search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேபாள பிரதமர்"

    • நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி.சர்மா ஒலி பதவியேற்றார்.
    • பிரதிநிதிகள் சபையில் 30 நாளுக்குள் நேபாள பிரதமர் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

    காத்மண்டு:

    நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

    அதன்பின் கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றதால், நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசந்தா நீடித்தார். சில வாரங்களுக்கு முன் நேபாளத்தின் மிகப் பெரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன்-யுஎம்எல் இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைக்க ஒப்புக் கொண்டதால், பிரதமர் பிரசந்தா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை நேபாள பிரதிநிதிகள் சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா தோல்வி அடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. எதிராக 194 வாக்குகள் பதிவாகின.

    இதையடுத்து, நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒலி சமீபத்தில் பதவியேற்றார். நேபாள அரசியலமைப்பு விதியின்படி, பிரதிநிதிகள் சபையில் 30 நாளுக்குள் பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது கூட்டணி அமைத்துள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் 167 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால் சர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, நேபாள பாராளுமன்றத்தில் பிரதமர் சர்மா ஒலி அரசு மீது ஜூலை 21-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேபாள பிரதிநிதிகள் சபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் சர்மா ஒலி வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக 188 வாக்குகள் கிடைத்தன. எதிராக 74 வாக்குகள் பதிவாகின. மூன்றில் இரு பங்கு வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார் சர்மா ஒலி.

    • நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார்.
    • பிரதிநிதிகள் சபையில் 30 நாளுக்குள் நேபாள பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    காத்மண்டு:

    நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

    அதன்பின் கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றதால், நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசந்தா நீடித்தார்.

    இதற்கிடையே, சில வாரங்களுக்கு முன் நேபாளத்தின் மிகப் பெரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன்-யுஎம்எல் இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைக்க ஒப்புக் கொண்டதால், பிரதமர் பிரசந்தா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை நேபாள பிரதிநிதிகள் சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா தோல்வி அடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. எதிராக 194 வாக்குகள் பதிவாகின.

    இதையடுத்து, நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒலி சமீபத்தில் பதவியேற்றார். நேபாள அரசியலமைப்பு விதியின்படி, பிரதிநிதிகள் சபையில் 30 நாளுக்குள் பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது கூட்டணி அமைத்துள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் 167 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால் சர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், நேபாள பாராளுமன்றத்தில் பிரதமர் சர்மா ஒலி அரசு மீது ஜூலை 21-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கே.பி.சர்மா ஒலிக்கு நேபாள குடியரசுத் தலைவர் ராம் சந்திரா நாளை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
    • மூன்றாவது முறையாக நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்கவுள்ளார்.

    காத்மண்டு:

    நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

    அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.

    தொடர்ந்து ஏற்பட்ட கூட்டணி மாற்றத்தால் பிரதமர் பிரசந்தா 4 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றார்.

    இதற்கிடையே, நேபாளத்தில் ஜூலை 12-ம் தேதி ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி பிரதமர் பிரசந்தா பாராளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதினார்.

    இந்நிலையில், நேபாள பிரதிநிதிகள் சபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் பிரசந்தா தோல்வி அடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. அவருக்கு எதிராக 194 வாக்குகள் பதிவாகின.

    இதனையடுத்து, நேபாள நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கே.பி.சர்மா ஒலிக்கு நேபாள குடியரசுத் தலைவர் ராம் சந்திரா நாளை 11 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    கே.பி.சர்மா ஒலி நேபாளத்தின் பிரதமராக 2015 அக்டோபர் 11, முதல் 2016 ஆகஸ்ட் 3, வரையிலும் பின்னர் 2018 பிப்ரவரி 5, முதல் 2021 ஜூலை 13, வரையிலும் பணியாற்றினார். இப்போது மூன்றாவது முறையாக நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்கவுள்ளார்.

    • நேபாளத்தில் 5-வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் பிரதமர் பிரசந்தா.
    • இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா தோல்வி அடைந்தார்.

    காத்மண்டு:

    நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

    அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.

    தொடர்ந்து ஏற்பட்ட கூட்டணி மாற்றத்தால் பிரதமர் பிரசந்தா 4 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றார்.

    இதற்கிடையே, நேபாளத்தில் ஜூலை 12-ம் தேதி ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி பிரதமர் பிரசந்தா பாராளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதினார்.

    இந்நிலையில், நேபாள பிரதிநிதிகள் சபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் பிரசந்தா தோல்வி அடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. அவருக்கு எதிராக 194 வாக்குகள் பதிவாகின.

    இதைத்தொடர்ந்து, நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும் புதிய கூட்டணி அரசில் கே.பி.சர்மா ஒலி பிரதமராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரசந்தா பிரதமரான பின் பாராளுமன்றத்தில் நடத்தப்படும் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேபாள பிரதமராக இருக்கும் புஷ்பா கமல் தாஹல் பிரசந்தாவுக்கு ஒலி ஆதரவு வழங்க மறுப்பு.
    • நேபாள காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்பந்தம்.

    நேபாள பிரதமராக இருக்கும் புஷ்பா கமல் தாஹல் பிரசந்தாவின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேபாள காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்- யுஎம்எல் கட்சியும் தற்போது புதிய கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளதுதான் இதற்கு காரணம்.

    நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷெர் பகதூர் தெயுபா கம்யூனிஸ்ட் கட்சியான நேபாளம் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) கட்சியுடன் ஒருங்கிணைந்து தேசிய ஒருமித்த அரசாங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

    இதனால் பிரசண்டா ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    நேபாள காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் 89 இடங்களும் பெரிய கட்சியாக விளங்குகிறது CPN-UML-க்கு 78 இடங்கள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 138 இடங்கள் தேவை. ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் 167 இடங்கள் உள்ளன.

    தெயுமா (78 இடங்கள்), ஒலி (72) ஆகியோர் பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்வதாக முதலில் தெரிவித்தனர். பிரதமர் பிரசண்டா மற்றும் CPN-UML தலைவர் ஒலிக்கும் இடையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிரதமர் பிரசண்டாவின் கம்யூனிஸ்ட் கட்சி (Maoist Centre) செயலாளர் கணேஷ் ஷா இதுகுறித்து கூறுகையில் "கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க சதி செய்யப்படுகிறது. அரசு ஊழலுக்கு முடிவு கட்டி, நல்லாட்சியை அறிமுகப்படுத்தியபோது இந்த சதி நடைபெற்றுள்ளது" என்றார்.

    பிரசண்டா தனது ஒன்றரை ஆண்டு பதவி காலத்தின்போது பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    நேபாளம் பாராளுமன்ற அரசியலமைப்பின்படி, பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர 30 நாட்கள் வரை கேட்க முடியும். இதனால் பிரசண்டாவிற்கு அரசியல் சூழ்சியை மேற்கொள்ள காலஅவகாசம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    • ஆளுங்கட்சி உடைந்து பிரசந்தா தலைமையிலான ஆட்சி கவிழும் வாய்ப்பு நிலவியது.
    • ஒரு வாக்கு வித்தியாசத்தில் நேபாள பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் பிரதமர் புஷ்பா கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டதன் காரணமாக துணை பிரதமராக பதவி வகித்து வந்த கூட்டணி கட்சி தலைவர் உபேந்திரா யாதவ் திடீரென ராஜினாமா செய்தார். மேலும் தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சியையும் தொடங்கினார்.

    இதனால் ஆளுங்கட்சி உடைந்து பிரசந்தா தலைமையிலான ஆட்சி கவிழும் வாய்ப்பு நிலவியது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெற்றி பேற வேண்டிய கட்டாயத்தில் பிரசந்தாவின் ஆட்சி அமைந்தது. இந்தநிலையில் நேற்று நேபாள நாடாளுமன்றத்தில் பிரசந்தா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஒரு வாக்கு வித்தியாசத்தில் நேபாள பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.

    • பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் நேற்று சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் ஒப்பந்தம்.

    நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவருடன் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் நேற்று சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பேச்சுவார்த்தையை தொடர்ந்து, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் இருநாடுகளுக்கிடையே 7 ஒப்பந்தங்களில் கையெழுத்தாகின.

    இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, " நாங்கள் இரு தரப்பு உறவை இமாலய உயரத்துக்கு எடுத்துச்செல்வதற்கு தொடர்ந்து பாடுபடுவோம். இதே உணர்வுடன் நாங்கள், அது எல்லைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பிற பிரச்சினைகளாக இருந்தாலும் சரி எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம்.

    கலாசார, ஆன்மிக உறவுகளை மேலும் பலப்படுத்தும் விதத்தில், பிரதமர் பிரசண்டாவும் நானும் ராமாயண சுற்று தொடர்பான திட்டங்களை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை பிரசந்தா சந்தித்து பேசுகிறார்.
    • நேபாள பிரதமர் கடந்த ஆண்டு டிசம்பரில் பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    புதுடெல்லி:

    நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடன் உயர்மட்டக் குழுவினரும் வருகின்றனர்.

    இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை பிரசந்தா சந்தித்துப் பேச உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உஜ்ஜைன் மற்றும் இந்தூருக்கும் செல்கிறார்.

    பிரசந்தா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை பிரசந்தா சந்தித்து பேச உள்ளார்.
    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    புதுடெல்லி:

    நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, அரசுமுறை பயணமாக வரும் 31ம் தேதி இந்தியா வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் நான்கு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடன் உயர்மட்டக் குழுவினரும் வருகின்றனர்.

    இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை பிரசந்தா சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உஜ்ஜைன் மற்றும் இந்தூருக்கும் செல்கிறார்.

    பிரசந்தா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    ×