என் மலர்
நீங்கள் தேடியது "பார்களுக்கு சீல்"
- அபராத கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்து அனுமதி வழங்கப்படும்.
- 15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 202 ரெஸ்டோ பார்கள் உட்பட மொத்தம் 396 சில்லரை மதுபான கடைகள் இயங்கி வருகிறது.
இந்த மதுபான கடைகள் இயங்குவதற்கு கலால் துறை சார்பில் ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரை உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு மதுக்கடையும் ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த நிதி ஆண்டிற்கு முதல் நிதி ஆண்டான மார்ச் 31-ந் தேதிக்குள் ரூ.6 லட்சத்தை செலுத்தி உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.
புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்த முள்ள 396 சில்லரை மதுபானக் கடைகளில் 381 கடைகள் உரிமத்தை புதுப்பித்தன. உரிமம் புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 மதுபான கடைகளுக்கு கலால் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 15 கடைகளும் உரிமத்தை புதுப்பிக்க வில்லை.
இதையடுத்து கலால் உதவி ஆணையர் மேத்யூஸ் பிராங்ளின் உத்தரவின் பேரில் தாசில்தார் ராஜேஸ்கண்ணன் தலைமையிலான ஊழியர்கள் உரிமத்தை புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக 'சீல்' வைத்தனர்.
இந்த கடைகள் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் ரூ.6 லட்சத்துடன் 10 சதவீதம் அபராத கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்த பின் திறக்க அனுமதி வழங்கப்படும்.
- வாடிப்பட்டியில் அனுமதியின்றி இயங்கிய பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
- சமயநல்லூர், சிக்கந்தர்சாவடியில் தலா ஒரு பாரும் பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தாதம்பட்டி நீரேத்தான் மதுபான கடை அருகில் அனுமதியின்றி செயல்பட்ட 2 மதுபான பார்களும், சமயநல்லூர், சிக்கந்தர்சாவடியில் தலா ஒரு பாரும் பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த பணியில் மதுரை தெற்கு கோட்ட கலால் தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் முகைதீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயராஜ், சிவலிங்கம் மற்றும் கிராம உதவியாளர்கள் ஈடுபட்டனர். திடீரென்று அதிகாரிகள் சீல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் அந்தந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
- கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுவர் களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
- தணிக்கையின்போது அனுமதியற்ற பார்கள் நடைபெறுகிறதா? மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.
நாமக்கல்:
கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக, காவல் துறை, வருவாய்த் துறை, டாஸ்மாக், கலால்துறை, சுகாதாரத்துறை அலுவலர் களைக் கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுவர் களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தணிக்கையின்போது அனுமதியற்ற பார்கள் நடைபெறுகிறதா? மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.
கள்ளசாராயம் மற்றும் வெளிமாநில மதுவகைகள் எதுவும் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், சாலையோர கடைகள் மற்றும் தாபாக்களில் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
சில்லரை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களில் எக்சைஸ் லேபிள் மற்றும் பில்கள் உடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.
மேலும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கொக்கராயன்பேட்டை, கரிச்சிப்பாளையம், நாமக்கல் (2 கடைகள்), பவுத்திரம், நாமகிரிப் பேட்டை, மொளசி மற்றும் நெ.3. குமாரபாளையம் ஆகிய கடை பணியாளர் களிடம் டாஸ்மாக் நிறுவன விதிகளின்படி ரூ.70,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிக விலை வைத்து விற்பனை செய்த டாஸ்மாக் கடை பணியாளர்கள் ஆனந்தன், சுரேஷ்குமார் ஆகியோர் வேறு கடைகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மொளசி டாஸ்மாக் கடையில் பணி புரிந்து வரும் மாணிக்கம் என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
பாரில் காலை நேரங்களில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்ததை கண்டறிந்து, அதனை கண்காணிக்கத் தவறிய மேற்பார்வையாளர் வெங்கடாசலம் என்பவர் இடமாறுதல் செய்யப்பட் டுள்ளார்.
கடையின் வேலை நேரமான பகல் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபான கடைகள் மற்றும் பார்கள் இயங்குகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மதுபான கடைக்கு அருகில் செயல்பட்ட 36 அனுமதியற்ற பார்கள், 18 பெட்டிக்கடைகள் மற்றும் தள்ளு வண்டிகள் போன்றவை கண்டறிப் பட்டு, பூட்டி சீலிடப்பட்டுள் ளது. கள்ளத்தனமாக மதுவகைகள் விற்பனை செய்த 17 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் 88383 52334 என்ற செல்போன் எண்ணிற்கு நேரடியாகவும், வாட்சப் மூலமாகவும் பொதமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். இதன் அடிப்படையில் இதுவரை 11 புகார்கள் பெற்றப்பட்டு 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் காவல் உதவி ஆய்வாளர் ராஜூ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.