என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் ஷாருக்கான்"

    • நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.
    • இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.


    ஷாருக்கான்

    ஷாருக்கான்


    தற்போது நடிகர் ஷாருக்கான், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதற்காக மும்பையில் இருந்து வந்திறங்கிய இவர் மணமக்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாராவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ஷாருக்கான் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

    • நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.
    • இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.


    ரஜினி

    ரஜினி

    தற்போது நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதையடுத்து உள்ளே சென்ற ரஜினி மணமக்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாராவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    • கடந்த வாரம் ஷாருக்கான் அட்லியுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ஜவான் குறித்து அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
    • கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

    பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மறுபிரவேசப் படமான பதான், ஜனவரி 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர். இதேபோல், ராஜ்குமார் ஹிரானியின் பன்கி படம் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி நிடிக்கிறார். இந்த படம் டிசம்பர் 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த வாரம் ஷாருக்கான் அட்லி கூட்டணியுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ஜவான் குறித்து அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படம் டார்க் மேன் படத்தை ஒத்திருப்பதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    ராஜாராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பல வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரானார். தற்போது அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ அறிமுகமாகிறார். இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    ஜவான் திரைப்படக்காட்சி

    இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள 'ஜவான்' திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. இதில், ஷாருக்கான் தன் முகத்தை ஒரு துணியால் மறைத்துக் கொண்டு தோன்றுவார். இதனிடையே, இப்படத்தின் டீசர் ஷாம்ரேமி இயக்கத்தில் 1990-ஆம் ஆண்டு வெளியான 'டார்க்மேன்’ படத்தை ஒத்திருப்பதாக நெட்டீசன்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் படங்களை இயக்கிய அட்லீ, இயக்கி வரும் ஹாலிவுட் படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
    2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார். தற்போது அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ அறிமுகமாகிறார். இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது. இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

    ஜவான்
    ஜவான்

    இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 'ஜவான்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் படங்களை இயக்கிய அட்லீ, இயக்கி வரும் ஹாலிவுட் படத்தின் தலைப்பு குறித்த் தகவல் வெளியாகியுள்ளது.
    2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார்.

    அட்லீ-ஷாருக்கான்
    அட்லீ-ஷாருக்கான்

    தற்போது அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ அறிமுகமாகிறார். இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்லீ இயக்கிவரும் ஷாருக்கான் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'ஜவான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் டைட்டிலுடன் கூடிய ஒரு டீசரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    போதை பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சொகுசு கப்பல் வழக்கு உள்பட 6 வழக்குகள் போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
    மும்பை :

    மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் சோதனை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் போதை பொருள்வழக்கில் ஆர்யன் கான் மற்றும் அவருடன் கைதான அர்பாஸ்மெர்ச்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் மும்பை ஐகோர்ட்டால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அப்போது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவின் முன் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று ஆர்யன் கான் தென்மும்பையில் உள்ள போதை பொருள் அலுவலகத்தில் ஆஜரானார். மாடல் அழகு முன்முன் தமேச்சாவும் ஆஜரானார்.

    இதேபோல ஆர்யன் கான் நேற்று நவிமும்பையில் போதை பொருள் சிறப்பு புலனாய்வு பிரிவிலும் ஆஜரானார். அவர் போதை பொருள் வழக்கு தொடர்பாக துணை இயக்குனர் ஜெனரல் சஞ்சய் குமார் சிங் தலைமையிலான குழுவினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார். மேலும் அதிகாரிகள் வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர்.

    போதை பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சொகுசு கப்பல் வழக்கு உள்பட 6 வழக்குகள் போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதில் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆர்யன் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் உடல்நிலையை காரணம் காட்டி ஆஜராகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் மைத்துனி போதைப் பொருள் வியாபாரி என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.
    மும்பை:

    சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதுடன் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். 

    ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தலைமை ஏற்று நடத்தியவர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. 

    இரண்டு வாரங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில் தற்போது வெளியில் உள்ளார்.

    போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழிலதிபர் சாம் டிசோசா மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி என கூறப்படுகிறது.

    இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் விஜிலென்ஸ் குழுவினால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

    போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் (என்சிபி) சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) பூஜா தத்லானி ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்.

    ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் ஷாருக்கான் மேலாளர் பூஜா தத்லானி, ஆர்யன் கானிடம் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
    மும்பை :

    போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் 2-ந் தேதி மும்பை- கோவா சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(வயது23) உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர். இந்தநிலையில் ஆர்யன்கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது மராட்டிய மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். குறிப்பாக சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என கூறினார்.

    இந்தநிலையில் சொகுசு கப்பல் போதை பொருள் வழக்கில், பொது சாட்சியான பிரபாகர் சாயில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். அதில் அவர் போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக தெரிவித்தார். இந்த பேரம் தொடா்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு முக்கிய சாட்சியான கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி ஆகியோர் லோயர் பரேல் பகுதியில் அக்டோபர் 3-ந்தேதி சந்தித்து பேசியதாக கூறியிருந்தார்.

    பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டு குறித்து மும்பை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டில் கூறியது போல, கடந்த 3-ந் தேதி லோயர் பரேல் பகுதியில் உள்ள வணிகவளாகம் அருகில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி, கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா ஆகியோர் சந்தித்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.

    ஆர்யன்கான், ஷாருக்கான்

    இதில் பூஜா தத்லானியின் கார் என கூறப்படும் நீல நிற மெர்சிடஸ் பென்ஸ் காரில் இருந்து இறங்கும் பெண் ஒருவர், கிரன் கோசவியிடம் பேசும் காட்சிகள் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    பின்னர் கிரன் கோசவி, அந்த பெண், சாம் டிசோசா ஆகிய 3 பேரும் அவர்களது வாகனங்களில் தனித்தனியாக அங்கு இருந்து புறப்பட்டு செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கண்காணிப்பு கேமரா காட்சிகளில் 3 பேரும் சந்தித்து பேசியது மட்டும் தெரிகிறது. ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்க சாம்டிசோசாவை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை" என்றார்.

    இதேபோல கிரன் கோசவியின் காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதும் தெரியவந்து உள்ளது. எனவே போலீஸ் போல நடித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக மற்றொரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் ஷாருக்கான் மேலாளர் பூஜா தத்லானி, ஆர்யன் கானிடம் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

    தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் பட்டியலில் தென் இந்தியாவில் ரஜினிகாந்த், விஜய் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.
    இந்தியாவில் திரைத்துறை பிரபலங்கள் தான் அதிகம் பிரபலமாக உள்ளனர். அவர்கள் செய்யும் வி‌ஷயங்கள் உடனே தேசிய அளவில் டிரெண்டாகி விடுகின்றன.

    டி.ஆர்.ஏ என்ற தனியார் அமைப்பு 16 நகரங்களில் ஆய்வு நடத்தி அதிக நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் 2019 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மக்கள் மத்தியில் அதிகம் நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலில் அகில இந்திய அளவில் அமிதாப் பச்சன் முதல் இடத்திலும் ஆமீர்கான், சல்மான் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். அக்‌‌ஷய் குமார், ஷாருக்கான் முறையே 4-வது, 5-வது இடங்களில் இருக்கின்றனர்.



    நடிகைகளில் தீபிகா படுகோனே முதல் இடத்திலும் காத்ரீனா கைப், மாதுரி தீட்ஷித் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஐஸ்வர்யா ராய்க்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பின் பிரியங்கா சோப்ரா இடம்பெற்றுள்ளார்.

    தென்னிந்தியாவில் ரஜினிகாந்த் முதல் இடத்திலும், விஜய் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மூன்றாம் இடத்தில் விக்ரம் உள்ளார்.

    இந்த பட்டியலில் நடிகர் அஜித் பெயர் இடம் பெறவில்லை. கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி முதல் இடத்திலும் சச்சின் தெண்டுல்கர் 2-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் தோனி பெயர் இடம் பெறவில்லை.

    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Thalapathy63 #Vijay
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படமாகிறது.

    படப்பிடிப்பு தளத்தில் 100 அடி உயரத்தில் கிரேனில் தொங்கவிடப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்தததில், அங்கிருந்த தொழிலாளி செல்வராஜ் (52) என்பவருக்கு காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Thalapathy63 #Vijay #Nayanthara
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. #Thalapathy63 #Vijay
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படமாகிறது.

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. பின்னர் மெர்சல் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது அட்லி - ஷாருக்கான் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதன்மூலம் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.



    இந்த நிலையில், தளபதி 63 படத்தில் ஷாருக்கான் வில்லனாக நடிப்பதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படத்தில் வில்லத்தனமான மற்றொரு கதாபாத்திரத்தில், கால்பந்து விளையாட்டுக் கழகம் ஒன்றின் தலைவராக ஜாக்கி ஷெராப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #SharukhKhan #Atlee

    ×