search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி சந்தை"

    • அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • 2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.35 முதல் 40 வரை ஒரு கிலோ பல்லாரி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் ரூ.25, ரூ.20 என படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகளவில் பல்லாரி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மராட்டிய மாநிலத்தில் பல்லாரி விளைச்சல் அதிகரிப்பால் அதிகளவில் லாரிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    இதனால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பல்லாரி விலை ரூ.10 முதல் ரூ.15 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் போதிய விற்பனை நடை பெறாததாலும் பாவூர்சத்திரம் மார்க்கெட் பகுதி மற்றும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை ஓரங்களில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் லோடுகள் இறக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    • உழவர் சந்தையை பார்வையிட்டார்
    • ரூ.55 கோடியில் புதிய பஸ் நிலையம்

    நாகர்கோவில் :

    வடசேரி பகுதியில் ரூ.55 கோடி செலவில் நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவ டிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையத்தின் மையப்பகுதி யில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க திட்டமிட்டு அதற் கான பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. புதிய பஸ் நிலையம் அமைக்கப் படும்போது வடசேரி கனக மூலம் சந்தையை மாற்றவும் முடிவு செய்துள்ளனர்.

    சந்தையை புதிதாக எந்த இடத்தில் அமைக்கலாம் என்பது குறித்தும் அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே வடசேரி மார்க்கெட்டை மேயர் மகேஷ் ஆய்வு செய்திருந்த நிலையில் இன்று காலை வடசேரி சந்தையில் மேயர் மகேஷ் மீண்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேசினார். வியாபாரிகள் பாதிக்காத வகையில் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகேஷ் உறுதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் உழவர் சந்தை பகுதி, வடசேரி பஸ் நிலையத்தை யொட்டி உள்ள பூ மாலை மார்க்கெட்டின் பின்புற பகுதிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் வடசேரி பகுதியில் 4¼ ஏக்கரில் ரூ.55 கோடி செலவில் நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பஸ் நிலையத்தில் வணிக வளாகமும் கட்டப்படுகிறது. இதற்கு விரைவில் டெண்டர் பிறப்பிக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தோம். பஸ் நிலையம் அமைக்கப் படும்போது அங்குள்ள சந்தையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகளின் வாழ்வாதா ரம் பாதிக்காத வகையில் சந்தையை மாற்ற ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே அண்ணா பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் பூ மாலை மார்க்கெட்டின் பின்புற பகுதி மற்றும் உழவர் சந்தை பகுதி ஆய்வு செய்துள்ளோம். உழவர் சந்தை வேளாண் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அதிகாரிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது ஆணையாளர் ஆனந்த மோகன், என்ஜினீயர் பாலசுப்ரமணியன், மாநகர நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர் ஜவகர், சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை, கவுன்சிலர் கலாராணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி தையல்நாயகி காய்கறி சந்தையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் உயர் மின்னழுத்த கோபுரத்தை ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், கவுன்சிலர் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் நெல்சன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் நகர பொருளாளர் சந்திரன், 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தர், முன்னாள் கவுன்சிலர் ராஜதுரை, மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், சாமுவேல் என்ற நெப்போலியன், மகளிர் அணி சரஸ்வதி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக், ஒன்றிய பிரதிநிதி ஆதி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் நன்றி கூறினார்.

    ×