என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அடியார்கள்"
- இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார்.
- முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார்.
திருவொற்றியூரில் பட்டினத்தார் முக்தி
"பட்டினத்தார் உலகையே துறந்தவர். அவரைபோல அனைத்தையும் துறந்தவர் பூவுலகில் யாரும் இல்லை" என்று தாயுமானவர் பாடியுள்ளார்.
அத்தகைய பட்டினத்தார் முக்திபெற்ற இடம் திருவொற்றியூர்.
இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார்.
பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்.
திருவொற்றியூரில் தெருவில் நடந்து போனேன் காலடி மண்ணை நெற்றியில் திருநீறாக பூசினால் பிறவி நோய்க்கும் அருமுருந்தாகும் என்று பட்டினத்தார் பாடலில் கூறியுள்ளார்.
பட்டினத்தார் இந்த ஊரில் மீனவச் சிறுவர்களுடன் விளையாடினார்.
மணலைத் தோண்டி அதில் தன்னை புதைக்கச் செய்தார்.
வேறு இடத்தில் இருந்து வெளியில் வந்தார்.
இதுபோல 2 முறை செய்தார். 3வது முறையும் புதைத்த போது அவர் வெளியே வரவில்லை.
தோண்டி பார்க்கும் போது இறைவனடி சேர்ந்து லிங்கமாக காட்சி தந்தார்.
திருவொற்றியூர் இறைவனை பாடி அர்ச்சனை செய்ய ஏதுவாக 28 போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.
முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார்.
இவரது சமாதிக் கோவில் திருவொற்றியூர் கடற்கரை சாலை அருகே இன்றும் உள்ளது.
- சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.
- முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.
ஒற்றியூரில் கம்பர் ராமாயணம் எழுதினார்
சான்றோருடையது தொண்டை நன்னாடு என்பதால் கல்வியில் சிறந்த கம்பன், வடமொழி வான்மீகி ராமாயணத்தைக் கேட்டு, அதைக் தமிழில் மொழிபெயர்த்து எழுத சோழ நாட்டிலிருந்து, தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர் வந்தார்.
கவி சக்கரவர்த்தி உவச்சர் குலத்தைச் சேர்ந்தவர். இக்குலத்தை சேர்ந்தவர்களே ஸ்ரீ வட்டபாறை அம்மனை பூசித்து வந்தனர்.
சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.
திருவொற்றியூரில் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.
இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்கள், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.
வடமொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தை கற்க கம்பர் திருவொற்றியூர் வந்தார்.
திருவொற்றியூர் சதுரானை பண்டிதர் என்பவர் மடம் ஒன்றை நிறுவினார்.
இவர் கேரள நாட்டினர்.
பல கலைகளையும் பயின்றவர் என்று தமிழக வரலாற்றில் (பக்கம் 356) கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டு கூறுகிறது.
இவரிடம் தான் பகல் எல்லாம் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கம்பர் கேட்டு, இரவு முழுவதும் அதைத் தமிழில் எழுதினார்.
கம்பர் உவச்சர் குலத்தவர், காளி பக்தர், எனவே தினமும் வட்டபாறை காளியம்மனை வணங்கிய பிறகே ராமாயணத்தை எழுதுவார்.
இரவில் தமிழில் பாட்ல எழுதும் போது வட்டபாறை நாச்சியார்,பெயர் வடிவில் வந்து ராமாயணம் எழுதும் கம்பனுக்குத் தீபந்தம் ஏந்தி நின்றதைக் கம்பரே பாடியுள்ளார்.
ஒற்றியூர் காக்க உறைகின்றகாளியே
வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை & பற்றியே
நந்தாது எழுதற்கு நள்ளிரவில் மாணாக்கர்
பிந்தாமல் பந்தம் பிடி
தீப்பந்தம் ஏந்தி நின்று வட்டபாறை அம்மனே கம்பனின் தமிழுக்குத்தொண்டு செய்துள்ளதும், சதுரானை பண்டித மடத்தில் உள்ள ஒருபெண் மேல் கம்பன் அன்பு கொண்டு பாடியுள்ளதும் இங்கு அகச்சான்றுகளாய் உள்ளன.
கம்பர், வான்மீகி ராமாயண வடமொழிகள் மூல படம் கேட்க ஒற்றியூர் சதுரானை மடம் வந்ததும், வட்டபாறையம்மன் அருளால் தமிழில் ராமாயணம் பாடியதும் தனிச்சிறப்புக்குரிய செய்தியாகும்.
- இந்த தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.
- அடியார் பசித்திருக்க அன்னை பொறுப்பாளோ?
அண்ணி வடிவில் வந்து ராமலிங்க வள்ளலார் அடிகளுக்கு சாதம் பரிமாறிய அன்னை
ராமலிங்க அடிகள் தனது 12வது வயதிலிருந்து 35வது வயது வரை 24 ஆண்டுகள் இடைவிடாமல் இந்த ஒற்றியூர் இறைவனை வந்து வணங்கினார்.
இந்த தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.
அவர் அருளிச் செய்த 6 திருமுறைகளில் 3 திருமுறைகள் முற்றிலும் திருவொற்றியூரின் மேன்மையை உணர்த்துகின்றன.
ஆதிபுரிஸ்வரர் மீது எழுத்தறி பெருமான் மாலை என 31 பாடல்களையும், வடிவுடையம்மன் மீது ஸ்ரீ வடிவுடை மாணிக்க மாலை என 101 பாடல்களையும் பாடியுள்ளார்.
ஸ்ரீ தியாகராஜ பெருமானது பவனி பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.
திருவொற்றியூர் முருகன் கற்பூரம் ஏற்ற காசு இன்றி மிகவும் வருந்தி பாடியுள்ளார்.
"அருமருந்தே தணிகாசலம் மேவும் ஆருயிரே
திருமருங்கார் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னதால்
ஒருமருங்கு ஏற்ற என் செய்வேன்
கற்பூர ஒளியினுக்கே" என்று வருந்தி பாடியுள்ளார்.
அடியார் பசித்திருக்க அன்னை பொறுப்பாளோ?
ஒருநாள் இரவு அன்னை ஸ்ரீ வடிவுடையாளை தரிசித்து கால்நோக நடந்து சென்று நள்ளிவு ஆனதால் வீட்டில் அண்ணியை எழுப்ப மனமின்றி பசியோடு வீட்டுத் திண்ணையில் ஸ்ரீ ராமலிங்க அடிகள் தூங்கச் சென்றார்.
அண்ணி வடிவில் அன்னை ஸ்ரீ வடிவுடையாளே அவருக்கு சாதம் தந்து அருள் செய்தாள்.
குழந்தையின் பசியை பொறுக்காது ஞானபால் தந்தவளாயிற்றே? அடியாரை பசிக்க விடுவாளோ? என்று ராமலிங்க அடிகளார் பாடுகிறார்.
- “காதற்றஊசி வாராது காணும் கடை வழிக்கே” என்ற உண்மையை அந்த ஓலை உணர்த்தியது.
- சிவனைத் தவிர எல்லா செல்வமும் பொய் என்ற ஞானம்பெற்றார்.
திருவொற்றியூரில் சித்துக்கள் செய்த பட்டினத்தார்
பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார், திருவொற்றியூருக்கு வந்து திருவருள் பெற்று கடற்கரை ஓரத்தில் உயிரோடு ஜீவ சாமாதியான சித்தர்.
காவிரிபூம்பட்டினத்தில் நகரத்துச் செட்டியார் மரபில் தோன்றியவர் திருவெகாடர், திருமணமான பின் மகப்பேறு இன்றி சிவனிடம் முறையிட்டதால் திருவிடைமருதூர் ஈசனே மருதவாணர் என்ற பெயரில் வளர்ப்பு மகனாக வந்தார், வளர்ந்தார், கடல் கடந்து வணிகம் செய்து திரும்பி வந்தார்.
வறட்டிகளோடு ஒரு கிழிந்த ஓலையையும் தந்து மறைந்தார்.
"காதற்றஊசி வாராது காணும் கடை வழிக்கே" என்ற உண்மையை அந்த ஓலை உணர்த்தியது.
சிவனைத் தவிர எல்லா செல்வமும் பொய் என்ற ஞானம்பெற்றார்.
செல்வம், மனைவி, உறவு யாவற்றையும் துண்டித்துக் கொண்டு துணையோடு துறவு பூண்டார்.
கோவில் தோறும் இறைவனை வழிபட்டு தான் பெற்ற ஞானத்தை பாடினார்.
சுவையற்றபேய்க் கரும்பு இனித்த இடமாகிய திருவொற்றியூர் தனக்கு முக்தி தரும் இடம் என இங்கு வந்து கடற்கரை அருகே சித்துக்கள் செய்தார்.
- மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.
- தமிழ் தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.
மறைமலை அடிகளின் வயிற்றுவலியை தீர்த்த திருவொற்றியூர் முருகபெருமான்!
தனித்தமிழ் அடிகளாய் விளங்கிய மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.
சூலை நோயைத் தந்து திருநாவுக்கரசு ஆட்கொள்வது போல சிவன் இவருக்கு ஆற்றாத வயிற்று நோயைத் தந்தார்.
தமக்கு உற்றநோய் நீங்குமாறு திருவொற்றியூரில் திருக்கோவில் கொண்டு, அருணகிரிக்கும், ராமலிங்கருக்கும் அருளிய முருகபெருமானை வேண்டி புதிருவொற்றி முருகர் மும்மணிக் கோவையை பாடினார்.
தமிழ் தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.
இம்முருக பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன ஈந்து அருள்பாலித்து வருகிறார்.
- நடன நாயகர்கள் நடராஜ பெருமான் தியாகராஜர் என இருவர் உள்ளனர்.
- நந்தி தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என இரண்டு தீர்த்த குளங்கள் உள்ளன.
இரட்டை சிறப்பு பெற்ற திருவொற்றியூர் தலம்
பிற கோவில்களில் ஒன்றாக இருக்கும் யாவும் இங்கு இரட்டை சிறப்புகளாக அமைந்திருக்கிறது.
இங்குள்ள இரண்டு விருட்சம் அத்தி, மகிழம் , இரண்டு திருக்குளங்கள் நந்தி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இரண்டு பெருமான் படம்பக்கநாதர், தியாகராஜர் , இரண்டு அம்பிகை ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்ட பாறையம்மன்,
இரண்டு விநாயகர், குணாலய விநாயகர், பிரதான விநாயகர், இரண்டு முருகர், அருட்ஜோதி பெருமான், பிரதானமுகர், இரண்டு நடன நாயகர்கள் நடராஜ பெருமான் தியாகராஜர்,
திருவீதி விழாவில் கூட சந்திரசேகர் வீதி வலம் வந்த பின் இரண்டாவதாக தியாகராஜரும் வீதி வலம் வருவார்.
பிரம்ம உற்சவம், வசந்த உற்சவம் என சிவனுக்கு இரண்டு உற்சவமும், சிவராத்திரி உற்சவம் வட்ட பாறையம்மன் நவராத்திரி உற்சவம் என அம்பிகாவுக்கு இரண்டும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.
திருவிழாவிலும் இரண்டு திருக்கல்யாணங்கள் நடைபெறும். சுந்தரர் சங்கிலி செய்வார். இரட்டைச் சிறப்புகள் இக்கோவிலின் தனிபெருமையன்றோ?
- ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் சிறப்பு பெற்றது இக்கோவில்.
- பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
திருவொற்றியூர் ஆலயம்-பஞ்சபூத லிங்கங்கள்
மண்ணுக்கு சோமசுந்தர் கோவிலும், விண்ணுக்கு ஆகாசலிங்கமும், நெருப்புக்கு அண்ணாமலையார் கோவிலும், காற்றுக்கு காளத்தீஸ்வரரர் கோவிலும், வெளிச்சுற்று பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் பேறு இந்தத் திருக்கோவிலில் மட்டுமே வாய்த்துள்ளது.
ஆஞ்சநேயர்
கோவில் தூணிலே உள்ள ஆஞ்சநேயர் வேண்டியவருக்கு அருளை அள்ளி வழங்கும் வள்ளல் இவர், நினைத்த காரியம் இவரிடம் ஜெயமாகும்.
- பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.
- ஆகம விதிப்படி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.
திருவொற்றியூர் ஆலயம்-பூவுலக சிவலோகம்
படை வளம் செறிந்த பாடல் 274 திருக்கோவில்களில் தொண்டை நாட்டில் 32 திருத்தலங்கள் உள்ளன.
அதில் பெரும் புகழ்பெற்று, பழமையானது திருவொற்றியூர் திருத்தலமாகும்.
பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.
முக்தி தலம், ஞானத்தலம் என்றும் இதனை போற்றுவர்.
ஆகம விதிப்படி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.
மூன்று தனித்தனி கொடி மரங்கள், ராஜகோபுரம் 7 நிலையில் 120 அடி உயரத்துடன் நிற்கிறது.
கோவிலில் நுழைந்ததும் உயர்ந்தோங்கிய கொடி மரத்தைக் காண்கிறோம்.
இக்கோவிலில் ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்ட பாறையம்மன் என்ற மூவருக்கும் தனித்தனி திருவிழாக்கள் சிறப்புற நடப்பதால் மூன்று கொடி மரங்கள் தனித்தனியே உள்ளது.
இதில் கொடியேறியதும் 10 நாள் திருவிழாக்கள் தனித்தனியே நடைபெறும்.
உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த சன்னதியில் வரிசையாக சூரிய பகவான், தேவார மூவர், சுந்தரர், சங்கிலி நாச்சியார் 1008 கோடுகளை லிங்கங்களாக கொண்ட சரஸ்ரலிங்கம், ஏகாம்பரேஸ்வரர், ராமநாதர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.
- திருவொற்றியூர் ஆலயம் தொன்மை மிக்கது.
- இதனால் கல்திரை போட்டு ஆதிபுரீஸ்வரர் சன்னதி மறைக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் ஆலயம்-அருவம் ,உருவம் மற்றும் அருவுருவமாய் விளங்கும் இறைவன்
திருவொற்றியூர் ஆலயம் தொன்மை மிக்கது.
இங்கு ஆதி பிரமனுக்குப் படைப்புத் தொழிலைத் தொடங்க அனுமதித்த ஆதிபுரீஸ்வரர் அக்னிவடிவில் அருவ நிலையில் இருக்கிறார்.
இதனால் கல்திரை போட்டு ஆதிபுரீஸ்வரர் சன்னதி மறைக்கப்பட்டுள்ளது.
நந்தி தேவருக்காக சிவபெருமான் அன்னையை தன் அருகில் அமர்த்தி நடனம் புரிந்த காட்சி தந்த தியாகராஜர் உருவநிலை கொண்டு அருளாட்சி புரிகிறார்.
வாசுகி என்ற சர்ப்பம் உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்று பூசித்த சுயம்பு வடிவான லிங்கத்தில் அருவுருவ நிலையில் நகருணை புரிகிறார்.
இவ்வாறாக திருவொற்றியூரில் இறைவன் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களில் அருள் பாலிக்கிறார்.
- இந்த ஆலய திருக்குளத்தின் தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது.
- அந்த நாட்களில் புற்றாகவே உள்ள மூர்த்தியை கண்டு தரிசிக்கலாம்.
திருவொற்றியூர் கோவில்-நந்தி தீர்த்தம்
இந்த ஆலயத்தின் உள்ளே இருப்பது நந்தி தீர்த்தம் என்றும் வெளியே இருப்பது பிரும்ம தீர்த்தக் குளம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆலய திருக்குளத்தின் தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது.
மதுரையையும், கோவலனையும் இழந்து கண்ணகி சினத்துடன் வந்து இறைவனிடம் தாகம் தணிய நீர் கேட்டவுடன் சிவனால் அருந்தச் சொன்ன திருக்குளமும் இதுதான்.
இந்த ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனாக கண்ணகி புற்றிடம் கொண்ட ஈசனுக்கு வடக்கே பளபளப்புடன் இருக்கும் ஆதி லிங்கத்தைத் தரிசிப்பதைக் காணலாம்.
கார்த்திகை பவுர்ணமிக்கு அடுத்த இரண்டு நாட்கள் புற்றில் சாற்றிய கவசத்தினை அகற்றி விடுவார்கள்.
அந்த நாட்களில் புற்றாகவே உள்ள மூர்த்தியை கண்டு தரிசிக்கலாம்.
சுவாமிக்கு ஆதிபுரீஸ்வரர், மாணிக்கத் தியாகர், தியாகேஸர், எழுத்தறியும் பெருமான் என்று பல பெயர்கள் பல உண்டு.
ஏலேலருக்கு மாணிக்கங்கள் அளிக்கப்பட்டதால் மாணிக்கத் தியாகர் என்ற பெயர் வந்தது.
அம்பாள் வடிவுடையம்மன், வடிவாம்பிகை என்ற பெயர்களுடன் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார்.
இங்கு விநாயகர், சுப்பிரமணியர், அறுபத்தி மூன்று நாயன்மார்கள், நால்வர் (அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்), சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.
பிரதோஷம், சிவராத்திரி, திருவாதிரை, வசந்தோற்சவம் மற்றும் மாசில மா பவுர்ணமி தீர்க்க விழாவையட்டி 10 நாட்கள் விழா நடைபெறும்.
ஒன்பதாம் நாள் மகிழடி சேவை பிரசித்தி பெற்றதாகும்.
பவுர்ணமி நாளன்று மேலூர் அம்பாளையும், ஒற்றியூர் வடிவாம்பிகையையும், திருமுல்லைவாயில் அம்பாளையும் தரிசித்தால் வாழ்வில் மேன்மை அடையலாம்.
சுக்கிர தசை, புக்தி நடைபெறுபவர்கள்இங்கு வழிபாடு செய்தால் மேலும் வளம் பெறலாம்.
சுக்கிர தோஷமுள்ளவர்கள் ப்ரீதி செய்து கொள்ளலாம்.
- ஆதிசேஷன் என்னும் நாகராஜன் ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்றான்.
- இங்கு ஈஸ்வரன் ஆலயத்தின் பிரகாரங்கள் முழுவதும் லிங்க வடிவமாக காட்சி தருகிறார்.
திருவொற்றியூர் கோவில்-படம் பக்க நாதர்
ஆதிசேஷன் என்னும் நாகராஜன் ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்றான்.
இந்த ஆலயத்திற்கு அந்த நாகராஜன் வந்து ஈசனை வணங்கி வரங்களைப் பெற்றான்.
அதனால் இங்குள்ள ஈஸ்வரனுக்கு படம் பக்க நாதர் என்ற மூலஸ்தானப் பெயரும் உண்டு.
இங்கு ஈஸ்வரன் ஆலயத்தின் பிரகாரங்கள் முழுவதும் லிங்க வடிவமாக காட்சி தருகிறார்.
இந்த ஆலயம் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுக்குத் தொண்டுகள் பல புரிந்து சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தினடியில் திருமணம் புரிந்து ஈசனின் அருளைப் பெற்ற சிறப்புமிக்க தலமாகும்.
இந்த ஆலயத்தில் பல நாயன்மார்களும், நால்வர்கள் மற்றும் அடியவர்களும் விஜயம் செய்து பாடல்களும், தொண்டுகளும் செய்து இறைவன் அருளைப் பெற்றனர்.
- பிரளயத்தை மேலே வராமல் தடுத்ததால் இந்த ஊர் ஒற்றியூர் எனப்படுகிறது.
- பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும்.
திருவொற்றியூருக்கு வாருங்கள்
சென்னையின் வடகிழக்கு பகுதியில் உள்ள திருவொற்றியூரில் சரித்திரப் புகழ்பெற்ற வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கோவில் உள்ளது.
பிரளயத்தை மேலே வராமல் தடுத்ததால் இந்த ஊர் ஒற்றியூர் எனப்படுகிறது.
அருணகிரிநாதர், பட்டினத்தார், ராமலிங்க சுவாமிகள், சுந்தரர், திருஞானசம்பந்தர், கம்பர் இன்னும் பல அடியவர்களால் பாடப் பெற்ற புகழ் கொண்டது இத்தலம்.
பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும்.
கலிய நாயனார், பெருமானார் தொண்டு செய்த தலமாகும்.
கலையழகும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான அழகிய சிற்பங்கள் கொண்டது.
சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட இந்த ஆலயம் பூலோகத்தில் உள்ள சிவலோகமாக போற்றப்படுகிறது.
"ஒற்றியூர் தொழ தொல்வினையும் ஓயும்" என்று தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்புடைய திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் ஈசனை வழிபட்டு புண்ணியத்தையும் பெற்று வரலாம்.
அதற்கு உங்களுக்கு உதவும் வகையில் மாலைமலர் இந்த தொகுப்பை தருகிறது.
இதில் வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பழமை சிறப்பு, ஆலய அமைப்பு சிறப்பு, சன்னதிகள் சிறப்பு மற்றும் வழிபாட்டு பலன்களை தொகுத்து கொடுத்துள்ளோம்.
படித்து, வழிபட்டு அருள்மிகு தியாகராஜரின் அருளையும், வடிவுடை அம்மனின் கருணையையும் பெற வாழ்த்துக்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்