என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டெல்லி மகளிர் ஆணையம்"
- மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்களுக்கு நடந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
- சுவாதி மலிவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இம்பால் :
மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவரிடம் அந்த பெண்கள், அரசு சார்பில் யாரும் தங்களை சந்திக்கவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய சுவாதி மலிவால், "முதல்-மந்திரி பைரன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களை அவர் ஏன் சந்திக்கவில்லை. நான் டெல்லியில் இருந்து வந்து அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) சந்திக்க முடியுமானால், அவரால் ஏன் முடியாது?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
- மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சனை குறித்து முதல்வருடன் விவாதிக்க உள்ளதாக கடிதம்.
- பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்.
புதுடெல்லி:
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசவும் தீர்மானித்திருந்தார். ஆனால் அவரது பயணத்துக்கு மணிப்பூர் அரசு அனுமதி மறுத்துள்ளது. அவரது பயணத்தை தள்ளிவைக்கும்படி கேட்டுக்கொண்டது. எனினும் ஸ்வாதி மாலிவால் திட்டமிட்டபடி இன்று மதியம் மணிப்பூருக்கு புறப்பட்டார்.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அவரை இன்று சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாகவும் ஸ்வாதி மாலிவால் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான பிரச்சனையை விவாதிக்க உங்களை அவசரமாகச் சந்திக்க விரும்புகிறேன். மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையில் இருந்து தப்பிக்க பல மணிப்பூரி பெண்கள் டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்களின் நலன் தொடர்பான பிரச்சனைகளையும் உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன். எனவே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட ஆதரவு அளிக்க வேண்டும் என ஸ்வாதி மாலிவால் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- கில்லின் சகோதரியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது டெல்லி மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
- சுப்மன் கில்லின் சகோதரியை அவமானப்படுத்துவது மிகவும் வெட்கக்கேடானது.
புதுடெல்லி:
ஐபிஎல்-2023 இன் கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. கடைசி ஓவரில் ஏற்பட்ட இந்த தோல்வியுடன், நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பயணம் முடிவுக்கு வந்தது. குஜராத்தின் வெற்றியின் பலன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு கிடைத்தது. குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
பெங்களூர் பிளே ஆப்பில் இருந்து வெளியேறியவுடன், சமூக ஊடகங்களில் சுப்மான் கில் மற்றும் அவரது சகோதரியை டிரோல் செய்யத் தொடங்கினர். இதில், தங்களை ஆர்சிபி மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ரசிகர்கள் என வர்ணித்தவர்களும் இடம் பெற்றனர்.
கில்லின் சகோதரி ஷஹனீல் கில் குறித்து சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இப்போது டெல்லி மகளிர் ஆணையத்தின் (டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால் இதுபோன்ற டிரோலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி உள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து சதம் அடித்தார். இதைத் தொடர்ந்து, சிலர் அவரது சகோதரிக்கு எதிராக தவறான கருத்துக்களை தெரிவித்தனர். இப்போது டெல்லி மகளிர் ஆணையம் இதுபோன்ற டிரோலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.
சுவாதி மாலிவால் பல டுவீட்களின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார். கில்லின் சகோதரியை துஷ்பிரயோகம் செய்பவர்களை ஒரு போதும் விட்டுவைக்க முடியாது என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். சுப்மான் கில்லின் சகோதரியை அவமானப்படுத்துவது மிகவும் வெட்கக்கேடானது. முன்னதாக, விராட் கோலியின் மகளை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம்.
கில்லின் சகோதரியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது டெல்லி மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என கூறி உள்ளார்.
கில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் உட்பட 680 ரன்கள் குவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்