என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் விஷம்"

    • விஜயை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
    • கணவன், மனைவி என்று கூறி பார்வதிபுரம் பகுதியில் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). ஆசாரிப்பள்ளம் பகுதியில் தள்ளு வண்டியில் வைத்து துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவர் நேற்று பார்வதிபுரம் பகுதியில் உள்ள லாட்ஜில் விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவருடன் இளம்பெண் ஒருவரும் இருந்தார். இதுகுறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜயை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி விஜய் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். விஜய் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?. அவருடன் தங்கியிருந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட விஜய் இஸ்திரி செய்யும் கடைக்கு இராமன் புதூர் பகுதியை சேர்ந்த 31 வயது இளம்பெண் வந்துள் ளார். அப்போது விஜய்க்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட் டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது.

    கணவரை பிரிந்து அவர் வாழ்ந்து வருகிறார். அந்த பெண்ணுடன் விஜய் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்து சந்தோஷமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் விஜயின் பெற் றோருக்கு தெரிய வந்துள் ளது.

    இதையடுத்து அந்த பெண்ணுடன் தொடர்பை துண்டித்து விடுமாறு பெற்றோர் கண்டித் துள்ளனர். ஆனால் விஜயால் அந்த பெண்ணை மறக்க முடியவில்லை. இந்த நிலையில் விஜய் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

    இதற்கு அந்தப் பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி நாகர்கோவிலில் உள்ள கோவில் ஒன்றில் விஜய் அந்த பெண்ணுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் இருவரும் கணவன், மனைவி என்று கூறி பார்வதிபுரம் பகுதியில் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். பின்னர் விஜய் தனது வீட்டிற்கு சென்று தனது பெற்றோரை சந்தித்து பேசினார். அப்போது அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களை ஏற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவரது பெற்றோர் விஜயின் திரும ணத்தை ஏற்க மறுத்தனர். இதனால் மனமுடைந்த விஜய் வீட்டில் இருந்து புறப்பட்டு விடுதிக்கு வந்துள்ளார்.

    அப்போது அவர் விஷம் அருந்தி உள்ளார். விஷம் குடித்த விஜய் லாட்ஜுக்கு சென்றதும் மயங்கி விழுந்து உள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணிடம் நம்மை சேர்ந்து வாழ விட மாட் டார்கள். இதனால் நான் சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு தான் விஜய் விஷம் குடித்த தகவல் அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

    உடனே அவர் கூச்சலிட்டு விஜயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றது விசார ணையில் தெரியவந்துள்ளது.

    • கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி, டி. பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (40). இவரது மனைவி பிரீத்தா.

    திருமணம் ஆகி 2 மாதத்தில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கவுரி சங்கரை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதனையடுத்து கவுரிசங்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து திரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவுரிசங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×