search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன.
    • இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

    சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன.

    இங்கு இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

    மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.

    இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைத்தார்.

    Next Story
    ×