என் மலர்
நீங்கள் தேடியது "பெண் ரசிகை"
- போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
- மேலும் சிலர் போலீசாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று நடைபெற இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இன்று மீண்டும் ஆட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் மைதானத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். அப்போது பெண் ரசிகை ஒருவர் தனக்கு அருகில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை தாக்கினார்.
அவர் கீழே விழுந்து மீண்டும் எழுந்தபோதும் அந்த பெண் மறுபடியும் தாக்கினார். ஆனால் அந்த அதிகாரி எதிர்த்து ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார். இந்த சண்டை ஏன் நடந்தது என்பது குறித்த சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
Shameless fanbase. #IPL2023 #GTvCSK pic.twitter.com/RVjSkYKppp
— Mayur (@133_AT_Hobart) May 28, 2023
போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர். போலீசாரிடம் உடலை சுத்தப்படுத்தியதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் போலீசாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.
- 4 போட்டி கொண்ட டி20 தொடரில் 2-0 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது.
லண்டன்:
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது.
4-வது டி20 போட்டி நடைபெற்ற நேற்று முன்தினம் பாகிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கானை பெண் ரசிகை ஒருவர் சந்தித்து அவரது பார்ம் குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பான உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது ஷதாப் கான் ரசிகர்களுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது ஒரு பெண் ரசிகர், ஷதாப் கானிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். நீங்கள் ஏன் இவ்வளவு சிக்சர்களை விட்டுக் கொடுக்கிறீர்கள்? நீங்கள் மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டும். அதிக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என வற்புறுத்தினார்.
பெண் ரசிகையின் கேள்விக்கு ஷதாப் கான் மௌனமாக புன்னகைத்தார். இந்த உரையாடல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் விரைவாக பரவியது.
- விஜய்யின் நடிப்பு, நடனம், வசனம் என அனைத்தும் வள்ளியம்மாளை கவர்ந்துள்ளது.
- ஒவ்வொரு படத்திலும் விஜய்யை ரசித்து வந்த வள்ளியம்மாள் ஒரு கட்டத்தில் விஜய்யை தனது மகனாகவே பாவித்து வருகிறார்.
வி.கே.புரம்:
நடிகர் விஜய்க்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் விஜய்யின் தீவிர ரசிகையாக மட்டுமின்றி, விஜயை தனது மகனாகவே பாவித்து வாழ்ந்து வருகிறார்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 65). இவருக்கு வெங்கடேசன் என்ற ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார்.
கணவரை இழந்த நிலையில் வள்ளியம்மாள் தனது மகனுடன் மன்னார்கோவில் கிராமத்தில் வசித்து வருகிறார். வள்ளியம்மாள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறார்.
விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு கடந்த 1992-ம் ஆண்டு வெளியானது. அப்படத்தை பார்த்த வள்ளியம்மாள் அன்று முதல் விஜய்யின் நடிப்பு பிடித்து அவரது ரசிகையாக மாறினார்.
1993-ம் ஆண்டு வெளியான செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் இணைந்து நடித்திருப்பார். அந்தப் படத்தையும் திரையில் பார்த்த வள்ளியம்மாள் விஜய்யின் தீவிர ரசிகையாக மாறத் தொடங்கினார். அன்று முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களை ஒன்று விடாமல் தியேட்டரில் சென்று பார்த்து வந்துள்ளார்.
விஜய்யின் திரைப்படம் ஒரு தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடுகிறதோ, அதுவரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வள்ளியம்மாள் தவறாமல் அந்த படத்தை பார்த்து வருகிறாராம்.
விஜய்யின் நடிப்பு, நடனம், வசனம் என அனைத்தும் வள்ளியம்மாளை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு படத்திலும் விஜய்யை ரசித்து வந்த வள்ளியம்மாள் ஒரு கட்டத்தில் விஜய்யை தனது மகனாகவே பாவித்து வருகிறார்.
கடந்த பல ஆண்டுகளாகவே வள்ளியம்மாள் ஊருக்குள் தனக்கு விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 2 மகன் அதில் நடிகர் விஜய் தான் எனக்கு மூத்த மகன் என்று கூறி வருகிறார். இதன் காரணமாகவே ஊருக்குள் வள்ளியம்மாள் பாட்டியை விஜய் வள்ளியம்மாள் என்று அழைத்து வருகின்றனர்.
விஜய்யின் நினைவாக வள்ளியம்மாள் பாட்டி வீட்டில் ஆங்காங்கே விஜய் நடித்த படங்களின் புகைப்படங்கள் மற்றும் விஜய் தனது மனைவியுடன் இருக்கும் படங்களை பிரேம் செய்து மாட்டி வைத்துள்ளார்.
தனது வீட்டு பீரோவில் விஜய்யின் புகைப்படம் மற்றும் அவர் குறித்த செய்திகளை பத்திரப்படுத்தி வருகிறார். விஜய் மீது தீராத அன்பை வள்ளியம்மாள் பாட்டி செலுத்தி வருகிறார்.
வள்ளியம்மாள் கூறும் போது, நடிகர் விஜய் தான் எனக்கு தலைமகன். செந்தூரபாண்டி படம் பார்த்ததில் இருந்து விஜய்யை பார்க்க வேண்டும் என்பது தான் எனது வாழ்நாள் ஆசை.
விஜய் வரலாறு புத்தகம் மூலம் அவர் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துள்ளேன். சினிமாவை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்தது வருத்தம் தான். இருந்தாலும் அவர் அரசியலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். முதலமைச்சரோடு நின்று விடாமல் பிரதமராக வேண்டும் என்பது எனது ஆசை என்றார்.