என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்கில்"
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
- 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
நாகர்கோவில்:
தேரூர் பகுதியை சேர்ந்த வர் ஆறுமுகம் வன ஊழியர். இவரது மனைவி யோ கேஸ்வரி. கணவன்-மனைவி இருவரும் கடந்த 2011-ம் ஆண்டு திருமண வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது தேரூர் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தலைமறைவாக இருந்தவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சதாசிவம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருவது தெரிய வந்தது. அங்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதாசிவத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சதாசிவம் சென்னை பகுதியில் தனது பெயரை மாற்றிக்கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதா சிவத்தை நாகர்கோவில் ஜே.எம். 3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தேரூர் இரட்டை கொலை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு பிறகு தேரூர் இரட்டை கொலை வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
- தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ. இவரது மனைவி அஜி(வயது32).
- ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்
நாகர்கோவில் : தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ. இவரது மனைவி அஜி(வயது32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் அஜி, தனது குழந்தைகளுடன் ஊரில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி தோழி வீட்டுக்கு செவ்வ தாக தனது தாயிடம் கூறிவிட்டு தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அஜி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்பு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. குழந்தைகளுடன் தனது மகள் மாயமானது குறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் தாய் பிரேமா புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அஜி கொற்றிக்கோடு மற்றும் தக்கலை பகுதியில் பலரிடம் நகை-பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றி சென்றதாக பலர் புகார் கொடுத்தனர். அந்த புகாரை பெற்றுக்கொண்ட கொற்றிக்கோடு போலீசார், அஜியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர் கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் தங்கியி ருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந் தனர். அவர்கள் செல்வ தற்கு முன்பாகவே, புகார் கொடுத்த வர்கள் பாறசாலைக்கு சென்று அஜி தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். உடனே பாற சாலை போலீசார் அஜியை மீட்டு விசாரணை நடத்தி கொற்றிகோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் முதலார் பகுதியை சேர்ந்த கிங்சிலி என்பவர் அஜி மீது போலீசில் புகார் செய்தார். தன்னிடம் ரூ.2லட்சத்து 43 ஆயிரம் வாங்கி ஏமாற்றி சென்ற அஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அஜியை கைது செய்தனர். மோசடி புகார்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்பு தக்கலை கோர்ட் டில் அஜி ஆஜர்படுத்தப் பட்டார். அவரை நீதி மன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அஜி தக்கலை பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- ஆஜராகாமல் உள்ளவர்கள் மீது கோர்ட்டு பிடிவாரண்டு
- சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்ந்து தலைமறைவா கவே இருந்து வருகிறார்கள்.
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளவர்கள் மீது கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்ந்து தலைமறைவா கவே இருந்து வருகிறார்கள்.
எனவே தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்த ரவிட்டார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வாரண்டு குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் என்பவரை போலீ சார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் பெரு விளை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஒழுகினசேரியில் வைத்து கொலை செய்யப் பட்டார். இதுதொடர்பாக சொத்தவிளை ஒசர விளையை சேர்ந்த செந்தில் என்ற தாத்தா செந்தில் (வயது 63) என்பவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த செந்திலுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இதைத்தொடர்ந்து கோர்ட்டில் நடைபெற்ற விசாரணைக்கு செந்தில் ஆஜராகவில்லை. தலைமறைவாகிவிட்டார். இதனால் கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப் படை சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமை யிலான போலீசார் அவரை இன்று காலை கைது செய்த னர். கைது செய்யப்பட்ட அவரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைதான செந்தில் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ரவுடிகள் பட்டியலிலும் செந்தில் பெயர் இடம் பெற் றுள்ளது குறிப்பிடத்தக்க தாகும்.
- இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
- ரவுடிகள் பட்டி யலிலும் வெள்ளை செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பள்ளி விளை பகுதியை சேர்ந்தவர் வெள்ளை செந்தில். இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டி யலிலும் வெள்ளை செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது. நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில் வெள்ளை செந்தில் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வெள்ளை செந்தில் சென்னையில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் சென்னை விரைந்து சென்றனர். அங்கு வெள்ளை செந்திலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெள்ளை செந்திலை நேற்று இரவு நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வெள்ளை செந்திலை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.
- 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக குத்தி கொலை செய்தனர்.
- சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 62). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார்.
இவர் கடந்த 9-ந்தேதி மிஷின் காம்பவுண்ட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து சரமாரியாக குத்தி கொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். ஏசுதாசின் மனைவி ஜெயா கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன், கிறிஸ்து நகரை சேர்ந்த விஜயன், திருப்பதி சாரத்தை சேர்ந்த மணிகண்டன், மிஷின் காம்பவுண்ட்டை சேர்ந்த தங்க ஜோஸ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் தங்கஜோஸ் (25) என்பவரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் 3 பேரும் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அன்பு போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது உறவுக்கார பெண்ணுக்கும், ஏசுதாசனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இது தொடர்பாக எனக்கும், அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏசுதாசனும், அவரது மகனும் என்னை தாக்கி னார்கள். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் எனது நண்பர்களுடன் சேர்ந்து ஏசுதாசனை பழிக்குப்பழியாக குத்தி கொலை செய்தோம். கொலை செய்த பிறகு சென்னைக்கு ரயிலில் தப்பி சென்றோம். பின்னர் அங்குள்ள இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தோம். போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அன்பு, விஜயன், மணிகண் டன் ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் இவர்களது பெயர் ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
- இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதலாவது கோர்ட்டில் நடந்து வந்தது.
சேலம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அருள் எம்.எல்.ஏ. உள்பட பா.ம.க.வினர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
இதையடுத்து, ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றதாக 5 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதலாவது கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ., மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, மாநகர் மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் உள்பட 5 பேரை விடுதலை செய்து நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். வழக்கில் வக்கீல்கள் விஜயராசா, குமார் ஆகியோர் ஆஜராகினர்.
- தலைமறைவாகியுள்ள வாலிபரை பிடிக்க தனிப்படை தீவிரம்
- குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர் ஷாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்பொழுது இங்கேயே வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின் மற்றும் அவரது மகள், மாமியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர்.
வீட்டில் முகமது உமர் ஷாகிப் மட்டும் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் முகமது உமர் ஷாகிப்பை துப்பாக்கி காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முகமது உமர் ஷாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளையர்கள் பயன் படுத்திய காரை போலீசார் கைப்பற்றி னார்கள். கொள்ளை வழக்கு தொடர்பாக கோவில் பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகியபாண்டிய புரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்ச ரக்கல்விளையை சேர்ந்த தர்வீஸ் மீரான் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. தலை மறைவாகி இருந்த 4 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட னர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கேரளாவில் கொள்ளை யர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்ப டையில் போலீசார் அங்கு சென்று தேடினார்கள். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்சரக்கல்வி ளையை சேர்ந்த தர்வீஷ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம். 2 கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை நீதிபதியை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தர விட்டார்.
இதையடுத்து 3 பேரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள கோவில்பட்டியை சேர்ந்த சார்லசை போலீசார் தேடி வருகிறார்கள். கோர்ட் டில் சரணடைந்த மைதீன் புகாரி, ஷேக் முகைதீன், தர்வீஸ்மீரான் ஆகிய 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- 17 வயது சிறுவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 58).
இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் கொள்ளை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகள் அடிப்படையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய நெல்லை டவுனை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவனுக்கு நகை திருட்டு வழக்கில் தொடர்பு தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அய்யப்பனையும், 17 வயது சிறுவனையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கைது செய்யப்பட்ட அய்யப்பனிடம் விசாரணை நடத்திய போது, அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அய்யப்பனின் தாயார் வீடு ஆசாரிபள்ளத்தில் உள்ளது. அவர் அடிக்கடி இங்கு வந்து சென்றுள்ளார். சம்பவத் தத்தன்று வந்தபோது செலவுக்கு பணம் தேவைப்பட்ட தால் வசந்தா வின் நகையை பறித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவருக்கும் குமரி மாவட்டத்தில் வேறு வழக்குகளில் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்