என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உற்பத்தியை"
- அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
- தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினி யோகம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி:
நாகர்கோவிலில் பால்வ ளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் விவசாயிகளிடம் இருந்து தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினி யோகம் செய்யப்படுகிறது.
தற்போது 45 லிட்டர் பால் கையாளும் வசதி உள்ளது. அதை இந்த ஆண்டு 70 லட்சமாக லிட்டராக உயர்த்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அமுல் நிறுவனம் வியாபார நோக்குடன் வருவதாகவும், அது ஆவினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஆவின் போல கேரளா, கர்நாடாவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படு கின்றன. தற்போது பால் உற்பத்தி பகுதி மீறல் வந்து விட கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
எனவே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம். தமிழகத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு தான் இன்சூ ரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனைத்து மாடுகளையும் இன்சூரன்ஸ் செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடக்கிறது.
செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை கண்டறிந்து அது செயல்படாததற்கான காரணத்தை அறிந்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அச்சப்பட வேண்டாம். பாதிப்பு ஏற்ப டும் என பயப்பட வேண் டாம்.
பால் உற்பத்தி நிறுவ னங்கள் கூட்டுறவு சட்டப் படி பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பால் உற்பத்தி பகுதியில் விதி மீறல் ஏற்பட கூடாது. தற்போது பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல் போல தெரிகிறது. எனவே தான் 2 விஷயங்களை கூறி முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
ஆவினை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்றுமதி தேவை அதிகமாக உள்ளது. பால் உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகள் கொடுக்கப்பட உள்ளன.
ஆவினில் வே புரோட்டின் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் பொருட்களின் எண்ணிக்கை அதிகாரிக்கவும், சுவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ளது. மேய்ச்சல் நிலத்தை கண்டறிந்து மேம்படுத்தி பச்சை புல் தயாரிக்கும் திட்டம் கெண்டு வர ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியை பெருக்க என்ன நடவடிக்கை தேவை என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை.
பொதுவாக ஒரு மாநி லத்தில் செயல்படுகிற சங்கம் மற்றொரு மாநிலத்தில் தலையிடுவது இல்லை.
அமுல் நிறுவனம் கொள் முதல் விலையை உயர்த்தி தருவதாக கூறுகிறார்கள். ஆனால் ஆவின் சார்பில் இன்ஸ்சூரன்ஸ் உள்பட பல்வேறு விஷயங்கள் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் பால் உற்பத்தி யாளர்களின் கோரிக்கை களை வருங்காலங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பால்வளத்துறை மூலம் மாடுகள் இனச்சேர்க் கைக்கு உயர்ரக மாடுகளின் விந்துவை சேகரித்து விந்து உறைவைப்பு நிலையம் முறையாக செயல்படுத் தப்பட்டு வருகிறது. நாட்டு இன மாடுகளில் தரமான மாடுகளை கண்டறிந்து அபிவிருத்தி செய்து இனப் பெருக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஓரிரு வாரங்களில் அனைத்து ஆவின் எந்தி ரங்களின் செயல்பாடுகளை ஆராய வேலை நடக்கிறது. அது முடிந்ததும் எந்த எந்திரங்களை மேம்படுத்த முடியும், மாற்றி அமைக்க முடியும் என்பது ஆராயப் படும். ஆவினில் பால் வாங்குவது பாதுகாப்பானது. ஆவின் தரத்துக்கு போட்டி யாக எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 30 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதா ரமாக கொண்டு உள்ளார்கள்.
- ஒரு கோடி 73 லட்சம் சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.
ஈரோடு,
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் விவசா யத்துக்கு அடுத்த படியாக ஜவுளி தொழிலில் விசை த்தறி தொழில் பெரும் பங்கு வகித்து வருகிறது. தமிழ கத்தில் 6 லட்சத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகளும் அதனை சார்ந்து நேரடியாக வும், மறைமுகமாகவும் 30 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதா ரமாக கொண்டு உள்ளார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக ஜவுளி தொழில் மிகவும் மோசமடைந்து குறிப்பாக நூல் விலை ஏற்றம், இறக்கம் காரணமாக விசைத்தறிகள் விற்பனைக்கு மற்றும் உடைக்கப்பட்டு இரும்பு வியாபாரத்திற்கும் சென்று கொண்டிருந்த தருவாயில் தமிழக அரசு நூல் விலை கட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசுக்கு வலியுறு த்தல் அதன் விளைவாக தற்போது நூல் விலை நிலையாக உள்ளது.
அதேபோல் செஸ்வரி போன்றவை விலக்கு மூலம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் பெரும் பயன் பெற்று வந்தார்கள்.
மேலும் விசைத்தறி யாளர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி, பள்ளி சீருடை உற்பத்தி போன்றவை தமிழகத்தில் உள்ள 225 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம் 63 ஆயி ரத்துக்கு மேற்பட்ட விசைத்தறி களின் மூலம் உற்பத்தி செய்து வரப்படுகிறது.
கடந்த ஆண்டு வேட்டி, சேலை வடிவத்தில் சில மாறுதல் செய்யும் கார ணத்தால் சற்று தாமதமாக உற்பத்தி தொடங்கி கடந்த மார்ச் மாதம் ஒரு கோடியே 77 லட்சம் வேட்டி மற்றும் ஒரு கோடி 73 லட்சம் சேலை உற்பத்தி செய்யப்பட்டு இதன் மூலம் பல விசைத்தறி உரிமையாளர்கள் தங்களு டைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தியும் அழிந்து வரும் விசைத்தறி தொழிலை மீட்டு அதன் பின் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களை கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதி கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றும் பொருட்டாக இலவச மின்சாரம் 750-ல் இருந்து 1000 யூனிட் ஆக வழங்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்ட ணத்தை கடந்த மார்ச் மாதம் பாதியாக குறைத்து விசை த்தறியாளர்களின் வாழ்வா தாரத்தில் விளக்கேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
வேட்டி, சேலை உற்பத்தி முடிந்த பின் பள்ளிச் சீருடை விற்பனை உற்பத்தி தொடங்கும். அதேபோல் இந்த வருடம் விசைத்தறியில் உற்பத்தி செய்ய கேஸ்மட் ரகம் மட்டும் 59,63077 மீட்டர்கள் வந்துள்ளது. இந்த உற்பத்தி என்பது விசைத்தறியாளர்கள் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்து விடுவார்கள்.பின் ஜூன் மாதத்தில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படும்.
எனவே தமிழக முதல்- அமைச்சர் 2023-24-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்தை ஜூன் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் முடித்து தரும் வகையில் மே மாத இறுதி க்குள் உற்பத்தி தொடக்கம் தொடர்பாக அரசாணை அறிவித்து அதன் பின் உற்பத்தி தொடர்பான நூல் டெண்டர், சைசிங் டெண்டர் போன்றவற்றை நிறைவு செய்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் உள்ள 225 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விசைத்தறி யாளர்களுக்கு உற்பத்தி ஆணை வழங்கி போர்க்கால அடிப்படையில் உற்பத்தியை தொடங்க தாங்கள் ஆணை பிறப்பித்து வாழ்வா தாரத்தை மேம்படுத்த பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்