என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐபிஎல் டிக்கெட்"
- சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
- டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சேப்பக்கத்தில் நடைபெறும் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. மற்றும் எல்.எஸ்.ஜி. அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளை ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10.40 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டிக்கெட்டுகளின் விலை ரூ. 1700, ரூ. 2 ஆயிரத்து 500, ரூ. 3 ஆயிரத்து 500, ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ. 6 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஐ.பி.எல். டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது.
- ரோகித் என்பவர் இந்த போலி இணையதளம் மூலம் 5 டிக்கெட்டுகளை பெற்று ரூ.8,250-யை இழந்துள்ளார்.
சென்னை:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது.
இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டன. டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆகவும், அதிகபட்சமாக ரூ.7,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஆன்லைனில் டிக்கெட் வாங்க முடியாமல் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இணையதளம் முடங்கியதால் அவர்கள் டிக்கெட் இல்லாமல் தவித்தனர்.
இந்த நிலையில் போலியான இணைய தளத்தில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. போலி ஐ.பி.எல். டிக்கெட்டுகளால் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.
மோசடியாளர்கள் ஐ.பி.எல். டிக்கெட்டுக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தைபோலவே போலியான இணைய தளத்தை உருவாக்கி உள்ளனர். புதிய கணக்கை பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டுகளை முன்கூட்டியே வழங்குவது போல் போலியான அந்த தளம் வடிவமைத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த விலையை விட (ரூ.1,700) குறைவான விலையாக ரூ.1,650 விலையில் போலியான டிக்கெட்டுகள் பட்டியலிடப்பட்டு இருந்தன.
சென்னை-பெங்களூரு போட்டிக்காக 'ஏ' மேல் தளம் கேலரியில் போலி இணையதளம் டிக்கெட் வழங்கியது. அப்படி ஒரு கேலரியே அங்கு இல்லை. இந்த கேலரி இடிக்கப்பட்டு புதிதாக நவீனமயமாக்கப்பட்டு கே.எம்.கே. ஸ்டாண்டாக அமைக்கப்பட்டுள்ளது.
பதிவை முடித்த பிறகு குறிப்பிட்ட யு.பி.ஐ. ஐ.டி.யில் பணம் செலுத்தி பரிவர்த்தனை விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்கும் வழக்கத்தில் இருந்து வேறுபட்ட கட்டண செயல்முறையின் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது.
கியூஆர்.குறியீட்டு மின் டிக்கெட்டை உடனடியாக வழங்கும் முறையான இணைய தளம்போல் இல்லாமல் 12 மணி நேரத்துக்கு முன்பு மட்டுமே பதிவு செய்யப்பட்ட முகவரியில் டிக்கெட்டுகள் இமெயில் செய்யப்படும் என்று இந்த மோசடி இணையதளம் அறிவித்து இருந்தது.
ரோகித் என்பவர் இந்த போலி இணையதளம் மூலம் 5 டிக்கெட்டுகளை பெற்று ரூ.8,250-யை இழந்துள்ளார். தொலைபேசியில் வந்த தொடர்பை தொடர்ந்து அவர் ஏமாற்றப்பட்டுள்ளார். இறுதி பரிவர்த்தனை பக்கங்களை பார்த்த பிறகுதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
ஐ.பி.எல். டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது.
இதனால் குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்கிறது என்று சிலர் போலி இணையதளம் மூலம் பணத்தை இழந்து ஏமாந்துள்ளனர்.
- ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெயரை அறிவித்து இந்த குழந்தையின் தாய் உடனடியாக வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு போலீசார் கூறினர்.
- குழந்தையின் தாயை காவல்துறையினர் கடுமையாக கண்டித்தனர்.
சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையே ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் நேற்று நள்ளிரவு முதலாகவே ஏராளமானோர் நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்குவதற்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் டிக்கெட் கவுண்டருக்கு வெளியே மூதாட்டி ஒருவர் ஒரு கையில் 6 மாத கை குழந்தையும் மற்றொரு கையில், இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குழந்தையும் பிடித்தபடி நீண்ட நேரமாக அங்கும் இங்குமாக பதட்டமாக யாரையோ தேடிக் கொண்டிருந்தார்.
இதுபற்றி மூதாட்டியிடம் விசாரித்தபோது, டிக்கெட் கவுண்டரில் இருந்த ஒரு பெண் இந்த இரு குழந்தைகளும் அந்த மூதாட்டியிடம் சிறிது நேரம் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறியதாக தெரிவித்தார்.
நீண்ட நேரம் ஆகியும் இரு குழந்தைகளையும் பெற யாரும் வராத நிலையில் மூதாட்டியின் கையில் இருந்த அந்த பச்சிளம் குழந்தை பசியால் அழுதது. மூதாட்டி என்ன செய்வது என்று தெரியாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.
இது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் காவல் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெயரை அறிவித்து இந்த குழந்தையின் தாய் உடனடியாக வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதனைக் கேட்டு அங்கு வந்த பெண் ஒருவர் மூதாட்டியின் கையில் இருந்த குழந்தையை பெற்றுக்கொண்டு இரு குழந்தைகளும் தனது பேரப்பிள்ளைகள் எனக்கூறி வேகமாக அங்கிருந்து நகர முற்பட்டார். இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த பெண் காவல் ஆய்வாளர் அந்த பெண்ணை கோபமாக தலையில் தட்டினார்.
மேலும் அந்த குழந்தையின் தாய் வந்தால் மட்டுமே குழந்தை ஒப்படைக்கப்படும் என அங்கிருந்த காவலர்கள் கூறியதை அடுத்து டிக்கெட் கவுண்டரின் வரிசையில் நின்று கொண்டிருந்த அந்த இரு குழந்தைகளின் தாயை அந்த பெண்மணி அழைத்து வந்தார்.
பின்னர் குழந்தையின் தாயை கடுமையாக கண்டித்த காவல்துறையினர் அந்த இரு பெண்களின் முகவரியையும் பெற்றுக் கொண்டு விசாரணைக்கு பின்னர் குழந்தையை ஒப்படைத்தனர்.
- கிரிக்கெட் பார்க்கும் ஆசையில் ஒருவர் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்க ஆசைப்பட்டு, ரூ.90 ஆயிரத்தை இழந்துள்ளார்.
- அருண்குமார், ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி அணிகள் மோதுகின்றன. போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். நேற்று முன்தினம் இதற்கான டிக்கெட் விற்பனை நடந்தது. டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
ரசிகர்களின் ஆர்வத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு கள்ள டிக்கெட் விற்கப்படுகிறது. இதுபோல் கள்ள டிக்கெட் விற்பவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். இதுவரை போலீசார் நடத்திய வேட்டையில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கிரிக்கெட் பார்க்கும் ஆசையில் ஒருவர் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்க ஆசைப்பட்டு, ரூ.90 ஆயிரத்தை இழந்துள்ளார்.
அவர் பெயர் அருண்குமார் (வயது 32). சென்னை திருவல்லிக்கேணி, டி.பி.கோவில் தெருவைச் சேர்ந்தவர். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் கியூவில் நின்று டிக்கெட் எடுக்க முயற்சித்துள்ளார். டிக்கெட் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 'இன்ஸ்டாகிராம்' பக்கம் ஒன்றில் ஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் தேவைப்படுபவர்கள் அணுகலாம், என்ற விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் மூலம் ரூ.90 ஆயிரம் அனுப்பி 20 டிக்கெட்டுகள் கேட்டுள்ளார். ஆனால் டிக்கெட் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். அது மோசடி என்று தெரியவந்தது.
இதுகுறித்து அருண்குமார், ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபோல் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- போட்டிக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
- பெண்களுக்கு தனி வரிசையும், மாற்றுத்திறனாளர்களுக்குத் தனியாக ஒரு மணிநேரமும் டிக்கெட் வழங்க முடிவு.
16வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 10ம் தேதி நடக்கிறது.
அன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும் போட்டிக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் நாளை (8.5.2023) காலை 7 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்களுக்கு தனி வரிசையும், மாற்றுத்திறனாளர்களுக்குத் தனியாக ஒரு மணிநேரமும் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- வரும் 10ம் தேதி மாலை 7.30 மணிக்கு நடைபெறும் போட்டிக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகள் விற்பனை.
- இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் நாளை (8.5.2023) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
16வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 10ம் தேதி நடக்கிறது.
வரும் 10ம் தேதி மாலை 7.30 மணிக்கு நடைபெறும் போட்டிக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் நாளை (8.5.2023) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்