search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில்"

    • பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குகிறது.
    • வெண்கல மணி 113 சென்டி மீட்டர் உயரமும், 287 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்டதாக உள்ளது.

    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவில் சாமி சன்னதி வாயிலில் மணி மண்டபம் உள்ளது. ஆனால் அந்த மணிமண்டபத்தில் இருந்த மணி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக இக்கோவிலில் மணியோசை கேட்காத நிலை இருந்து வந்தது.

    இந்நிலையில் உபயதாரர்கள் மூலம் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வெண்கல மணி இக்கோவிலுக்காக புதிதாக செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் சீனிவாசன் ஸ்தபதி மூலம் செய்யப்பட்டுள்ள இந்த வெண்கல மணி 520 கிலோ எடை கொண்டது.

    அழகிய வடிவ மைப்புடன் செய்யப்பட்டு உள்ள இந்த வெண்கல மணி 113 சென்டி மீட்டர் உயரமும், 287 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்டதாக உள்ளது.

    நேற்று இரவு மாணிக்க வாசகரின் திரு நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் மாணிக்க வாசகரின் புறப்பாட்டு ஊர்வலத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க இந்த வெண்கல மணி எடுத்து வரப்பட்டது. இன்று புதன் கிழமை இந்த வெண்கல மணி பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    வருகிற 12-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் உச்சிகால பூஜையின் போது புதியதாக பொருத்தப்பட்ட வெண்கல மணியோசை கோவில் முழுவதும் ஒலிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும்.
    • பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம்.

    பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை. ரத்தம், கொழுப்பு, கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு கொண்டவை.

    அதேவேளை பசி, தாகம், தூக்கம் ஆகியவை நெருப்பின் தன்மை உடையவையாகவும்; அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.

    இதன் அடிப்படையில் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்புற வேண்டும் எனில் கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதும் நன்மை பயக்கும்.

    அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று நாம் வழிபடலாம்.

    இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

    பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம். அதற்கு திருச்சியில் இருந்து தொடங்கி திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று இறுதியாக ஸ்ரீ காளஹஸ்தியை அடைய வேண்டும்.

    இதற்கு திருச்சியிலிருந்து ஸ்ரீ காளஹஸ்தி வரை மொத்தம் 560 கி.மீ பயணிக்க வேண்டும். எல்லா ஊர்களுக்கும் ரெயில், பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன.

    ×