search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2000 ரூபாய்"

    • வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
    • தற்போது வரை 2000 ரூபாய் நோட்டுகளில் 88 சதவீதம் திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தது. மே மாதம் 23-ம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். 2023 செப்டம்பர் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    இதற்கிடையே, அறிவிப்பு வெளியான நாளில் இருந்து புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 75 சதவீதம் திரும்ப பெறப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 88 சதவீதம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    ஜூலை 31-ம் தேதி வரை ரூ.3.14 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

    கடந்த 2018-19-ம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2,000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டு காலம் 4 முதல் 5 ஆண்டுகள் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
    • இன்னும் ரூ.84 ஆயிரம் கோடி, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது தொடர்பாக பல்வேறு கேள்விகளை சில எம்.பி.க்கள் கேட்டிருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

    2,000 ரூபாய் நோட்டுகளில் 89 சதவீதம் 17-க்கு முன்பு வெளியிடப்பட்டதால் அவற்றின் பயன்பாட்டு காலம் 4 முதல் 5 ஆண்டுகளே என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது.

    பின்னர் ரிசர்வ் வங்கி நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் இவற்றின் பரிவர்த்தனைக்கு இனி முன்னுரிமை அளிக்கத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டு கடந்த 19-5-2023 அன்றைய திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    மே 19-ம் தேதி ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பில் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த ஜூன் 30-ம் தேதி வரை ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.84 ஆயிரம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

    நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியை (செப்டம்பர் 30) நீட்டிப்பது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லு படியாகும்.
    • கரென்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் எளிதாக 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தலாம்.

    திருப்பூர் :

    2000ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்ப பெறும்அறிவிப்பு வெளியானதில் இருந்து பெட்ரோல் பங்க்குகள், ஷாப்பிங் மால்கள், மருந்துக்கடைகளில் இந்நோட்டுக்களை பெற்று க்கொள்ளாமல் திருப்பி அனுப்புவது தொடர்கிறது. செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லு படியாகும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து ள்ளதால் இந்நோட்டுக்களை மக்கள்அதுவரை பயன்படுத்தலாம்.ஆனால் அதற்கு முன்னதாகவே இந்நோட்டுகளை பெற்றுக்கொள்ளாமல் வர்த்தகர்களும், வியாபாரிகளும் மறுத்து வருகின்றனர். இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல் பங்க்குகளில் 2,000 ரூபாயை பெற்றுக்கொள்வதில்லை. 500 ரூபாய் நோட்டு க்களை மட்டும் பெற்றுக்கொ ள்கின்றனர்.அதே போல் சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங்மால்கள், மொத்த மளிகை வியாபாரிகள், மருந்துக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் பெற்றுக்கொள்வதில்லை. இதனால் இருக்கும் பணத்தை தேவைக்கு கூட செலவிட முடியாமல் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

    இது குறித்து வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது:- 2,000 ரூபாய் நோட்டு க்களை பெற்றுக்கொள்ள முடியாது என்று வாடி க்கையாளர்களை திரும்ப அனுப்பக்கூடாது. வர்த்தக ரீதியான கரென்ட் அக்கவு ன்ட் வைத்திரு ப்பவர்கள் எளிதாக 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தலாம். எந்த விளக்கமும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.ஆனாலும் பலர் இந்த விழிப்புணர்வு இல்லாமல் 2,000 ரூபாய் நோட்டை பெற்றுக்கொள்ள மறுப்பது தவறு. வியாபாரிகள், வர்த்த கர்கள் மக்களிடமிருந்து 2,000 ரூபாய் நோட்டு க்களை பெற்றுக்கொண்டு வர்த்தகத்தை மேற்கொள்ளலாம். அப்பணத்தை வங்கியிலும் செலுத்தலாம். எந்த பாதிப்புகளும் ஏற்படாது. இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.

    • 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பதுக்கி வைத்தவர்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்குதான் மதிப்பிழப்பால் பிரச்சனை.
    • டாஸ்மாக், கூட்டுறவுத்துறை, மின்சார பில் கட்டும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

    கோவை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கு தகுந்த நேரத்தில் பதவி உயர்வு கிடைப்பது இல்லை. குறிப்பாக கிரேட்-2 பதவியில் இருக்கும் காவல் துறையினருக்கு பதவி உயர்வு வராதது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரின் பதவி உயர்வுக்கான வழிமுறைகள் குறித்து முதலமைச்சரிடம் டி.ஜி.பி. பேச வேண்டும். இதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுவதில் பாதி தான் உண்மை. பாதி உண்மை இல்லை. புதுப்பிக்கத்தக்க மின்சக்தியில் நாம் பயனடைந்து வருகிறோம். இது மத்திய அரசின் கனவு.

    இதை தமிழக அரசு சரியாக உபயோகப்படுத்துவதில்லை. காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுப்பதிலும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். வீடுகளில் சோலார் பேனல் வைத்து இருப்பவர்களுக்கு மானியம் கொடுப்போம் என்று தி.மு.க. அரசு தெரிவித்தது. ஆனால் எத்தனை வீட்டிற்கு கொடுத்துள்ளார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் 22 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் சாராயம் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 75 சதவீதம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். 25 சதவீத டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்பட வேண்டும்.

    மேலும் கள் விற்பனையை தொடங்க வேண்டும். இதில் வருமானத்திற்கும் வழி உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் கள் மூலம் வருமானத்தை எப்படி ஈட்டி கொடுக்க முடியும் என்பது பாரதிய ஜனதாவின் வெள்ளை அறிக்கையில் உள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டை பதுக்கிவைத்தவர்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்குதான் மதிப்பிழப்பால் பிரச்சினை. டாஸ்மாக், கூட்டுறவுத்துறை, மின்சார பில் கட்டும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு தான் பாரதிய ஜனதாவுக்கு வந்தேன். பாராளுமன்ற தேர்தலில் தொண்டனாக வேலை செய்வேன். தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற வேலை செய்வேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இல்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
    • 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது.

    வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ம் தேதிவரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது.

    ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை, அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவை இல்லை என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

    ×