search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிண்டி பல்நோக்கு மருத்துவமனை"

    • இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்து ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது.
    • அனைத்து மருத்துவமனைகளுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தையும் அறிவித்தது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    இதுதவிர, மருத்துவமனைகளில் தேவையான வெளிச்சம், மற்றும் விளக்குகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால், மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என ஐ.ஜி.-க்கள், காவல் ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அனைத்து மருத்துவமனைகளுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இத்துடன் சென்னையில் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள காவல் ஐ.ஜி.க்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    • மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்திய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, விக்னேஷ் கத்தியால் தாக்கியதில், தலை, கழுத்த, காது, முதுகு உள்ளிட்ட இடங்களில் மருத்துவர் படுகாயம் அடைந்ததை அடுத்து, அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார்.

    அப்போது, மருத்துவர் பாலாஜியின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    • கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • விரிவான விசாரணை நடத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.

    சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது. விக்னேஷ் என்ற நபர் மருத்துவர் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜிக்கு அனைத்து சிகிச்சைகளை வழங்கவும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், மருத்துவரை தாக்கிய விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுவது உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் கிண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர் விசாரணை நடைபெறுகிறது.

    அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    • விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம்.

    சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது. விக்னேஷ் என்ற நபர் மருத்துவர் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

    அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது."

    "சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது."

    "உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்."

    "காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்."

    "தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கும் பணியின்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கொல்கத்தா ஆர்.ஜி. கெர் மருத்துவமனை சம்பவத்திற்கு பிறகு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சையை தவிர்த்த மற்ற சிகிக்சைகள் அளிக்க மறுத்துவிட்டனர்.

    பிறகு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் போரட்டம் நடத்திய மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதிலும் டாக்டர்கள் கலைந்த செல்ல மறுத்துவிட்டர்.

    13 கோரிக்கைகளை வலிறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அரசு மருத்துவ சங்கத்தினருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை 4 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, துறை செயலாளர் சுப்ரியா சாகு, மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மேலும், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மருத்துவ அலுவலர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து மருத்துவ சங்கங்களுடன் ஆலோசனை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    • விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
    • காலை 10 மணிக்கு சென்ற எனக்கு மாலை வரை சிகிச்சை அளிக்கவில்லை.

    சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது. விக்னேஷ் என்ற நபர் மருத்துவர் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில், மருத்துவரை தாக்கிய விக்னேஷின் தாய் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எனக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை பெற்றேன். மருத்துவர் பாலாஜியை சந்தித்து சிகிச்சை பெற்று வந்தேன். கடந்த மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சிகிச்சை பெற்ரேன். யார் மருத்துவர் என கேட்டு மரியாதை குறைவாக பேசுவார். காலை 10 மணிக்கு சென்ற எனக்கு மாலை வரை சிகிச்சை அளிக்கவில்லை."

    "தனியார் மருத்துவமனையில் என்னை காப்பாற்ற முடியாது என கூறிவிட்டனர். சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று நான் குறை கூறவில்லை. 25 ஆண்டு அனுபவம் உள்ள மருத்துவர் என் உடலில் என்ன பிரச்சினை என்பதை ஏன் கண்டுபிடிக்கவில்லை. உரிய ஸ்கேன் ரிப்போர்ட் இருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லையா."

    "தனியார் மருத்துவமனையில் வைத்து என்னை பார்த்துக் கொள்ள எனது மகன் மிகவும் சிரமம்பட்டான். நான் பிழைப்பது கஷ்டம் என கூறியதால் என் மகன் மன உளைச்சலில் இருந்தான். என்னை மிகவும் கஷ்டமான நிலையில் பார்த்ததால் இப்படி செய்தானா என்று தெரியவில்லை. என் மகன் நேரடியாக கத்தியால் குத்தினான், ஆனால் 25 ஆண்டு அனுபவம் உள்ள மருத்துவர் என் நுரையீரலை எடுத்துவிட்டார்."

    "எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் மகன் தாங்க மாட்டான். என்னை இழந்ததை பற்றி நான் யோசிக்கவில்லை. நான் பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு அளித்த சிகிச்சைகளை மருத்துவர் முறையாக கவனிக்கவில்லை. எனது மகன் செய்தது சரி என்று நான் கூறவில்லை. மருத்துவர் பாலாஜி மீது கடும் கோபம் உள்ளது. மருத்துவர் பாலாஜி என்னை ஆங்கிலத்தில் திட்டுவார்," என்று தெரிவித்தார். 

    • மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி மீது கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தில் விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    தனது தாய்க்கு, முறையாக சிகிச்சை அளிக்காதது குறித்து மருத்துவரிடம் கேட்டேன். ஜனவரி மாதம் முதல் தனது தாய்க்கு மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சைக்கு சென்றேன்.

    என் தாயக்கு கீமோ சிகிச்சை அளித்து வந்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிக்குக்கு சென்றபோது தாயின் உடல் நிலை தேறியது.

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஒவ்வொறு முறையும் 20 ஆயிரம் வரை செலவானது. மருத்துவ செலவுக்கான பணத்தை தருமாறு மருத்துவர் பாலாஜியிடம் கேட்டேன்.

    அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. மருத்துவர் என்னை திட்டி கீழே தள்ளினார். ஆத்திரத்தில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து குத்தினேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டவில்லை.
    • திறப்பு விழாவிற்கு வர விடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர்.

    சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன. இங்கு இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.

    இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைத்தார்.

    பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    மறைந்த பின்னும் தமிழ் சமுதாயத்திற்காக பயன்படுபவர் தான் கருணாநிதி.

    15 மாதங்களில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஒரு செங்கல் கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டவில்லை.

    கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு உயர் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

    ஏழை எளிய மக்களின் மருத்துவராக இருந்தவர் கருணாநிதி.

    திறப்பு விழாவிற்கு வர விடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர்.

    மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. நாட்டிற்கே பல முன்மாதிரியான திட்டங்களை திமுக கொண்டு வந்துள்ளது. எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

    மக்களை தேடி மருத்துவம் மூலம் 1.46 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இருசக்கர அவசர ஊர்தி, பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்தி என பல்வேறு திட்டங்கள் உள்ளது.

    கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்.

    வேலூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தங்கும் விடுதி கட்டப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன.
    • இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

    சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன.

    இங்கு இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

    மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.

    இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கையுடன் உயர் சிறப்பு மருத்துவமனை
    • 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ''கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வெளியிட்டு, அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'!'' என பதிவிட்டுள்ளார்.

    சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன. மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று மாலை 6 மணிக்கு திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழை வெளியிட்டு இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.

    • கடந்த 5-ந்தேதியே மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.
    • வருகிற 15-ந்தேதி கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன.

    மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.

    இந்த நிலையில், வருகிற 15-ந்தேதி கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த வாரம் தெலுங்கானா செல்வது மட்டுமே இறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
    • நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    4.89 ஏக்கர் நிலத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டிட மான 'ஏ' பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்ப ளவில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாகக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    'பி' பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்ட ரில் அறுவை சிகிச்சை வளாகம், தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது.

    மூன்றாவது கட்டிடமான 'சி' பிளாக்கில் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கருவிகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 5-ந் தேதி அந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அரசு சார்பில் அச்சிடப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

    இந்நிலையில், திட்டமிட்ட தேதியில் ஜனாதிபதியின் சென்னை வருகை ரத்தாகி உள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத் திறப்பு விழாவை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்ததையடுத்து ஜனாதிபதியின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜூன் முதல் வாரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற் கொள்கிறார். எனவே, மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் அந்த விழா ஒத்திவைக்கப் பட்டு, ஜூலை முதல் வாரத்துக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    ×