என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு"
- சிஎஸ்கே, ஆர்சிபி இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
- இதில் வென்றாலோ, மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
பெங்களூரு:
பிளே ஆப் சுற்றுக்கான 4வது அணியாக நுழையப் போவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா, நானா என போட்டி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
உதாரணமாக, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்தும் வெற்றிபெற வேண்டும்.
இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதன்படி, 5 ஓவர்கள் வரை கொண்ட ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில் களமிறங்கினால் 5 ஓவர்களில் 75 ரன்களை அடித்து, சிஎஸ்கேவை 57 ரன்களில் சுருட்ட வேண்டும்.
ஒருவேளை சேசிங் என்றால் சிஎஸ்கே 5 ஓவரில் 75 ரன்களை அடித்தால், ஆர்சிபி அணி 3.1 ஓவரில் இலக்கை சேஸ் செய்யவேண்டும். இது நடந்தால் மட்டுமே ஆர்சிபியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
- பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
- நாளை பெங்களூருவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறப் போவது யார்? என்பது நாளை தெரியும். பெங்களூருவில் நாளை நடக்கும் 68-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
14 புள்ளிகளுடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் சென்னை அணி தகுதி பெற்று விடும்.
பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ரன் ரேட் அதிகமாக வைத்து வெற்றி பெற வேண்டும். பெங்களூரு முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது 2-வது பேட்டிங் செய்தால் 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெல்ல வேண்டும். ஒருவேளை மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டால் பெங்களூரு அணிக்கு கடினமாக அமையும்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானம் குறித்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. அந்த வீடியோவில் மைதானத்தில் அதிகபடியான நீரை பைப் மூலம் ஊற்றுகின்றனர். அந்த நீர் சிறிது நேரத்தில் காணாமல் பொய்விட்டது.
Chinnaswamy Stadium has the best sub-air drainage and aeration system in the world♥️Let's hope for the best✌?#RCBvCSK #CSKvRCB #RCBvsCSK @RCBTweets pic.twitter.com/cj5h4WIfkf
— Ⓤನೌನ್_ಮಂದಿ?❤️ (@unknown_trio) May 17, 2024
இதனால் நாளை எவ்வளவு மழை பெய்தாலும் போட்டி சீக்கிரம் தொடங்கி விடும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.
நாளை பெங்களூருவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- கேப்டன் அக்சர் பட்டேல் பொறுப்புடன் விளையாடி 57 ரன்களை குவித்தார்.
- பெங்களூரு சார்பில் யாஷ் தயால் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 27 ரன்களையும், கேப்டன் பாப் டு பிளெசிஸ் 6 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். ராஜத் பட்டிதர் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது.
டெல்லி சார்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
188 ரன்களை இலக்காக துரத்திய டெல்லி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் 1 ரன்னிலும், மெக்கர்க் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் போரெல் 2 ரன்களில் அவுட் ஆக ஷாய் ஹோப் 23 பந்துகளில் 29 ரன்களை அடுத்து பெவிலியன் திரும்பினார்.
இம்பேக்ட் வீரராக களமிறங்கிய குமார் குஷாக்ரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் அக்சர் பட்டேல் பொறுப்புடன் விளையாடி 57 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டப்ஸ் 3 ரன்களிலும் ரஷிக் சலாம் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
19.1 ஓவர்களில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுளை இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு சார்பில் யாஷ் தயால் மூன்று விக்கெட்டுகளையும் பெர்குசன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.
- தினேஷ் கார்த்திக் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. இப்போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.
இதன் மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் ரோகித் சர்மாவும் மேக்ஸ்வெல்லும் 2-ம் இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் பியூஸ் சாவ்லா (15 முறை) உள்ளார்.
- சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார்.
- கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 27 ரன்களையும், கேப்டன் பாப் டு பிளெசிஸ் 6 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். ராஜத் பட்டிதர் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ரிலீ ரோசோவ் 61 ரன்கள் குவித்து அவுட் ஆகினார்.
- ஆர்சிபி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி விராட் கோலி, பட்டிதாரின் அதிரடி அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்- ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 6 ரன்னிலும் ஜானி பேர்ஸ்டோவ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரிலீ ரோசோவ் - ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ரிலீ ரோசோவ் 61 ரன்கள் குவித்து அவுட் ஆகினார். அடுத்த சிறிது நேரத்தில் ஷஷாங்க் சிங் 37 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் ஜிதேஷ் சர்மா 5, லிவிங்ஸ்டன் 0, சாம் கரன் 22, அசுதோஷ் சர்மா 8, ஹர்சல் படேல் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் பஞ்சாப் அணி 17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பிளே ஆப் சுற்றில் இருந்து 2 -வது அணியாக பஞ்சாப் அணி வெளியேறியது.
- பெங்களூரு அணி தரப்பில் விராட் கோலி 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளிசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 12 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து விராட் கோலியுடன் பட்டிதார் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பட்டிதார் 21 பந்தில் அரை சதம் கடந்தார். அரை சதம் அடித்த கையோடு 55 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 பந்தில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து இறுதியில் க்ரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
- டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில், இன்று (மே 9) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் பாப் டு பிளெசிஸ் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கினர். பாப் டு பிளெசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.
இன்றைய போட்டியில் அரைசதம் விளாசிய விராட் கோலி, 47 பந்துகளை எதிர்கொண்டு 92 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி ஆறாவது அரைசதம் விளாசியுள்ளார். நடப்பு தொடரில் அதிக ரன்களை விளாசிய விராட் கோலி ஆரஞ்சு தொப்பி தக்க வைத்துள்ளார்.
- 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
- விராட் கோலி, வில் ஜாக்ஸ் ஜோடி அதிரடியாக ஆடி பெங்களூரு அணியை வெற்றிபெற வைத்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் இன்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக் கான் 30 பந்தில் 58 ரன்கள் குவித்தார்.
201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. டூ பிளசிஸ் 24 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ் அதிரடியில் மிரட்டினார். இறுதியில், பெங்களூரு அணி 16 ஓவரில் 206 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வில் ஜாக்ஸ் 41 பந்தில் 10 சிக்சர், 5 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார். விராட் கோலி 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. இவர் 10 போட்டிகளில் விளையாடி 501 ரன்கள் குவித்துள்ளார்.
- முதலில் ஆடிய குஜராத் 200 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் சாய் சுதர்சன் 84 ரன்கள் எடுத்தார்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்களை குவித்தது. அதிரடியில் மிரட்டிய சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக் கான் 30 பந்தில் 58 ரன்கள் குவித்தார். டேவிட் மில்லர் 26 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு அணி சார்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டூ பிளசிஸ் களமிறங்கினர். டூ பிளசிஸ் 12 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து விராட் கோலியுடன் வில் ஜாக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். மோகித் சர்மா வீசிய 15வது ஓவரில் வில் ஜாக்ஸ் 29 ரன்கள் குவித்தார்.
இறுதியில், பெங்களூரு அணி 16 ஓவரில் 206 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வில் ஜாக்ஸ் 41 பந்தில் 10 சிக்சர், 5 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார். விராட் கோலி 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அத்துடன் நடப்பு தொடரில் பெங்களூரு அணி 3வது வெற்றியைப் பதிவுசெய்தது.
- குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி 84 ரன்களை குவித்தார்.
- ஸ்வப்னில் சிங், சிராஜ், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணிக்கு துவக்க வீரர்களான ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஜோடி சுமாரான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 5 மற்றும் 16 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் ஷாருக் கான் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ஷாருக் கான் 30 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
போட்டி முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்களுடனும், டேவிட் மில்லர் 19 பந்துகளில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 10-வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 10-வது இடத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் இதற்கு முந்தைய ஆட்டத்தில் டெல்லியிடம் தோல்வியடைந்தது. அதேநேரத்தில், பெங்களூரு அணி பலம் பொருந்திய ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு 1-ல் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் அணி 2 முறை வெற்றி பெற்றுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்