search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமறைவவு"

    • தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
    • கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேலப்புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர்சாகிப் (வயது 53). இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 26-ந் தேதி ஜாஸ்மின் அவரது மகள் மற்றும் மாமியார் ஆஸ்பத்தி ரிக்கு சென்றிருந்தனர். வீட்டில் முகமது உமர் ஷாகிப் மட்டும் தனியாக இருந்தார். அப்போது பர்தா அணிந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து முகமது உமர் சாகிப்பை கட்டி போட்டுவிட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற னர்.

    இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முகமது உமர் ஷாகிப் கொடுத்த புகாரின் பேரில் இடலாக்குடி வயல் தெருவை சேர்ந்த அமீர் (47), ரஹீம் (33), அழகிய பாண்டியபுரம் எட்டாம் மடை பகுதியை சேர்ந்த கவுரி (36), சரக்கல்விளையை சேர்ந்த மீரான் (40), கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக் முகமது, மைதீன் புகாரி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக கொள்ளை யர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை போலீசார் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் கடனை அடைப்பதற்காகவும், வீட்டு செலவுக்கு பணம் தேவைப் பட்டதால் திருடியதாகவும் கூறினார்கள். கொள்ளை யடிக்க சென்ற முகமது உமர் ஷாகிப் வீட்டில் 100 பவுன் நகை கிடைக்கும் என்று எதிர்பார்த்து சென்றதாகவும் ஆனால் குறைவான அளவில் பணம் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட கவுரியை தக்கலை ஜெயிலில் அடைத்தனர். ரஹீம் நாகர்கோவில் ஜெயில் அடைக்கப்பட்டார். அமீர் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட் டுள்ளார். தலைமறைவாகி உள்ள சார்லஸ், மீரான், ஷேக் முகமது, மைதீன் புகாரியை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த 4 பேரும் தலைமறை வாகிவிட்டனர்.

    நெல்லை, குமரி மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் சிக்க வில்லை. இந்த நிலையில் அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    • சென்னையில் தலைமறைவாக இருந்து இளம்பெண்ணின் காதலன் அகிலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் அருண் (வயது 21) கஞ்சனூர் போலீசாரிடம் நேற்று இரவு சரணடைந்தார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் சுடுகாட்டின் அருகில் 100 நாள் வேளையின் பள்ளம் தோண்டினர். அப்போது இளம்பெண்ணின் உடல் கிடைத்தது. இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையிலான கஞ்சனூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் இறந்த பெண் 17 வயதிலிருந்து 19 வயதிற்குள் இருக்கலாம் என்றும், இளம்பெண் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்தது. இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர், சென்னையில் தலைமறைவாக இருந்து இளம்பெண்ணின் காதலன் அகிலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி அவரது நண்பர் சுரேஷ்குமாரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.  இந்நிலையில்இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் பழைய கருவாச்சியை சேர்ந்த அருண் (வயது 21) கஞ்சனூர் போலீசாரிடம் நேற்று இரவு சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அருண் கூறியதாவது:-  இளம்பெண் 3 மாதம் கருவுற்றதால், திருமணம் செய்து கொள்ள அகிலனை வலியுறுத்தினார். அகிலன் திருமணம் செய்வதாக கூறி, இளம்பெண்ணை கடந்த 3-ந்தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஊர் சுற்றினார். அவர்களுடன் நானும் தனி மோட்டார் சைக்கிளில் சென்றேன். அப்போது, இளம்பெண்ணுக்கும், அகிலனுக்கும் அரியலூர் அருகே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அகிலன் இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இதில் இளம்பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக அகிலனும், நானும் இளம்பெண்ணின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்தோம். பின்னர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று சுரேஷ்குமார் உதவியுடன் சாலவனூர் சுடுகாடு அருகே புதைத்து விட்டோம். இந்த சம்பவத்தில் அகிலன், சுரேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டது எனக்கு தெரியவந்தது. அடுத்து என்னை தேடுவார்கள் என்பதால் நானாகவே வந்து சரணடைந்துவிட்டேன் என்று கூறினார்.

    இதனையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கஞ்சனூர் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் நடந்து சில தினங்களில் துப்பு துலக்கி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கஞ்சனூர் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    ×