என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசுப்பேருந்து"
- முதல் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
- 2வது பரிசாக LED TV-ம் 3வது பரிசாக குளிர்சாதன பெட்டியும் வழங்கப்படும்.
நவம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை TNSTC இணையதளம் மற்றும் செயலி மூலமாக பேருந்து முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என தமிழக போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறைப்படி நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்குத் தகுதி பெறும். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அதன்படி முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற 10 வெற்றியாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
இந்நிலையில் சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஓ.டி.ஆர்.எஸ் (OTRS) இன் கீழ் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூன்று அற்புதமான உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இது 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச்சிறப்பு குலுக்கல் முறைக்குத் தகுதி பெறும். இந்த சிறப்பு குலுக்கல் பரிசுகள், 2025ஆம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும்.
அந்த வகையில் முதல் பரிசு இரண்டு சக்கர வாகனம் ஆகும், இரண்டாவது பரிசு எல்.இ.டி (LED) ஸ்மார்ட் தொலைக்காட்சிப் பெட்டி மூன்றாவது பரிசு குளிர்சாதனப் பெட்டி ஆகும். எனவே பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களைத் தவிர்த்து எளிதாகப் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவை சாய்பாபா காலனி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று சிக்கி கொண்டது.
- பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதலாகவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், நேற்று கோவை சாய்பாபா காலனி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் தனியார் பேருந்து ஒன்று சிக்கி கொண்டது. பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கோவையில் நேற்று தனியார் பேருந்து மூழ்கிய அதே இடத்தில் இன்று மழைநீரில் அரசுப்பேருந்து சிக்கியுள்ளது. பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
- சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
- சம்பந்தப்பட்ட காவலரும் பேருந்து நடத்துனரும் சமாதானமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.
அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் நிகழும் சூழல் ஏற்பட்டது.
இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி இடையே தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவலரும் பேருந்து நடத்துனரும் சமாதானமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், "நான் என்னோட கருத்தை சொன்னேன். நீங்கள் உங்களுடைய கருத்தை சொன்னீர்கள். பிறகு டிக்கெட் எடுத்து நீங்கள் பயணம் செய்தீர்கள். ஆனால் அது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பிரச்சினையானது. இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று பேருந்து நடத்துநர் சொல்கிறார். அதற்கு நானும் வருத்தம் தெரிவிக்கிறேன். இனிமேல் போக்குவரத்து துறையும் காவல்துறையும் நண்பர்களாக செயல்படுவோம் என காவலர் பேசுகிறார். பிறகு இருவரும் கைகுலுக்கி , கட்டிப்பிடித்து சமாதானம் செய்து கொண்டு தேநீர் குடிக்கின்றனர்.
இதனையடுத்து, அரசு பேருந்துகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
- சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
- போக்குவரத்து தொழிலாளர்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.
அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் நிகழும் சூழல் ஏற்பட்டது.
இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி இடையே தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருதரப்பினருக்கம் இடையே நிகழும் மோதல் போக்கை சுமூகமாக முடித்துக்கொள்வது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பேருந்தில் போலீசார் டிக்கெட் எடுக்க உரிய வழிமுறைகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதால் 3 நாட்களாக நீடித்து வந்த மோதல் போக்கை கைவிட இருதரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.
- பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.
- சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.
அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து அரசு பஸ்சில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததோடு, எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் அளித்துள்ளது. அதில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் அரசு போக்குவரத்து நடத்துநருடன் வாக்குவாதம் செய்த, காவலர் ஆறுமுகபாண்டி மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்த நிலையில், தற்போது 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளால் காவல்துறைக்கும் போக்குவரத்துத்துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
- பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.
- போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.
அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து அரசு பஸ்சில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததோடு, எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்தது.
இவர் ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின்போது மயங்கி விழுந்த காவலர் ஆறுமுகப்பாண்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
- காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?
- முதலமைச்சரின் மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
சென்னை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் நடத்துனரும், போலீஸ்காரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதையடுத்து போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில்,
கடந்த 2021-2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?
முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக, ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.
- ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று அந்த பஸ் நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் நின்றபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் அந்த பஸ்சில் ஏறி உள்ளார். இதனை அடுத்து பஸ் கண்டக்டர் அந்த போலீஸ்காரரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.
அப்போது அந்த போலீஸ்காரர் அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அரசு பஸ்சில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததோடு, எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்தது.
இவர் ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21/5/24 அன்று நாகர்கோவில் இருந்து தூத்துக்குடி சென்ற புறநகர் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க முடியாது என்று தகராறில் ஈடுபட்ட காவலர்.. pic.twitter.com/vwpUFsuzs1
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) May 21, 2024
- நாங்குநேரி அருகே டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும்.
நெல்லை:
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் காவல் துறையினர் பெரும்பான்மையானோர் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பணி நிமித்தம் மட்டுமில்லாது தங்கள் சொந்த வேலைக்காக செல்லும்போதும் சில காவலர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் இது தொடர்பாக பேருந்து நடத்துனருக்கும் காவலர்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்படும்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,
* அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை.
* வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும்.
* நாங்குநேரியில் பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதியடைந்து வருகிறோம்.
- நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பல்லடம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூர்:
நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பல்லடம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: -பல்லடத்தில் இருந்து ராயா்பாளையம், சிட்கோ, கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்புதூா், மாதேஸ்வரன் நகா் வழியாக கணபதிபாளையத்துக்கு அரசுப் பேருந்து இயங்கி வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும்மேலாக அவ்வழித்தடங்களில் பேருந்து இயக்கப்படவில்லை.இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதியடைந்து வருகிறோம்.இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்றனா்.