search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி சூடு பலி"

    • போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாக்குதலை நடத்தியது யார் என போலீசார் தெரிவிக்கவில்லை.

    ஓமன்:

    ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டின் வாடிகபீர் பகுதியில் உள்ள மசூதி அருகே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சாட்சியங்களை சேகரிப்பதற்கான நடைமுறைகள், விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலை நடத்தியது யார்? என போலீசார் தெரிவிக்கவில்லை.

    • மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓகியோ மாகாண தலைநகர் கொலம்பசில் உள்ள வெயின்லேண்ட் பூங்கா அருகே திடீரென்று துப்பாக்கி சூடு நடந்தது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. மேலும் 3 பேர் காயம் அடைந்து இருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியானவர்கள் 27 வயதான மலாச்சி பீ(வயது 27) டான்ட்ரே புல்லக் (வயது 18)கார்சியா டிக்சன் ஜூனியர் (வயது 26) என்பது தெரியவந்தது. காயம் அடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, சந்தேக நபர்கள் யாரும் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணமும் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

    • வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார்.
    • தகவலறிந்ததும் போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர்.

    அமெரிக்காவின் வடக்கு பிலடெல்பியா புறநகர் பகுதியான லெவிட்டவுனில் உள்ள ஒரு வீட்டுக்கு முன் துப்பாக்கியுடன் புகுந்த வாலிபர், அங்கிருந்த 55 வயது பெண் மற்றும் 13 வயது சிறுமி ஆகிய 2 பேரை சுட்டுக்கொன்றார்.பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார்.

    இது குறித்து தகவலறிந்ததும் போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர். இதில் நியூ ஜெர்சி நகரில் பதுங்கியிருந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆண்ட்ரே கார்டன் (வயது 26) என்பதும் அவர் தனது வளர்ப்புத்தாய் மற்றும் சகோதரியை சுட்டுக் கொன்றதும் தெரிய வந்தது.

    டிராண்டன் பகுதியில் கார் ஒன்றை திருடிய ஆண்ட்ரே கார்டன், அதில் லெவிட்டவுன் பகுதிக்கு சென்று தனது உறவினர்களை சுட்டுக் கொன்றுள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • இஸ்ரேலியர்கள் மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
    • துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. காசா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இஸ்ரேல் படை குண்டுகளை வீசி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டி விட்டது

    இந்த சூழ்நிலையில் இஸ்ரேலியர்கள் மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரை பகுதியில் கிழக்கு ஜெருசலேம் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே மர்ம நபர்கள் 3 பேர் காரில் சென்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்கள் மர்ம நபர்கள் 2 பேரை பதிலடி தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர். மற்றொருவரை மடக்கி பிடித்தனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரும் இஸ்ரேல் மேற்கு கரையையொட்டியுள்ள பாலஸ்தீன நகரமான பெத்லகேம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காசாவில் சண்டை நடந்து வரும் நிலையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில் நிலையத்துக்குள் ரெயில் வந்தபோது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிராங்க்ஸ் சுரங்கப்பாதை ரெயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் ரெயிலுக்காக காத்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இளைஞர்களை கொண்ட இரு குழுக்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர்.

    துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கி சூடு நடத்தியது யார்? எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ரெயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 34 வயதுடைய ஒருவர் பலியானார். ஒரு சிறுமி, ஒரு சிறுவன் உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இது ஒரு தற்செயலான துப்பாக்கிச் சூடு என்று நாங்கள் நம்பவில்லை. தனி நபர் கண்மூடித்தனமாக ரெயில் அல்லது ரெயில் நிலையத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பவில்லை.

    இந்த சம்பவம் ரெயிலில் செல்லும் போது சண்டையிட்ட இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்துக்குள் ரெயில் வந்தபோது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.

    மக்கள் ரெயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் ஓடத் தொடங்கினர். மேலும் பிளாட்பாரத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு வீட்டில் 3 பேர் பிணமாக கிடந்தனர்.
    • கைத்துப்பாக்கி ஆன்லைன் மூலம் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.


    அமெரிக்காவின் நியூஜெர்சியில் கொப்போலா டிரைவ் ஆப் நியூ டூர்ஹாம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது ஒரு வீட்டில் 3 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் இந்தியாவின் குஜராத்தை சேர்ந்த திலீப்குமார் பிரம்மபட் (72), மனைவி பிந்து, மகன் யஷ்குமார் (38) என்பது தெரிய வந்தது. இவர்களை உறவினர் ஓம் பிரம்மபட் (23) சுட்டு கொன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மாணவரான ஓம்பிரம்மபட், திலீப்குமார்-பிந்து தம்பதியின் பேரன் ஆவார். அவர் காண்டோ பகுதியில் வசித்து வந்தார். பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு நியூஜெர்சிக்கு குடிபெயர்ந்து தாத்தா-பாட்டியுடன் வசித்து வந்தார். அவர் எதற்காக 3 பேரை கொன்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஓம்பிரம்மபட், கைத்துப்பாக்கி ஆன்லைன் மூலம் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    • 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கனடாவின் வடக்கே உள்ள ஒன்டாரியோ நகரில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது சாலையில் ஒருவர் இறந்து கிடந்தார். அதே போல் வீடுகளில் 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர். மேலும் 44 வயது நபர் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். 5 பேர் இறந்த இந்த உயிரிழப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது.
    • மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிக் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதன்பின்னர் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிக் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    குகி ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர் மற்றும் மைதேயி அதிகம் உள்ள பிஷ்னுபூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பல நாட்கள் அமைதிக்கு பிறகு துப்பாக்கிச்சூடு நடந்தது. இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    நரஜ்சேனாவை ஒட்டிய கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். மணிப்பூர் காவல்துறை இதை தெரிவித்து உள்ளது. 7 பேருக்கு குண்டு காயம் அல்லது பிற காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    கொய்ரென்டாக் பகுதியுள்ள கிராமத்தில் 30 வயதான ஜங்மின் லுன் காங்டே என்பவர் குண்டு பாய்ந்து பலியானார். அவர் கிராம பாதுகாப்பு தன்னார்வலர் ஆவார். மற்றொரு சம்பவத்தில் தினுங்கே பகுதியை சேர்ந்த 40 வயதான விவசாயி சலாம் ஜோதின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்.

    கொய்ரெண்டாக் மற்றும் தினுங்கே பகுதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார், அசாம் ரைபிள்ஸ் படையினர், ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்திய வீரர் பற்றியும், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் தெரியவில்லை.

    மத்திய ஜப்பானின் கிபு பகுதியில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் ஒரு ராணுவ வீரர், சக வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.

    தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். உடனே மற்ற வீரர்கள், துப்பாக்கி சூடு நடத்திய வீரரை மடக்கி பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு வீரர் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்திய வீரர் பற்றியும், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன.
    • அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடக்கிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ராணுவ வீரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தேசிய நினைவு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தேசிய நினைவு நாளை அனுசரித்தனர்.

    இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. 8 மாகாணங்களில் கடற்கரைகள், உயர்நிலைப் பள்ளிகள், மோட்டார் பேரணிகள் ஆகியவற்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அமெரிக்கா முழுவதும் ஒரே நேரத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடக்கிறது.

    துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் துப்பாக்கி சூடு தொடர்ந்தபடியே உள்ளது.

    அமெரிக்காவின் பிலடெல்பியாவில் வசித்து வந்தவர் ஜுட் சாக்கோ (வயது21). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இருந்து சுமார் 30 ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். மாணவரான ஜுட் சாக்கோ, பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஜுட் சாக்கோ, வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரிடம் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். தன்னிடம் இருந்த பணத்தை ஜுட் சாக்கோ கொடுக்க மறுத்ததால் அவரை சுட்டுக் கொன்று விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் ஓகியோவில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் சாயேஷ் வீரா சுட்டுக் கொல்லப்பட்டார். கொள்ளை முயற்சியை தடுத்த அவரை மர்ம நபர் சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது.
    • துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பலியானவர்கள் அனைவரும் வயதானவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

    அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். அவர் யார்? என்ற தகவலை போலீசார் வெளியிடவில்லை. துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

    ×