு உற்சவ விழா நடந்தது.
    • ஆலோசகர் தனசேகர் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசையில் பிள்ளைக்காத்த காளியம்மன், கோட்டைமுனி கருப்பணசாமி கோவிலில் 2-ம் ஆண்டு முளைக் கொட்டு உற்சவ விழா தர்மகர்த்தா சரவணன் தலைமையில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் இரவில் சமயராஜ், முனியாண்டி தலைமையில் ஒயிலாட்டம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடந்தன. இரவு இடையர் வலசை சக்தி வடிவேல் முருகன் கோவிலில் இருந்து அம்மன் கரகம் பிள்ளைக்காத்த காளியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. பக்தர்கள் அக்னிசட்டி, பால் குடம் எடுத்து வந்தனர். பொதுமக்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு எடுத்தும் வழிபாடு செய்தனர்.

    கருப்பணசாமிக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சியும், பொதுமக்களின் சார்பில் அன்னதானமும் நடந்தது.அம்மன் கரகம் தென் கடற்கரைக்குச் சென்று கடலில் பூஜிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா சரவணன், கோவில் கமிட்டி தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராம்கி, ஆலோசகர் தனசேகர் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    ×